வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!

தீப்பிடிப்பு சம்பவங்களுக்கு மத்தியிலும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த 2 மாதங்களில் ரூ.500 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டி பிரம்மிக்க வைத்த்துள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்து வருவதை அறிந்து கடந்த சில வருடங்களில் பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதியதாக களமிறங்கியுள்ளன. இந்த வகையில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் சந்தையில் களம்புகுந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தான் ஓலா எலக்ட்ரிக் ஆகும்.

வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!

ஆனால் மற்ற ஸ்டார்ட்-அப் பிராண்ட்களை காட்டிலும் ஓலா குறுகிய காலத்தில் நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ளது. இதற்கு சமீபத்திய இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பு சம்பவங்களை ஒரு காரணமாக கூறினாலும், அதனை விடவும் ஓலா ஆரம்பத்திலேயே உருவாக்கிய ஸ்டைலிஷ் ஸ்கூட்டர் பிம்பத்தை முக்கிய காரணமாக சொல்ல வேண்டும்.

வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!

இதனாலேயே கோடை வெயிலின் தாக்கத்தை தாக்க பிடிக்க முடியாமல் நிறுவனத்தின் சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பிற்கு உள்ளானாலும், நடப்பு 2022-23 நிதியாண்டின் முதல் இரு மாதங்களில், அதாவது 2022 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே ரூ.500 கோடிக்கும் அதிகமாக வருவாயை ஈட்டியுள்ளதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!

நடப்பு 2022ஆம் காலண்டர் ஆண்டிற்குள் வருவாயில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.7,800 கோடிக்கும் அதிகம்) என்ற மைல்கல்லை கடக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடன் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை சமீப மாதங்களாக கணிசமாக குறைந்து வருகிறது.

வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!

இதனாலேயே, கடந்த 2 மாதங்களில் ரூ.500 கோடிக்கும் அதிகமான இலாபத்தை கண்டுள்ளோம் என்று மட்டுமே ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளதே தவிர்த்து, இந்த 2 மாதங்களில் எத்தனை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தங்களது நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை வெளியிடவில்லை. இருப்பினும் இந்த வருட இறுதிக்குள் 1 பில்லியன் டாலர்கள் வருவாயை எட்டுவது என்கிற உறுதியில் ஓலா உள்ளது.

வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!

இதற்காக ஓசூரில் உள்ள தொழிற்சாலையில் தினசரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி எண்ணிக்கையை 1,000ஆக அதிகரிக்கும் முனைப்பில் உள்ளதாக ஓலா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து உருவாகும் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!

கடந்த 2021 ஆகஸ்ட் 15ஆம் தேதி சந்தையில் நுழைந்த ஓலா எலக்ட்ரிக் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தியது. ஆனால் ஓலா பிராண்டில் இருந்து தற்சமயம் எஸ்1 ப்ரோ வேரியண்ட் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒரு வேரியண்ட்டையும் டீலர்ஷிப்கள் எதுவுமின்றி, ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு நேரடியாக தொழிற்சாலையில் இருந்து ஓலா நிறுவனம் டெலிவிரி செய்து வருகிறது.

வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!

இதனாலேயே விற்கப்பட்ட ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்களை நம்மால் முறையாக பெற முடிவதில்லை. இருப்பினும் வாஹான் (VAHAN) ஒவ்வொரு நகரத்திலும் பதிவு செய்யப்படும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையை தொகுத்து பதிவு செய்து வருகிறது. அவற்றின்படி பார்க்கும்போது, ஏற்கனவே கூறியதுபோல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை சமீப நாட்களாக குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது.

வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!

எந்த அளவிற்கு என்றால், கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் 12,683 யூனிட்கள் பதிவு செய்யப்பட்டிருந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கடந்த மே மாதத்தில் சற்று குறைவாக 9,196 யூனிட்கள் மட்டுமே புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அறிமுகத்தின்போது, ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் முறையே ரூ.99,999 மற்றும் ரூ.1,29.999 என நிர்ணயிக்கப்பட்டன.

வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!

இவற்றிற்கான முன்பதிவுகள் அறிமுகத்திற்கு முன்பு இருந்தே துவங்கப்பட்டாலும், குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் உற்பத்தி பணிகள் பாதிப்படைய டெலிவிரிகள் கடந்த 2021 டிசம்பர் மாத மத்தியில் இருந்துதான் துவங்கின. தற்போதுவரையில் மட்டுமே 50,000க்கும் அதிகமான ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola electric crosses over rs 500 revenue in last two months
Story first published: Saturday, June 25, 2022, 23:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X