India
YouTube

"ஏற்கனவே விலை அதிகம்னு புலம்பிட்டு இருக்காங்க... இதுல இது வேறையா"... ஓலா இ-ஸ்கூட்டரின் விலை அதிரடி உயர்வு!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் புகழ்பெற்ற எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) மின்சார ஸ்கூட்டரின் விலையை அதிரடியாக உயர்த்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்து வரும் மிக முக்கியமான மின்சார ஸ்கூட்டர் மாடல்களில் எஸ்1 ப்ரோ (S1 Pro)வும் ஒன்று. இந்த இ-ஸ்கூட்டருக்கான விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விற்பனை பணிகளை மீண்டும் கையிலெடுப்பதாக ஓலா சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், முன்பு விற்கப்பட்ட பழைய விலையில் அல்லாமல். சற்று அதிகரிக்கப்பட்ட விலையிலேயே இம்முறை விற்பனைக்கு எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. ஆம், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை உயர்த்தியிருக்கின்றது. ரூ. 10 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், தற்போது தலைநகர் டெல்லியில் ரூ. 1.20 லட்சத்திற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்கப்படும் நிலை உருவாகியிருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விலை மத்திய அரசின் மானிய திட்டம் ஃபேம் 2-வின்கீழ் கிடைக்கும் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏற்கனவே, மக்கள் பலர் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மிக அதிக விலையில் விற்கப்படுவதாக வேதனைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையைக் குறைக்கும் பொருட்டே அரசு சார்பில் மானியம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் ஓலா எலெக்ட்ரிக் அதன் தயாரிப்பின் விலையை உயர்த்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இதனை வாங்க விரும்புவர்கள் ஓலா கால் டாக்சி செயலி வாயிலாகவும் புக் செய்துகொள்ள முடியும்.

இதுதவிர, ஓலா எலெக்ட்ரிக் தளத்திலும் புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர 5 புதிய நகரங்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டெஸ்ட் டிரைவ் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்1 ப்ரோவே நிறுவனத்தின் விலையுயர்ந்த மின்சார இருசக்கர வாகனமாக காட்சியளிக்கின்றது. இதில், சிறப்பு வசதிகளும் ஏராளம். குறிப்பாக, பெரிய பேட்டரி பேக் தேர்வில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அது 181 கிமீ வரை ஒரு முழுமையான சார்ஜில் ரேஞ்ஜை வழங்கும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனிற்காக 3.97 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 11 பிஎச்பி மற்றும் 58 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டார் எஸ்1 ப்ரோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 115 கிமீ ஆகும்.

இத்தகைய சூப்பரான திறன்களை எஸ்1 ப்ரோ கொண்டிருப்பதன் காரணத்தினால்தான் இதற்கு நல்ல டிமாண்ட் இந்தியர்கள் மத்தியில் நிலவிக் கொண்டிருக்கின்றது. அதாவது, நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான எஸ்1-ஐக் காட்டிலும் எஸ்1 ப்ரோவிற்கு சூப்பரான டிமாண்ட் நிலவி வருகின்றது. இவை ஏத்தர் 450எக்ஸ், பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

விலை உயர்வினால் தமிழகத்தில் இதன் விலை பல மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. ஓலா எலெக்ட்ரிக் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் தமிழகத்தில் ரூ. 1,39,999 க்கு விற்கப்படுகின்றது. அதேவேலையில், குஜராத்தில் ரூ.1.19 லட்சத்திற்கும், ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் ரூ. 1.29 லட்சத்திற்கும் இதே ஸ்கூட்டர் விற்கப்படுகின்றது. இந்த குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் இவ்வளவு குறைவான விலையில் ஓலா எஸ்1 ப்ரோ விற்பனைக்குக் கிடைக்க அந்தந்த மாநில அரசுகள் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக வழங்கி வரும் மானிய திட்டமே முக்கிய காரணமாக உள்ளது.

ஓலா எஸ்1 மின்சார ஸ்கூட்டர் 5 விதமான நிற தேர்வுகளிலும், எஸ்1 ப்ரோ 10 விதமான நிற தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவற்றிலேயே அண்மையில் புதியதாக ஜெருவா எனும் புதிய நிற தேர்வு கூடுதலாக இணைக்கப்பட்டது. ஹோலி பண்டிகைத் தினத்தை முன்னிட்டு இச்சிறப்பு நிற தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 7 இன்ச் தொடு திரை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 4 ஜி இணைப்பு வசதி, ப்ளூடூத் இணைப்பு, ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், நேவிகேசன், ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Ola increased s1 pro electric scooter price in india by rs 10000
Story first published: Monday, May 23, 2022, 19:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X