ஓலா எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை இப்போதே புக் செய்துவிடுங்கள்!! விரைவில் விலை உயருகிறது!

எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை கணிசமாக உயர்த்தவுள்ளதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஓலா எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை இப்போதே புக் செய்துவிடுங்கள்!! விரைவில் விலை உயருகிறது!

இந்தியாவில் மிக பெரிய இவி தயாரிப்பு நிறுவனமாக உருவெடுக்கும் முனைப்பில் உள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் தொழிற்சாலையை நமது தமிழகத்தில் நிறுவி செயல்படுத்தி வருகிறது. இதன் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்வோர்க்கு நேரடியாக இங்கிருந்தே ஸ்கூட்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

ஓலா எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை இப்போதே புக் செய்துவிடுங்கள்!! விரைவில் விலை உயருகிறது!

ஓசூரில் அமைந்துள்ள இந்த 'எதிர்கால' தொழிற்சாலையில் தற்சமயம் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 1,000 ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதன் மூலமாக கடந்த மாதத்தில் அதிகளவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்த நிறுவனமாக ஓலா எலக்ட்ரிக் விளங்கியது. இது நடப்பு மார்ச் மாதத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓலா எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை இப்போதே புக் செய்துவிடுங்கள்!! விரைவில் விலை உயருகிறது!

இந்த நிலையில் தான் தற்போது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் வருகிற மார்ச் 19ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கவலை கொள்ள வேண்டாம், ஏனெனில் எஸ்1 மாடலின் டாப் வேரியண்ட்டான ப்ரோ -வின் விலையே உயர்த்தப்பட உள்ளது. தற்சமயம் உள்ள எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரூ.129,999 என்கிற விலை மார்ச் 18ஆம் தேதி நள்ளிரவு வரையில் மட்டுமே அமலில் இருக்கும் என ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஒ பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஓலா எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை இப்போதே புக் செய்துவிடுங்கள்!! விரைவில் விலை உயருகிறது!

இதனால் இந்த விலையில் எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் மார்ச் 18ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு உள்ளாக முன்பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். எங்களுக்கு தெரிந்தவரையில் ஓலா எஸ்1 ப்ரோவின் ரூ.1.3 லட்சம் என்கிற விலையில் 3இல் இருந்து 5% வரையில் அதிகரிப்பு கொண்டுவரப்படலாம். மற்றப்படி விலை குறைவான எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை அதிகரிக்கப்படுவது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஓலா எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை இப்போதே புக் செய்துவிடுங்கள்!! விரைவில் விலை உயருகிறது!

ஓட்டுனரின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விரைவில் மூவ் ஒஎஸ் 2.0 வசதியினை அறிமுகப்படுத்த உள்ளது. ஒடிஏ அப்டேட்கள் மூலமாக செயல்படக்கூடிய இந்த மூவ் ஒஎஸ் 2.0 -இன் மூலமாக ஒவ்வொரு திருப்பலுக்குமான நாவிகேஷன், இருப்பிடம் பகிர்வு மற்றும் அருகில் உள்ள சார்ஜிங் நிலையங்களை கண்டறிதல் உள்ளிட்ட வசதிகளை பெறலாமாம். இத்தகைய மூவ் ஒஎஸ் 2.0 திட்டம் வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

ஓலா எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை இப்போதே புக் செய்துவிடுங்கள்!! விரைவில் விலை உயருகிறது!

இதனுடன் கூட்டு செயலி, புதிய ப்ளூடூத்-சார்ந்த செயல்பாடுகள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அப்டேட்களையும் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஓலா அறிமுகப்படுத்த உள்ளது. எஸ்1 ஸ்கூட்டர்கள் குறித்த பயனர்களிடம் இருந்து சில புகார்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த அப்டேட்கள் சரி செய்யும் என ஓலா நம்பிக்கையாக உள்ளது. அத்துடன் பயண அனுபவத்தையும் இவை மேம்படுத்தும்.

ஓலா எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை இப்போதே புக் செய்துவிடுங்கள்!! விரைவில் விலை உயருகிறது!

தற்சமயம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் டிஜிட்டல் சாவி, ரைட் மோட்கள், 7-இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் தொடுத்திரை, ரிவர்ஸ் மோட் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் போன்ற அதிநவீன தொழிற்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் செயல்படுதிறன், ரேஞ்ச், வெப்பநிலை உள்ளிட்டவற்றை தொடர்ந்து ஆராயும் மென்பொருள் அமைப்புகளையும் இந்த ஸ்கூட்டர் பெறுகிறது.

ஓலா எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை இப்போதே புக் செய்துவிடுங்கள்!! விரைவில் விலை உயருகிறது!

ஆதலால் ஸ்கூட்டர் குறித்து எந்தவொரு தகவலும் உடனுக்குடன் ஓட்டுனருக்கு தெரிய வந்துவிடும். பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்களாக ஜியோ ஃபென்சிங், டைம் ஃபென்ஸ், பயணத்தின்போது சைடு ஸ்டாண்ட் போடப்பட்டுள்ளதை எச்சரிக்கும் வசதி, வாகனம் தூக்கப்படுவதை எச்சரிப்பான், அதிவேகம் மற்றும் மோட் வரையறைகளை ஓலா எஸ்1 ஸ்கூட்டர்கள் பெறுகின்றன.

ஓலா எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை இப்போதே புக் செய்துவிடுங்கள்!! விரைவில் விலை உயருகிறது!

மேலும் உரிமையாளர்கள் தங்களது எஸ்1 ஸ்கூட்டர்களை மொபைல் போன் உடனும் இணைத்து பல்வேறு வசதிகளை பெற முடியும். அதாவது மொபைலுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இருப்பிடம் பகிர்வு உள்ளிட்டவற்றை ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வாயிலாகவே கண்ட்ரோல் செய்யலாம். தற்போதைக்கு பெரும்பான்மையான இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் லித்தியம்-இரும்பு பேட்டரிகளையே பொருத்தி வருகின்றன.

ஓலா எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை இப்போதே புக் செய்துவிடுங்கள்!! விரைவில் விலை உயருகிறது!

இதில் ஓலா எலக்ட்ரிக் மட்டும் என்ன விதிவிலக்கா. இவை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனாலேயே இ-ஸ்கூட்டர்களின் விலைகளை சற்று அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, சொந்தமாக லித்தியம்-இரும்பு பேட்டரிகளை தயாரிக்கும் முயற்சியில் ஓலா எலக்ட்ரிக் ஈடுப்பட்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola electric scooter price hike and move os 2 0 launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X