ஒகினவாவின் புதிய ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! சிங்கிள் சார்ஜில் 150கிமீ பயணம்... டீசர் வெளியீடு!

ஒகினவா பிராண்டில் இருந்து அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்தும், இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்தும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒகினாவாவின் புதிய ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! சிங்கிள் சார்ஜில் 150கிமீ பயணம்... டீசர் வெளியீடு!

இந்தியாவின் வேகமாக வளர்ந்துவரும் இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்களுள் ஒன்றான ஒகினாவா ஆட்டோடெக்கில் இருந்து விரைவில் ஒகி90 என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் தான் தற்போது இந்த ஸ்கூட்டர் தொடர்பான டீசர் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒகினாவாவின் புதிய ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! சிங்கிள் சார்ஜில் 150கிமீ பயணம்... டீசர் வெளியீடு!

வெறும் 10 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ள இந்த டீசர் வீடியோவில் ஸ்கூட்டரின் தோற்றத்தினை தெளிவாக பார்க்க முடியவில்லை. மாறாக, ஒகி90 இ-ஸ்கூட்டரின் எல்இடி ஹெட்லைட் மற்றும் டர்ன் சிக்னல்கள் மட்டுமே ஒளிர்வதுபோல் காட்டப்பட்டுள்ளன. இந்த வீடியோவில் காண முடியாவிடினும், ஹெட்லைட் மற்றும் டர்ன் சிக்னல்களை சுற்றிலும் க்ரோம் அவுட்லைன் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

ஒகினாவாவின் புதிய ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! சிங்கிள் சார்ஜில் 150கிமீ பயணம்... டீசர் வெளியீடு!

இந்த புதிய அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரினை ஒகினாவா நிறுவனம் வருகிற மார்ச் 24ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஒகினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 150கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஒகினாவாவின் புதிய ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! சிங்கிள் சார்ஜில் 150கிமீ பயணம்... டீசர் வெளியீடு!

ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் தற்போதுவரையில் ஒகி90 இ-ஸ்கூட்டரை பற்றிய வேறெந்த விபரத்தையும் வெளியிடவில்லை. மற்ற ஒகினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்று புதிய ஒகி90 மாடலிலும் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்படலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 80கிமீ என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒகினாவாவின் புதிய ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! சிங்கிள் சார்ஜில் 150கிமீ பயணம்... டீசர் வெளியீடு!

ஒகினாவாவின் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சாலைகளில் சிலமுறை சோதனை ஓட்டங்களின்போது அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது ஸ்கூட்டரின் சோதனை மாதிரி மறைப்புகளால் மறைக்கப்பட்டு இருப்பினும், புதிய ஒகி90 -இன் டிசைனை பற்றிய ஐடியா ஓரளவிற்கு நமக்கு கிடைத்திருந்தது. சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் பார்க்கும்போது இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போதைய டீசரில் காட்டப்பட்டுள்ளது போல் அகலமான முன்பகுதியை பெற்று வரவுள்ளது.

ஒகினாவாவின் புதிய ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! சிங்கிள் சார்ஜில் 150கிமீ பயணம்... டீசர் வெளியீடு!

இதன் முன்பக்கத்தில் எல்இடி இண்டிகேட்டர்கள், எல்இடி டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்பட உள்ளன. மோட்டார்சைக்கிள் போன்றதான ஸ்டைலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் புதிய ஒகினவா ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஸ்டைலை பார்த்து வாங்கும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பகுதியில் ஸ்கூட்டரின் வேகம், ரேஞ்ச், பேட்டரியின் சார்ஜ் உள்ளிட்டவற்றை காட்டக்கூடியதாக எல்இடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்படலாம். இவை மட்டுமின்றி இ-சிம் மற்றும் ஸ்மார்ட்போன் செயலி மூலமாக செயல்படக்கூடிய இணைப்பு தொழிற்நுட்பத்தினையும் புதிய ஒகி90 இ-ஸ்கூட்டரில் எதிர்பார்க்கிறோம்.

ஒகினாவாவின் புதிய ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! சிங்கிள் சார்ஜில் 150கிமீ பயணம்... டீசர் வெளியீடு!

இத்துடன் ஒவ்வொரு திருப்பலுக்கும் நாவிகேஷன், வாகன எச்சரிப்பான்கள், ஜியோ-ஃபென்சிங், இ-கால், ஸ்கூட்டரில் உள்ள குறைகளை/பழுதுகளை சுட்டிக்காட்டுவான், ரைடிங் தரத்தினை ஆராய்தல் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த புதிய இ-ஸ்கூட்டரில் ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் வழங்க வாய்ப்புள்ளது. மற்றப்படி இதன் எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி குறித்த விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை.

அறிமுகத்திற்கு பிறகு ஒகினவா ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஓலா எஸ்1, சிம்பிள் ஒன், பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன. இன்னும் ஒகி90 இ-ஸ்கூட்டரின் விலைகளை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், மற்ற போட்டி மாடல்களுக்கு சவால் அளிக்கும் வகையில் இதன் விலையினை நிர்ணயிக்க முயற்சிக்கும்.

Most Read Articles
English summary
Okinwa okhi 90 electric scooter teased launch soon details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X