இங்கிலாந்தில் பெரும் தொகையை முதலீடு செய்யும் ஓலா எலக்ட்ரிக்!! பிரம்மாண்ட வடிவமைப்பு மையம் உருவாகிறது!

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் அதன் எதிர்கால திட்டங்களையும், முதலீடுகளையும் அறிவித்துள்ளது. அவற்றை பற்றி முழுமையாக இனி தொடர்ந்து பார்ப்போம்.

இங்கிலாந்தில் பெரும் தொகையை முதலீடு செய்யும் ஓலா எலக்ட்ரிக்!! பிரம்மாண்ட வடிவமைப்பு மையம் உருவாகிறது!

எஸ்1 & எஸ்1 ப்ரோ என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் தற்சமயம் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு தமிழகத்தில், ஓசூரில் ‘எதிர்கால தொழிற்சாலை' என்கிற பெயரில் தொழிற்சாலை உள்ளது. எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளிலேயே இதுதான் பெரியதாக கருதப்படுகிறது.

இங்கிலாந்தில் பெரும் தொகையை முதலீடு செய்யும் ஓலா எலக்ட்ரிக்!! பிரம்மாண்ட வடிவமைப்பு மையம் உருவாகிறது!

இந்த நிலையில் தற்போது 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் யுகே-வில் புதிய வடிவமைப்பு மையத்தினை நிறுவவுள்ளதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால அடித்தளம் (Futurefoundry) என அழைக்கப்படும் இந்த ஓலாவின் முதன்மை வடிவமைப்பு மையம் ஆனது இங்கிலாந்தில் கவுண்ட்ரி நகரில் அமைக்கப்பட உள்ளது.

இங்கிலாந்தில் பெரும் தொகையை முதலீடு செய்யும் ஓலா எலக்ட்ரிக்!! பிரம்மாண்ட வடிவமைப்பு மையம் உருவாகிறது!

ஓலா எலக்ட்ரிக்கின் அதிநவீன பொறியியல் மற்றும் வாகன வடிவமைப்பின் உலகளாவிய மையமாக விளங்கவுள்ள இதனை அடுத்த 5 வருடங்களில் நிறுவி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வாகன ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்புகளில் பணிபுரிவதற்காக தகுந்த திறன் வாய்ந்தவர்கள் ஓலா எதிர்கால அடித்தளத்தில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

இங்கிலாந்தில் பெரும் தொகையை முதலீடு செய்யும் ஓலா எலக்ட்ரிக்!! பிரம்மாண்ட வடிவமைப்பு மையம் உருவாகிறது!

இவர்கள் மூலமாகவே எதிர்கால ஓலா எலக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்பட உள்ள செல் தொழிற்நுட்பங்கள் வடிவமைக்கப்பட உள்ளன. இவர்கள் மட்டுமின்றி, திறன் வாய்ந்த மேலும் 200 பேர் இந்த வாகன வடிவமைப்பு மையத்தில் பணியாற்றவுள்ளதாக ஓலா எலக்ட்ரிக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பெங்களூரில், ஓலா கேம்பஸில் உள்ள ஓலா வடிவமைப்பு & பொறியியல் குழு உடன் இணைந்து பணியாற்றவுள்ளனராம்.

இங்கிலாந்தில் பெரும் தொகையை முதலீடு செய்யும் ஓலா எலக்ட்ரிக்!! பிரம்மாண்ட வடிவமைப்பு மையம் உருவாகிறது!

முன்னதாக சமீபத்தில் தான் ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பாவிஷ் அகர்வால், நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காரின் அறிமுகத்தினை மீண்டும் உறுதிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் எதிர்கால அடித்தளம் தொடர்பான முதலீட்டு விபரம் வெளிவந்துள்ளதால், இதற்கும் ஓலா எலக்ட்ரிக் காருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் பெரும் தொகையை முதலீடு செய்யும் ஓலா எலக்ட்ரிக்!! பிரம்மாண்ட வடிவமைப்பு மையம் உருவாகிறது!

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார் வருகிற 2023ஆம் ஆண்டில் வெளியீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பாவிஷ் அகர்வாலும் டுவிட்டரில் வாடிக்கையாளர் ஒருவரிடம், உங்களது அடுத்த கார் ஓலா எலக்ட்ரிக் காராக இருக்கலாம் என தெரிவித்திருந்தார். ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்சமயம் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்து வருவதாக முன்பே கூறிவிட்டோம்.

இங்கிலாந்தில் பெரும் தொகையை முதலீடு செய்யும் ஓலா எலக்ட்ரிக்!! பிரம்மாண்ட வடிவமைப்பு மையம் உருவாகிறது!

இவற்றை இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கு கொண்டு செல்லும் அதேவேளையில் இவற்றிற்கான ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்கையும் நாடு முழுவதும் கொண்டுவர ஓலா எலக்ட்ரிக் தீவிரமாக உள்ளது. இதன்படி 4000க்கும் அதிகமான ஹைப்பர்சார்ஜர்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நிறுவும் பணிகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன.

இங்கிலாந்தில் பெரும் தொகையை முதலீடு செய்யும் ஓலா எலக்ட்ரிக்!! பிரம்மாண்ட வடிவமைப்பு மையம் உருவாகிறது!

இவை ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரிகளை வெறும் 18 நிமிடங்களில் 0-வில் இருந்து 50% சார்ஜ் ஏற்றிவிடும். இந்த 50 சதவீத சார்ஜ் ஸ்கூட்டரை மேலும் 75கிமீ தூரத்திற்கு இயங்க வைக்கும் என்கிறது ஓலா எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனம். இத்துடன் ஓலா எலக்ட்ரிக் மொபைல் செயலியும் நடைமுறைக்கு வர உள்ளது. இது ஸ்கூட்டரின் பேட்டரி எந்த அளவிற்கு சார்ஜ் உள்ளது என்பதை உடனுக்குடன் தெரிவிக்குமாம்.

இங்கிலாந்தில் பெரும் தொகையை முதலீடு செய்யும் ஓலா எலக்ட்ரிக்!! பிரம்மாண்ட வடிவமைப்பு மையம் உருவாகிறது!

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அதற்கு முன்னதாக 2021 ஜூலை மாதத்திலேயே இவற்றிற்கான முன்பதிவுகள் துவங்கின. இதற்கு முன்பே ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் படங்கள் வெளியாகி வைரலானதால், புக்கிங் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் முதல் 24 மணிநேரத்திலேயே 1 லட்ச முன்பதிவுகள் எஸ்1 ஸ்கூட்டர்களுக்கு கிடைத்தன.

இங்கிலாந்தில் பெரும் தொகையை முதலீடு செய்யும் ஓலா எலக்ட்ரிக்!! பிரம்மாண்ட வடிவமைப்பு மையம் உருவாகிறது!

ஓலா எஸ்1 மாடலில் 2.98kWh பேட்டரி தொகுப்பும், ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரில் சற்று ஆற்றல்மிக்க 3.97kWh பேட்டரி தொகுப்பும் பொருத்தப்படுகின்றன. இவை இரண்டும் ஒரே மாதிரியான எலக்ட்ரிக் மோட்டரினுள் பொருத்தப்பட்டாலும், எஸ்1 & எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களில் இயக்க ஆற்றல் சற்று வித்தியாசமாக கிடைக்கிறது. எஸ்1 இ-ஸ்கூட்டரின் ரேஞ்ச் 121கிமீ-கள் மற்றும் எஸ்1 ப்ரோ மாடலின் ரேஞ்ச் 181கிமீ-கள் ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola To Invest USD 100M In Ola Futurefoundry.
Story first published: Friday, January 28, 2022, 1:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X