புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்க போவதாக அறிவிப்பு... கெட்ட பேரை போக்க ஓலா எலெக்ட்ரிக் அதிரடி...

ஓலா எலெக்ட்ரிக் (Ola electric) நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகமாக ரேஞ்ஜ் தருவது பற்றி தகவல் தெரிவித்தால் இலவசமாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்க போவதாக அறிவிப்பு... கெட்ட பேரை போக்க ஓலா எலெக்ட்ரிக் அதிரடி...

பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா (Ola), 'ஓலா எலெக்ட்ரிக்' (Ola electric) எனும் பெயரில் இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றது. எஸ் 1 (S1) மற்றும் எஸ் 1 ப்ரோ (S1 Pro) ஆகிய இரு விதமான மாடல்களையே தற்போது நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்க போவதாக அறிவிப்பு... கெட்ட பேரை போக்க ஓலா எலெக்ட்ரிக் அதிரடி...

இதில், எஸ்1 ப்ரோ பெயரில் விற்கப்படும் தேர்விற்கு மிக சிறப்பான டிமாண்ட் நாட்டு மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. ஆனால், இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக நிறுவனத்தின் தயாரிப்புகள் அண்மைக் காலமாக சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. தானாக பற்றி எரிதல், ஓடிக் கொண்டிருக்கும் போதே பாகங்கள் உடைதல் மற்றும் திடீரென பிரேக் ஃபெயிலர் ஆகுதல் போன்ற சர்ச்சையில் அது சிக்கியிருக்கின்றது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்க போவதாக அறிவிப்பு... கெட்ட பேரை போக்க ஓலா எலெக்ட்ரிக் அதிரடி...

இதுமட்டுமின்றி, சிலர் தங்களுக்கு உடைந்த மற்றும் பழுதான பாகங்களுடன் மின்சார ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக புகார்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். சமீபத்தில்கூட வேலூரைச் சேர்ந்த ஓர் மருத்துவர் தன்னுடைய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிய நாள் முதலில் இருந்து பல்வேறு சிக்கல்களை வழங்கி வருவதாகக் கூறி சாலையோரத்தில் வைத்து, அதனை தீயிட்டு கொழுத்தினார்.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்க போவதாக அறிவிப்பு... கெட்ட பேரை போக்க ஓலா எலெக்ட்ரிக் அதிரடி...

பல முறை புகார் தெரிவித்தும் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். இந்த சம்பவம் ஓலா நிர்வாகத்திற்கும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. குறிப்பாக, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு பெருத்த இழுக்கை இது ஏற்படுத்தியது. அதேவேலையில், இன்னும் பலர் தொடர்ச்சியாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் ஏற்பட்ட அவல நிலைகள்குறித்த தகவல்களை இணையத்தில் பகிர்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்க போவதாக அறிவிப்பு... கெட்ட பேரை போக்க ஓலா எலெக்ட்ரிக் அதிரடி...

தொடர்ச்சியாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சார்ந்து புகார்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. இதுமாதிரியான புகார்களை தனது வாடிக்கையாளர்களைத் தவிர்த்து, அதற்கு பதிலாக தங்களின் தயாரிப்பின் புகழை வாடிக்கையாளர்கள் பாட வேண்டும் என்பதற்காக சிறப்பு திட்டத்தை தற்போது ஓலா அறிவித்திருக்கின்றது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்க போவதாக அறிவிப்பு... கெட்ட பேரை போக்க ஓலா எலெக்ட்ரிக் அதிரடி...

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்கள் தங்களின் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக சிறப்பு வாய்ந்தது என நிரூபித்தால், அதாவது, நிறுவனம் கூறியதைவிட அதிக தூரம் பயணித்திருந்தால் அதுகுறித்த தகவலை சமூக வலை தளத்தில் பதிவிட வேண்டும் என ஓலா கூறியுள்ளது. அவ்வாறு பதிவிடப்படும் நபருக்கு புதிய ஜெருவா ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்படும் என ஓலா நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்க போவதாக அறிவிப்பு... கெட்ட பேரை போக்க ஓலா எலெக்ட்ரிக் அதிரடி...

அதாவது, தொடர்ச்சியாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்து சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற சூழலில், பரிசு அறிவிப்பின் வாயிலாக வாடிக்கையாளர்களை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சாதகமான கருத்துகளை பதிவிட வைக்க அது திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்று புள்ளி வைக்க முடியும் என நிறுவனம் நம்புகின்றது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்க போவதாக அறிவிப்பு... கெட்ட பேரை போக்க ஓலா எலெக்ட்ரிக் அதிரடி...

இலவசமாக ஜெருவா ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படுவதை அந்நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் அவரது டுவிட்டர் பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கின்றார். சமீபத்தில்கூட 200க்கும் அதிகமான கிமீ ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணித்த காரணத்தினால் ஓர் இளைஞருக்கு ஓலா ஜெருவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அவர் பரிசாக வழங்கினார். இதுகுறித்த படங்கள் இணையத்தில் மிக வேகமாக பகிரப்பட்டது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்க போவதாக அறிவிப்பு... கெட்ட பேரை போக்க ஓலா எலெக்ட்ரிக் அதிரடி...

இதுமாதிரியான பரிசை இன்னும் சில வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக தற்போது ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக இன்னும் 10 ஜெருவா ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 200 கி.மீட்டருக்கும்., அதிகமான தூரம் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்க போவதாக அறிவிப்பு... கெட்ட பேரை போக்க ஓலா எலெக்ட்ரிக் அதிரடி...

ஓலா ஜெருவா என்பது ஹோலி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட பிரத்யேக பதிப்பாகும். புதிய நிறத்தை மட்டுமே சிறப்பு விஷயமாக ஜெருவா ஓலா பதிப்பு பெற்றிருக்கின்றது. வேறு எந்த மாற்றத்தையும் அது பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஓலா எஸ்1 ப்ரோ அடிப்படையிலேயே இந்த சிறப்பு பதிப்பை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்க போவதாக அறிவிப்பு... கெட்ட பேரை போக்க ஓலா எலெக்ட்ரிக் அதிரடி...

ஓலா நிறுவனம் மிக சமீபத்திலேயே எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகளைத் தொடங்கியது. கடந்த காலத்தைப் போல் இல்லாமல் இம்முறை சற்று கூட்டப்பட்ட விலையில் மின்சார ஸ்கூட்டருக்கான விற்பனை பணிகள் தொடங்கியுள்ளன. தற்போது புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் 24 மணி நேரத்திலேயே டெலிவரி வழங்கப்படும் என நிறுவனம் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola electric announces free gerua ola electric scooter here is full details
Story first published: Thursday, May 26, 2022, 19:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X