சிங்கிள் சார்ஜில் 160 கிமீ ஓடும்! இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? இப்பவே வாங்கணும் போல இருக்கே

ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிங்கிள் சார்ஜில் 160 கிமீ ஓடும்! இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? இப்பவே வாங்கணும் போல இருக்கே

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஓகி90 (Okhi90) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒகினவா (Okinawa) நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.22 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

சிங்கிள் சார்ஜில் 160 கிமீ ஓடும்! இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? இப்பவே வாங்கணும் போல இருக்கே

அத்துடன் இது மத்திய அரசு வழங்கி வரும் ஃபேம் 2 (Fame II) மானியத்திற்கு பிறகான விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு மட்டுமல்லாது பல்வேறு மாநில அரசுகளும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மானியங்களை வழங்கி வருகின்றன. எனவே மாநிலங்களை பொறுத்து, ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மாறுபடும்.

சிங்கிள் சார்ஜில் 160 கிமீ ஓடும்! இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? இப்பவே வாங்கணும் போல இருக்கே

துல்லியமாக சொல்வதென்றால், ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியா முழுமைக்குமான விலை 1,21,866 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் மானியத்திற்கு பிறகு இந்த விலையில் ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம். அதே சமயம் குஜராத் மாநிலத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1,01,866 ரூபாய் மட்டுமே.

சிங்கிள் சார்ஜில் 160 கிமீ ஓடும்! இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? இப்பவே வாங்கணும் போல இருக்கே

அதே நேரத்தில் டெல்லி மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் 1,03,866 என்ற விலையிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். அதே சமயம் ராஜஸ்தான் மாநிலத்தில் 1,14,866 ரூபாய் என்ற விலையிலும், ஒடிசா மாநிலத்தில் 1,16,866 ரூபாய் என்ற விலையிலும் ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கிள் சார்ஜில் 160 கிமீ ஓடும்! இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? இப்பவே வாங்கணும் போல இருக்கே

அந்தந்த மாநில அரசுகள் வழங்கும் மானியம் காரணமாகவே, மாநிலங்களில் விலை மாறுபடுகிறது. ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அனைவரையும் கவரும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருப்பதுடன், பல்வேறு அதிநவீன வசதிகளையும் பெற்றுள்ளது. இந்திய சந்தையில் ஓலா எஸ்1 ப்ரோ, ஏத்தர் 450எக்ஸ், பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐ-க்யூப் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒகினவா ஓகி90 போட்டியிடும்.

சிங்கிள் சார்ஜில் 160 கிமீ ஓடும்! இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? இப்பவே வாங்கணும் போல இருக்கே

18 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களை இலக்காக வைத்து ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்பான விஸிபிலிட்டிக்காக 'லைட் சென்சார்' வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் 160 கிமீ ஓடும்! இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? இப்பவே வாங்கணும் போல இருக்கே

மேலும் ஒகினவா நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது ஓகி90 சற்றே நீளமானது. ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. பின் பக்க பயணிகளுக்கு வசதியாக 'கிராப் ரெயில்' வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 16 இன்ச் அலுமினியம் அலாய் வீல்களையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

சிங்கிள் சார்ஜில் 160 கிமீ ஓடும்! இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? இப்பவே வாங்கணும் போல இருக்கே

ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 3800-வாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 72V 50AH லித்தியம் அயான் பேட்டரியையும் ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 160 கிலோ மீட்டர்களுக்கும் மேல் என ஒகினவா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணிக்கும் தொலைவுதான் ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது.

சிங்கிள் சார்ஜில் 160 கிமீ ஓடும்! இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? இப்பவே வாங்கணும் போல இருக்கே

அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80-90 கிலோ மீட்டர்கள். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 90 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 10 வினாடிகளிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எட்டி விடும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பூட் ஸ்பேஸ் 40 லிட்டர்கள் ஆகும். மேலும் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் என்ற இரண்டு ரைடிங் மோடுகளையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

சிங்கிள் சார்ஜில் 160 கிமீ ஓடும்! இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? இப்பவே வாங்கணும் போல இருக்கே

சிகப்பு, வெள்ளை, நீலம் மற்றும் க்ரே என மொத்தம் 4 விதமான வண்ணங்களில் ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். 'கனெக்டட்' வசதிகளையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இதன் ரேஞ்ச், டிசைன், வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, கொடுக்கும் பணத்திற்கு ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.

Most Read Articles
English summary
Okinawa okhi90 electric scooter launched in india here are all the details
Story first published: Thursday, March 24, 2022, 23:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X