தீப்பிடிப்பு பிரச்சனைகளுக்கு மத்தியில்... புதிய மெகா தொழிற்சாலையை நிறுவும் ஒகினவா!!

ஒகினவா நிறுவனத்தின் புதிய மெகா தொழிற்சாலை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தீப்பிடிப்பு பிரச்சனைகளுக்கு மத்தியில்... புதிய மெகா தொழிற்சாலையை நிறுவும் ஒகினவா!!

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஒகினவா ஆட்டோடெக் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த 2022 மே மாதத்தில் 9,309 யூனிட் வாகனங்களை விற்பனை செய்துள்ள ஒகினவா அதன் பிராண்ட் விரிவாக்க திட்டங்களை அறிவித்துள்ளது.

தீப்பிடிப்பு பிரச்சனைகளுக்கு மத்தியில்... புதிய மெகா தொழிற்சாலையை நிறுவும் ஒகினவா!!

இதன்படி, அதன் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு தொடர்ந்து அதிகரித்துவரும் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு மெகா தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவ ஒகினவா முடிவு செய்துள்ளது. ஒகினவா ஆட்டோடெக்கிற்கு ஏற்கனவே உள்நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் இரு தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றை காட்டிலும் அளவில் பெரியதாக 3வது தொழிற்சாலையாக வரும் புதிய மெகா தொழிற்சாலை சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் கட்டமைக்கப்பட உள்ளது.

தீப்பிடிப்பு பிரச்சனைகளுக்கு மத்தியில்... புதிய மெகா தொழிற்சாலையை நிறுவும் ஒகினவா!!

ஒகினவாவின் இரண்டாவது தொழிற்சாலை நடப்பு 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் ராஜஸ்தானின் பிவாடி பகுதியில் திறக்கப்பட்டது. இது வருடத்திற்கு 3 லட்ச எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு திறன் கொண்டதாக உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இதனை காட்டிலும் அளவில் பெரியதாக கட்டமைக்கப்படும் புதிய மெகா தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 5,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

தீப்பிடிப்பு பிரச்சனைகளுக்கு மத்தியில்... புதிய மெகா தொழிற்சாலையை நிறுவும் ஒகினவா!!

இதன் மூலமாக ஒகினவா நிறுவனத்தில் மட்டுமின்றி, மொத்த இந்தியாவிலும் பெரிய அளவிலான ஒருங்கிணைக்கப்பட்ட எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக இது விளங்கவுள்ளது. மொத்தம் ரூ.500 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் ஒகினவாவின் புதிய மெகா தொழிற்சாலை முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு அடுத்த 2023 அக்டோபர் மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீப்பிடிப்பு பிரச்சனைகளுக்கு மத்தியில்... புதிய மெகா தொழிற்சாலையை நிறுவும் ஒகினவா!!

5,000 தொழிலாளர்கள் என்பது சற்று குறைவாக தோன்றலாம். ஏனெனில் ஒகினவாவின் புதிய தொழிற்சாலை பெரும்பான்மையாக தன்னிச்சையாக இயங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட உள்ளது. அதாவது, எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மற்றும் உடல் பிளாஸ்டிக் பேனல்களை உருவாக்குவது & அவற்றை பெயிண்ட் செய்வது உள்ளிட்டவை யாவும் எந்திரங்கள் மூலமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

தீப்பிடிப்பு பிரச்சனைகளுக்கு மத்தியில்... புதிய மெகா தொழிற்சாலையை நிறுவும் ஒகினவா!!

மேலும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் கண்ட்ரோலர்களை ஒகினவா நிறுவனமே சொந்தமாக இந்த தொழிற்சாலையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டு & வெளிநாட்டு சந்தைகளுக்கு புதிய புதிய தயாரிப்புகளை கொண்டுவர, புதிய மெகா தொழிற்சாலையின் வாயிலாக ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு வசதிகளையும் மேம்படுத்தி கொள்ள ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் முனைப்புடன் உள்ளது.

தீப்பிடிப்பு பிரச்சனைகளுக்கு மத்தியில்... புதிய மெகா தொழிற்சாலையை நிறுவும் ஒகினவா!!

ராஜஸ்தான் மாநிலத்தின் கரோலி பகுதியில் அமையவிருக்கும் புதிய ஒகினவா மெகா தொழிற்சாலை ஆனது வருடத்திற்கு சுமார் 10 லட்ச எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு திறனுடன் உருவாக்கப்பட உள்ளது. இந்த புதிய தொழிற்சாலையில் தனது அனைத்து விற்பனை மாடல்களையும் தயாரிக்க ஒகினவா திட்டமிட்டுள்ளது.

தீப்பிடிப்பு பிரச்சனைகளுக்கு மத்தியில்... புதிய மெகா தொழிற்சாலையை நிறுவும் ஒகினவா!!

ஒகினவா பிராண்டில் இருந்து தற்சமயம் பிரைஸ், ஆர்30, ஐ-பிரைஸ், லைட், ரிட்ஜ் ப்ளஸ், ட்யுவல் மற்றும் சமீபத்திய அறிமுகமான ஒகி90 உள்ளிட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ரூ.55,992இல் இருந்து ரூ.1,08,749 வரையில் எக்ஸ்-ஷோரூம் விலையினை கொண்டுள்ள இவை இந்தியாவில் 55 நகரங்களில் உள்ள நிறுவனத்தின் மொத்தம் 74 டீலர்ஷிப் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தீப்பிடிப்பு பிரச்சனைகளுக்கு மத்தியில்... புதிய மெகா தொழிற்சாலையை நிறுவும் ஒகினவா!!

ஒகினவாவின் சமீபத்திய மாடலான ஒகி90 கடந்த 2022 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பளபளப்பான ஒயின் சிவப்பு, பளபளப்பான முத்தின் வெள்ளை, பளபளப்பான ஆஷ் க்ரே மற்றும் பளபளப்பான ஜூவல்லரி நீலம் என்ற நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த புதிய ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மத்தியில் 3800 வாட் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

தீப்பிடிப்பு பிரச்சனைகளுக்கு மத்தியில்... புதிய மெகா தொழிற்சாலையை நிறுவும் ஒகினவா!!

இதற்கு ஆற்றலை வழங்க 72 வோல்ட் 50 ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. ஈக்கோ & ஸ்போர்ட் என இரு விதமான ரைட் மோட்களில் இயங்கும் ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 90kmph (ஸ்போர்ட் மோட்) ஆகும். இந்த மோடில் 0-வில் இருந்து 90kmph வேகத்தை ஸ்கூட்டர் வெறும் 10 வினாடிகளில் எட்டிவிடுகிறது. ஒகி90-இன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்து அதிகப்பட்சமாக 160கிமீ தொலைவிற்கு பயணிக்கலாமாம்.

தீப்பிடிப்பு பிரச்சனைகளுக்கு மத்தியில்... புதிய மெகா தொழிற்சாலையை நிறுவும் ஒகினவா!!

விரைவான மற்றும் எளிமையான ஸ்டார்டிற்காக ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் க்னாப்-ஸ்டைலில் ஆட்டோமேட்டிக் சாவியில்லா ஸ்டார்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பயண வழிக்காட்டி, டிஜிட்டல் வேகமானி, ப்ளூடூத் இணைப்பு, மொபைல்போன் சார்ஜிங் யுஎஸ்பி துளை உள்ளிட்ட தொழிற்நுட்ப அம்சங்களையும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒகினவா நிறுவனம் வழங்கியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஒகினவா #okinawa
English summary
Okinawa autotech plans to invest rs 500 crore for new manufacturing plant details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X