ஓலா எஸ்1 விற்பனை விண்டோ நாளை திறப்பு... வாங்க நீங்க ரெடியா?

ஓலா நிறுவனம் தனது எஸ்1 ஸ்கூட்டருக்கான விற்பனை விண்டோவை நாளை திறக்கவுள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் கீழே காணலாம்.

ஓலா எஸ்1 விற்பனை விண்டோ நாளை திறப்பு . . . வாங்க நீங்க ரெடியா ?

ஓலா நிறுவனம் எஸ்1ப்ரோ என்ற ஸ்கூட்டரை கடந்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் மக்களுக்குப் பிடித்துப் போக மார்கெட்டில் இந்த ஸ்கூட்டருக்கு எனத் தனி மவுசே ஏற்பட்டது. இதனால் மக்கள் எல்லோரும் இந்த ஸ்கூட்டரை ஆர்டர் செய்து வாங்கினர். இதுவரை இந்நிறுவனம் 70 ஆயிரம் ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருக்கிறது.

ஓலா எஸ்1 விற்பனை விண்டோ நாளை திறப்பு . . . வாங்க நீங்க ரெடியா ?

இந்நிலையில் இந்த ஒலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் அறிமுகமாகி 1 ஆண்டு ஆன நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஓலா நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான ஓலா எஸ்1 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. ஓலா எஸ்1 ப்ரோ தயாரான அதே பிளாட்ஃபார்மில் ஓலா எஸ்1 ஸ்கூட்டரும் அறிமுகமாகியிருக்கிறது. ரூ99,000 என்ற விலையில் இந்த ஸ்கூட்டரில் மார்கெட்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஓலா எஸ்1 விற்பனை விண்டோ நாளை திறப்பு . . . வாங்க நீங்க ரெடியா ?

இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கப்பட்ட நிலையில் பலர் இந்த ஸ்கூட்டரை புக் செய்யத் துவங்கிவிட்டனர். இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகும் போதே இந்த ஸ்கூட்டரின் விற்பனைக்கான விண்டே செப் 1ம் தேதி திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓலா நிறுவனம் வழக்கமாக டீலர் முறையில் அல்லாமல் தனது வாகன விற்பனையை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கே விற்பனை செய்கிறது.

ஓலா எஸ்1 விற்பனை விண்டோ நாளை திறப்பு . . . வாங்க நீங்க ரெடியா ?

வாடிக்கையாளர்கள் ஓலா எஸ்1 ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்றால் நேரடியாக அந்த நிறுவனத்தின் இணையத்தளத்திற்குச் சென்று ஸ்கூட்டருக்கான ஆர்டரை செய்ய முடியும். தற்போது எஸ்1 ஸ்கூட்டரை பொருத்தவரை இதுவரை முன்பதிவு மட்டுமே செய்வதற்கான ஆப்ஷன் இருந்த நிலையில் தற்போது நாளை முதல் ஸ்கூட்டரை வாங்குவதற்கான விண்டே திறக்கப்படும்.

ஓலா எஸ்1 விற்பனை விண்டோ நாளை திறப்பு . . . வாங்க நீங்க ரெடியா ?

இப்படியாக வாங்கப்படும் ஸ்கூட்டர்கள் வரும் செப் 7ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும். என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை 3kwh பேட்டரி கொள்ளளவுடன் முழு சார்ஜில் 141 கி.மீ இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஓலா எஸ்1 விற்பனை விண்டோ நாளை திறப்பு . . . வாங்க நீங்க ரெடியா ?

இந்த ஓலா எஸ்1 ஸ்கூட்டரில் மொத்தம் 3 விதமான மோட்கள் உள்ளது. எக்கோ மோடில் 128 கி.மீ ரேஞ்சும், நார்மல் மோடில் 101 கி.மீ ரேஞ்சும், ஸ்போர்ட்ஸ் மோடில் 90 கி.மீ ரேஞ்சும் கிடைக்கும் என சான்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்ச வேகமாக 90 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

ஓலா எஸ்1 விற்பனை விண்டோ நாளை திறப்பு . . . வாங்க நீங்க ரெடியா ?

இந்த ஓலா எஸ்1 ஸ்கூட்டரில் ஓலா நிறுவனம் வெளியிடும் எல்லா அப்டேட்களும் கிடைக்கும். இந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் வெளியிடவுள்ள மூவ் ஓ எஸ் 3 அப்டேட்டும் கிடைக்கும். இந்த ஸ்கூட்டர் ஜெட் பிளாக், கோரல் கிளாம், லிக்யூட் சில்வர், ஃபோர்ஸ்லைன் ஒயிட் மற்றும் நியோ மின்ட் ஆகிய 6 நிறங்களிலும் கிடைக்கும்.

ஓலா எஸ்1 விற்பனை விண்டோ நாளை திறப்பு . . . வாங்க நீங்க ரெடியா ?

இந்த ஓலா எஸ்1 ஸ்கூட்டரின் டிசைனை பொருத்தவரை ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரில் உள்ள அதே டிசைன் தான் இதிலும் உள்ளது. இதில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டேடைம் ரன்னிங் லைட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே, எல்இடி டெயில் லைட் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

ஓலா எஸ்1 விற்பனை விண்டோ நாளை திறப்பு . . . வாங்க நீங்க ரெடியா ?

ஓலா நிறுவனம் இந்தியாவின் வேகமான எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. இந்த கார் 2024ம் ஆண்டு அறிமுகமாகும் எனத் தெரிவித்துள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4 நொடியில் எட்டி பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இது முழு சார்ஜில் 500 கி.மீ வரை இயங்கும் திறன் கொண்டது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola opens the s1 electric scooters purchase window from September 1
Story first published: Wednesday, August 31, 2022, 18:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X