ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்தவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது.

அதாவது, இரண்டாவது கட்டமாக டெலிவிரி கொடுக்கப்பட இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் மீதமுள்ள பணத்தையும் செலுத்தி டெலிவிரி பெறுவதை உறுதி செய்வதற்கான ஆன்லைன் விண்டோவை வரும் 21ந் தேதி திறக்கப்பட உள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்தவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

இதுகுறித்து ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கியத் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இதன்படி, எஸ்1 மற்றும் எஸ்1 புரோ ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் ரூ.20,000 முன்பணம் செலுத்தி காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மீதமுள்ள பணத்தை செலுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்தவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

வரும் 21ந் தேதி மாலை 6 மணிக்கு ஓலா மொபைல் ஆப் மூலமாக மீதமுள்ள பணத்தை செலுத்தி தங்களது ஓலா ஸ்கூட்டரை டெலிவிரி பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்து கொள்ள முடியும். முழு பணத்தையும் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதம் அல்லது பிப்ரவரி மாதத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்தவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

முதல்கட்டமாக புக்கிங் செய்து முழு பணத்தையும் செலுத்தியவர்களுக்கு ஓலா ஸ்கூட்டர்கள் டெலிவிரி கொடுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டமாக டெலிவிரி செய்யப்பட உள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தங்களது புக்கிங்கை உறுதி செய்து அடுத்த மாதம் டெலிவிரி பெறுவதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற இருக்கின்றனர். பவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள தகவல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்தவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 மற்றும் எஸ்1 புரோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. எஸ்1 மாடலுக்கு ரூ.99,999 விலையும், எஸ்1 புரோ மாடலுக்கு ரூ.1,29,999 எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டது. ரூ.499 செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்தவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

பெரும் ஆவலுடன் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கும் போட்டி போட்டு புக்கிங் செய்தனர். ஆனால், வாகனங்களுக்கு அத்தியாவசியமாக பயன்படும் செமி கன்டக்டர் என்ற மின்னணு சாதனத்திற்கு தட்டுப்பாடு அதிகம் இருப்பதால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் தடங்கல் ஏற்பட்டு டெலிவிரி கொடுக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், உற்பத்தியை சீராக்கும் முயற்சியில் ஓலா தீவிரம் காட்டி வருகிறது. இதனால், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைவாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவிரி கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்தவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 புரோ ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களும் செயல்திறன் மற்றும் ரேஞ்ச் திறனில் மாறுபடுகின்றன. ஓலா எஸ்1 எலெக்ட்ரிக்க ஸ்கூட்டர் மணிக்கு 90 கிமீ வேகம் வரையில் செல்லும் திறன் கொண்டது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 121 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்தவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

மறுபுறத்தில் ஓலா எஸ்1 புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 115 கிமீ வேகம் வரையில் செல்லும் திறன் கொண்டது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 181 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த மாடலில் நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் என்ற மூன்று விதமான டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்தவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.98 kWh பேட்டரியைும், எஸ்1 புரோ ஸ்கூட்டரில் 3.97 kwh பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளன. ஓலா எஸ்1 ஸ்கூட்டர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 மணி 48 நிமிடங்களும், எஸ் புரோ பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 6 மணி 30 நிமிடங்கள் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் வசதியும் உள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்தவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 5 வித வண்ணங்களிலும், எஸ்1 புரோ ஸ்கூட்டர் 10 விதமான வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 7 அங்குல தொடுதிரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 4ஜி இணைய தொடர்பு வசதி, புளூடூத், ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், நேவிகேன், ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட ஏராளமான நவீன தொழில்நுட்ப வசிகளை பெற்றுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola Electric to open final payment window for second batch delivery on January 21.
Story first published: Monday, January 17, 2022, 13:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X