ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர்... முழுசார்ஜில் 500 கி.மீ பயணிக்கும் கார்... ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓலா நிறுவனம் தனது எஸ்1 ஸ்கூட்டர், சொந்த பேட்டரி தயாரிப்பு, தனது ஃபேக்டரி விரிவாக்கம் மற்றும் ஓலா கார்கள் குறித்த பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர் . . . முழு சார்ஜில் 500 கி . மீ பயணிக்கும் கார் . . . ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு . . .

கடந்தாண்டு இதே ஆகஸ்ட் 15ம் தேதி ஓலா தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது. யாரும் எதிர்பாராத வகையிலிருந்த அதன் லுக் மற்றும் அம்சங்கள் மக்களுக்கு பிடித்துப்போக மக்கள் எல்லோரும் இந்த பைக்கின் வருகைக்காக காத்திருந்தனர். பல்வேறு நடைமுறைக்கு பிறகு ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தைக்கு கொண்டு வந்தது.

ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர் . . . முழு சார்ஜில் 500 கி . மீ பயணிக்கும் கார் . . . ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு . . .

இது வழக்கமாக டீலர் முறையில் இல்லாமல் ஒலா நிறுவனமே நேரடியாக தங்களது ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு செய்ய துவங்கின. கார்பரேட் கால் டாக்ஸி நிறுவனமான துவங்கப்பட்ட ஓலா நிறுவனம் இன்று இந்தியாவில் தவிர்க்க முடியாத ஆட்டொமொபைல் தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்துவிட்டது. இன்று தனது டூவீலர்களை இந்தியா முழவதும் விற்பனை செய்து வருகிறது.

ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர் . . . முழு சார்ஜில் 500 கி . மீ பயணிக்கும் கார் . . . ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு . . .

இடையில் பைக் தீபிடிப்பது என்ற சிக்கல்கள் வந்தாலும் இது பெரிய அளவில் இல்லை பெரும்பாலான வாகனங்கள் இன்றும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. பல பயனர்கள் இந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அந்நிறுவனம் சொன்னதை விட அதிக ரேஞ்ச் சென்று சாதனைகள் கூட படைத்தனர். இந்நிலையில் தனது எலெக்டரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி ஓராண்டு ஆன நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்படபோவதாக அறிவித்திருந்தது.

ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர் . . . முழு சார்ஜில் 500 கி . மீ பயணிக்கும் கார் . . . ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு . . .

இதன்படி இன்று யூடியூபில் மதியம் 2 மணிக்கு தனது புதிய தயாரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அந்நிறுவனத்தின் சிஇஓ பவீஷ் அகர்வால் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஏற்கனவே கடந்தாண்டு ஓலா நிறுவனம் எஸ்ஒன் ப்ரோ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது எஸ்1

ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர் . . . முழு சார்ஜில் 500 கி . மீ பயணிக்கும் கார் . . . ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு . . .

புதிய ஓலா எஸ்1 ஸ்கூட்டர், எஸ்1 ப்ரோ தயாரித்த அதே ஃபிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டது. அதே மூவ் ஓஎஸ் தளத்தில் இயங்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரில் ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் குறித்த பல தகவல்கள் ஏற்கனவே நமக்கு தெரியும்.

ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர் . . . முழு சார்ஜில் 500 கி . மீ பயணிக்கும் கார் . . . ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு . . .

தற்போது ஓலா நிறுவனம் இந்த ஸ்கூட்டருக்கான விலையை அறிவித்துள்ளது. அதன்படி ரூ99,999 என்ற விலையில் ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதற்காக புக்கிங்கை இன்றே அந்நிறுவனம் தனது இணையதளத்தில் துவங்கவுள்ளது.

ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர் . . . முழு சார்ஜில் 500 கி . மீ பயணிக்கும் கார் . . . ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு . . .

இந்த ஸ்கூட்டரில் 3kwh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 131 கி.மீ ரேஞ்ச் கொண்டதாக ARAI சான்றழித்துள்ளது. இந்நிறுவனத்தின் ட்ரூ ரேஞ்சை பொருத்தவரை எக்கோ மோடில் 128 கி.மீ, நார்மல் மோடில் 101 கி.மீ ஸ்போர்ட்ஸ் மோடில் 90 கி.மீ ரேஞ்ச் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் அதிகபட்சமாக 95 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர் . . . முழு சார்ஜில் 500 கி . மீ பயணிக்கும் கார் . . . ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு . . .

இந்த பைக்கின் சாஃப்ட்வேர் அம்சங்களை பொருத்தவரை மூவ் ஓஎஸ்2 தற்போது உள்ளது அதுவே இதிலும் இருக்கும். இந்தாண்டு தீபாவளிக்கு மூவ் ஓஎஸ் 3 அறிமுகமாகிறது. அப்பொழுது இதையும் அப்டேட் செய்ய முடியும். அதில் உள்ள அத்தனை அம்சங்களும் இதிலும் இருக்கும். கலரை பொருத்தவரை 4 விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளன. ஜெட்பிளாக், ஓஸியலன் ஓயிட், நியோ மின்ட், லிக்யூட் சில்வர் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர் . . . முழு சார்ஜில் 500 கி . மீ பயணிக்கும் கார் . . . ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு . . .

இந்த பைக்கின் புக்கிங்கிற்காக ரூ499 முன்பணம் செலுத்தினால் போதும் இதற்கான புக்கிங் இன்று துவங்கி இந்த மாதம் 31ம் தேதி வரை புக் செய்ய முடியும். முன்பதிவு செய்யும் தொகை குறுகிய காலத்திற்கே இருக்கும். செப் 1ம் தேதி முதல் முன்பதிவு செய்தவர்கள் இந்த ஸ்கூட்டரை வாங்கும் தளம் திறக்கப்படும்.

ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர் . . . முழு சார்ஜில் 500 கி . மீ பயணிக்கும் கார் . . . ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு . . .

செப் 2ம் தேதி முதல் மற்றவர்களும் இந்த ஸ்கூட்டரை வாங்கும் தளம் திறக்கப்படும். இந்த பைக்கின் டெலிவரி செப் 7ம் தேதி முதல் துவங்கும். இந்த ஸ்கூட்டரை கிரெடிட் கார்டு, லோன் மற்றும் பணமாக கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். ரூ2999 முதல் இஎம்ஐ துவங்குகிறது.

ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர் . . . முழு சார்ஜில் 500 கி . மீ பயணிக்கும் கார் . . . ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு . . .

இது மட்டுமல்லாமல் ஓலா நிறுவனம் எக்ஸ்டென்டட் வாரண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புதிய ஸ்கூட்டரை வாங்குபவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். இது பேட்டரி, மோட்டார் மற்றும் மற்ற எலெக்டரிக் பாகங்களுக்கான பாதுகாப்பை வழங்குகிறது. ஏற்கனேவ ஸ்கூட்டரை வாங்கியவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஓலா ஆப்பில் ஆட்ஆன் முறையில் இதை பெற்றுக்கொள்ள முடியும்.

ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர் . . . முழு சார்ஜில் 500 கி . மீ பயணிக்கும் கார் . . . ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு . . .

மேலும் இந்தாண்டு ஓலா நிறுவனம் 100க்கும் மேற்பட்ட ஹைப்பர் சார்ஜிங் ஸ்டேஷன்களை நாட்டின்பல்வேறு பகுதிகளில் கட்டமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு விரைவாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இது போக தற்போது ஓலா நிறுவனம் சொந்தமாக பேட்டரிகளை தயாரிக்க ஆய்வு மையங்களை செயல்படுத்தி வருகிறது. ஓலா பேட்டரி இன்னோவேஷன் சென்டர் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் 200 மேற்பட்ட ஊழியர்கள் பேட்டரி குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தாண்டிற்குள் ஓலா சொந்தமாக பேட்டரிகளை தயாரித்து அதை தன் வாகனங்களில் பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர் . . . முழு சார்ஜில் 500 கி . மீ பயணிக்கும் கார் . . . ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு . . .

ஓலா நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரியில் தனது தயாரிப்பு ஆலையை நிறுவியுள்ளது. தற்போது 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஆலை விரைவில் 1000 ஏக்கர் பரபரப்பளவிற்கு விவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு ஓலா ஸ்கூட்டர், ஓலா பேட்டரி இது மட்டுமல்ல ஓலா கார்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர் . . . முழு சார்ஜில் 500 கி . மீ பயணிக்கும் கார் . . . ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு . . .

நாம் ஏற்கனவே அறிந்ததுபடி ஓலா நிறுவனம் டெஸ்லாவிற்கு போட்டியாக கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

அதன்கான அடிப்படை பணிகள் முடிந்து அந்த கார் எப்படி இருக்கும் என்ற தகவலையும் அந்நிறுவனத்தின் சிஇஓ வெளியிட்டுள்ளார். அதன்படி இந்தியாவின் வேகமான காராக ஓலா எலெக்ட்ரிக் கார் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர் . . . முழு சார்ஜில் 500 கி . மீ பயணிக்கும் கார் . . . ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு . . .

இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4 நொடியில் எட்டிபிடிக்கும் என்றும், ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 500 கி.மீ வரை பயணிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த காரும் மூவ் ஓஎஸ் தளத்தில் இயங்கும். முற்றிலும் கிளாஸால் ஆன ரூஃப் இருக்கும் என்றும், இது மிக குறைவான கையாளுகையில் இயங்கும் காராக இருக்கும் என்றும். இந்த கார் வரும் 2024ம் ஆண்டு விற்பனை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஓலா கார் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எகிறியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola ceo Bhavish Aggarwal announces about ola car and s1 scooter launch
Story first published: Monday, August 15, 2022, 15:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X