இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஓலா நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சூப்பரான காரியம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஓலா நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

பர்சேஸ் (Purchase) செய்யப்பட்டதில் இருந்து, 24 மணி நேரத்திற்கு உள்ளாக, எஸ்1 ப்ரோ (S1 Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஓலா சேர்மன் மற்றும் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal) தெரிவித்துள்ளார்.

இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஓலா நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் லேட்டஸ்ட் பர்சேஸ் விண்டோவை (Purchase Window) கடந்த மே 21ம் தேதி திறந்தது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது. அப்போதில் இருந்து பார்த்தால், வாடிக்கையாளர்களுக்காக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தால் திறக்கப்பட்ட 3வது பர்சேஸ் விண்டோ இதுவாகும்.

இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஓலா நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இது தொடர்பாக பாவிஷ் அகர்வால் சமூக வலை தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பர்சேஸ் செய்யப்பட்டதில் இருந்து 24 மணி நேரத்திற்கு உள்ளாக தற்போது டெலிவரிகள் நடைபெற்று வருகின்றன. இது ஓலா எலெக்ட்ரிக் குழுவினரின் சிறப்பான பணி. மற்ற பெரும்பாலான பிராண்டுகளின் தயாரிப்புகளை வாங்க மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.

இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஓலா நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

டீலர்ஷிப்களில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கு கூட ஒரு சில நாட்கள் ஆகிறது. எதிர்காலம் இங்கே உள்ளது. அதில் ஒரு பகுதியாக இருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டீலர்ஷிப்கள் வாயிலாக விற்பனை செய்வதில்லை. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் செயல்முறைகள் முழுமையாக ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகின்றன.

இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஓலா நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

வாகனங்களை வாங்குவதை பொறுத்தவரையில், இது புதுமையான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் மாடல் மற்றும் வண்ண தேர்வு ஆகியவற்றை தேர்வு செய்து கொள்ள முடியும். அத்துடன் எங்கே டெலிவரி செய்ய வேண்டும்? என்பதையும் சேர்த்து கொள்ளலாம். இதுதவிர ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஃபைனான்ஸ் வசதிகளும் இருக்கின்றன.

இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஓலா நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட, அந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. தற்போது டெலிவரியும் விரைவாக செய்யப்படுவதால், வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். எனவே வரும் மாதங்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஓலா நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube), பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X) போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன், ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போட்டியிட்டு வருகிறது. இந்திய சந்தையில் தற்போது தொடர்ச்சியாக பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஓலா நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கூட சமீபத்தில் புதிய ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாது பல்வேறு சிறிய நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. எனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சர்ச்சைகளில் சிக்கினாலும், அவை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை முழுமையாக இழந்து விடவில்லை.

இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஓலா நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதும் கூட, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரபலமாகி வருவதற்கு ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசு வெகு சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. அதை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான தங்களின் வாட் வரியை குறைத்துள்ளன.

இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஓலா நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இதன் காரணமாக இந்தியாவில் தற்போது எரிபொருள் விலை ஓரளவிற்கு குறைந்துள்ளது. ஆனால் தற்போதும் அதிகமான விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் எரிபொருள் விலை உயரக்கூடிய சூழல் உள்ளது. எனவே எரிபொருள் விலை உயர்வு பிரச்னையில் இருந்து தப்பிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Ola s1 pro electric scooter delivery within 24 hours
Story first published: Monday, May 23, 2022, 21:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X