புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி ஸ்டார்ட் ஆயிருச்சு... விலை இவ்ளோ கம்மியா! சேல்ஸ் பிச்சுக்க போகுது!

2022 ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி ஸ்டார்ட் ஆயிருச்சு... விலை இவ்ளோ கம்மியா! சேல்ஸ் பிச்சுக்க போகுது!

2022 ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் (2022 Ola S1 Electric Scooter) டெலிவரி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 2022 எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி ஸ்டார்ட் ஆயிருச்சு... விலை இவ்ளோ கம்மியா! சேல்ஸ் பிச்சுக்க போகுது!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி 2022 எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளை தொடங்கியுள்ளதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தாலும், அதிக பிரீமியமான எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் (Ola S1 Pro Electric Scooter) டெலிவரி பணிகளுக்குதான் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி ஸ்டார்ட் ஆயிருச்சு... விலை இவ்ளோ கம்மியா! சேல்ஸ் பிச்சுக்க போகுது!

தற்போது இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று 2022 எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் விலை 99,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் டெலிவரி பணிகள் செப்டம்பர் 7ம் தேதி தொடங்கப்படும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வாக்குறுதி அளித்திருந்தது.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி ஸ்டார்ட் ஆயிருச்சு... விலை இவ்ளோ கம்மியா! சேல்ஸ் பிச்சுக்க போகுது!

அதன்படி தற்போது டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் ஒப்பிடும்போது, 2022 ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாறுபட்டது. இந்த புதிய மாடல் தொழிற்சாலையில் இருந்தே மூவ்ஓஎஸ் 2 (MoveOS 2) உடன் வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ரேஞ்ச் மற்றும் செயல்திறன் கிடைக்கும்.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி ஸ்டார்ட் ஆயிருச்சு... விலை இவ்ளோ கம்மியா! சேல்ஸ் பிச்சுக்க போகுது!

அத்துடன் கூடுதல் வசதிகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். 2022 ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 131 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி ஸ்டார்ட் ஆயிருச்சு... விலை இவ்ளோ கம்மியா! சேல்ஸ் பிச்சுக்க போகுது!

அதே நேரத்தில் 2022 ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மணிக்கு 95 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்க கூடிய திறன் வாய்ந்ததாக உள்ளது. ஆனால் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முந்தைய மாடலின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 121 கிலோ மீட்டர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி ஸ்டார்ட் ஆயிருச்சு... விலை இவ்ளோ கம்மியா! சேல்ஸ் பிச்சுக்க போகுது!

அதே சமயம் பழைய மாடலின் டாப் ஸ்பீடு மணிக்கு வெறும் 90 கிலோ மீட்டர்கள் மட்டும்தான். 2022 ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் மற்றும் செயல்திறன் அதிகரித்திருப்பதை இந்த புள்ளி விபரங்கள் மூலம் நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். 2022 ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 3kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி ஸ்டார்ட் ஆயிருச்சு... விலை இவ்ளோ கம்மியா! சேல்ஸ் பிச்சுக்க போகுது!

அதே நேரத்தில் இந்த புதிய மாடலில் 5.5kW எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. புதிய மூவ்ஓஎஸ் 2 சாஃப்ட்வேர் காரணமாக க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை தவிர ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள அனைத்து வசதிகளும் தற்போது ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலேயே கிடைக்கின்றன. இதுவும் சிறப்பான ஒரு விஷயம் ஆகும்.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி ஸ்டார்ட் ஆயிருச்சு... விலை இவ்ளோ கம்மியா! சேல்ஸ் பிச்சுக்க போகுது!

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை போல், புதிய 2022 எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் வெறும் 499 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள முடியும். அத்துடன் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வங்கிகளுடன் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கூட்டணி அமைத்து கொண்டுள்ளது.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி ஸ்டார்ட் ஆயிருச்சு... விலை இவ்ளோ கம்மியா! சேல்ஸ் பிச்சுக்க போகுது!

அந்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆஃபர்களை வழங்குகின்றன. இதில், லோன் ப்ராஸஸிங் கட்டணம் தள்ளுபடி, 2,999 ரூபாய் என்ற இஎம்ஐ போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக ஆகும் செலவை குறைக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டவர்களுக்கும் 2022 ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles
English summary
Ola electric begins deliveries for the 2022 s1 electric scooter in india
Story first published: Saturday, September 10, 2022, 17:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X