இப்பதான் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்துச்சு... அதுக்குள்ள இதுவா! ஓலா நிறுவனம் செய்த அதிரடி!

இந்தியாவின் 11 நகரங்களில், 14 புதிய அனுபவ மையங்களை (Experience Centres) ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் தற்போது திறந்துள்ளது. தற்போதைய நிலையில் இந்தியா முழுவதும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு 50க்கும் மேற்பட்ட அனுபவ மையங்கள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது பெங்களூர் நகரில் 3 அனுபவ மையங்களை திறந்துள்ளது. அதே சமயம் புனே நகரில் 2 அனுபவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மறுபக்கம் டெல்லி, ஐதராபாத், அகமதாபாத், நாக்பூர், போபால், ராஞ்சி, வதோதரா, டேராடூன் மற்றும் கோட்டா ஆகிய நகரங்களில் தலா 1 அனுபவ மையங்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆக மொத்தம் 11 நகரங்களில், 14 அனுபவ மையங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

இப்பதான் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்துச்சு... அதுக்குள்ள இதுவா! ஓலா நிறுவனம் செய்த அதிரடி!

இந்த அனுபவ மையங்கள் மூலமாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும். அத்துடன் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் வாகனங்கள் தொடர்பான தகவல்களையும் வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். இதுதவிர ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 (S1) மற்றும் எஸ்1 ப்ரோ (S1 Pro) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அவர்கள், வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் ரைடு செய்வதற்கும் வழங்குகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெகு சமீபத்தில் எஸ்1 ஏர் (Ola S1 Air) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் விலை 79,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் வெறும் 999 ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுதான் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

எனவே அதிக வாடிக்கையாளர்களை இந்த புதிய மாடல் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறைவானதாக இருந்தாலும் கூட, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 4.5 kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 2.5 kWh பேட்டரி தொகுப்பை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 101 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிலோ மீட்டர்களாக உள்ளது. அத்துடன் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 9.3 வினாடிகளில் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எட்டி விடும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு சார்ஜரை பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை நிரப்புவதற்கு 4.5 மணி நேரம் வரை ஆகும். இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ள ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமல்லாது, வரும் காலங்களில் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் (Electric Motorcycle) ஆகியவற்றையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக எதிர் காலத்தில் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மிகவும் முக்கியமான ஒரு இடத்தை வகிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக தென்பட தொடங்கியுள்ளன.

Most Read Articles
English summary
Ola electric opens 14 new experience centres
Story first published: Monday, November 28, 2022, 22:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X