ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தி வைப்பு: மாற்று வழியை தேர்வு செய்ய வாய்ப்பு

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 ஸ்கூட்டர் வேரியண்ட்டின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இந்த வேரியண்ட்டை புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாற்று வழியை தேர்வு செய்யும் வாய்ப்பையும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தி வைப்பு: வாடிக்கையாளர்களுக்கு மாற்று வழி அறிவிப்பு

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 மற்றும் எஸ்1 புரோ ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இதில், எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைவிட எஸ்1 புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பையும், கூடுதல் செயல்திறன் கொண்டதாகவும் வழங்கப்படுகிறது.

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தி வைப்பு: வாடிக்கையாளர்களுக்கு மாற்று வழி அறிவிப்பு

இந்த நிலையில், எஸ்1 வேரியண்ட்டை புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. அதாவது, எஸ்1 புரோ ஸ்கூட்டருக்குத்தான் அதிக புக்கிங் இருப்பதால், முழு அளவில் இந்த ஸ்கூட்டரை உற்பத்தி செய்ய ஓலா முடிவு செய்துள்ளது.

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தி வைப்பு: வாடிக்கையாளர்களுக்கு மாற்று வழி அறிவிப்பு

எஸ்1 என்ற விலை குறைவான வேரியண்ட்டின் உற்பத்தியை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளது. எனினும், எஸ்1 வேரியண்ட்டை புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் எஸ்1 புரோ ஸ்கூட்டரை தேர்வு செய்து வாங்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தி வைப்பு: வாடிக்கையாளர்களுக்கு மாற்று வழி அறிவிப்பு

எஸ்1 வேரியண்ட்டிற்கு பதிலாக எஸ்1 புரோ வேரியண்ட்டின் சாஃப்ட்வேர் லாக் செய்யப்பட்ட வெர்ஷனை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்க ஓலா திட்டமிட்டுள்ளது.

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தி வைப்பு: வாடிக்கையாளர்களுக்கு மாற்று வழி அறிவிப்பு

மேலும், எஸ்1 புக்கிங் செய்திருந்தாலும், வாடிக்கையாளர்கள் விருப்பத்தின்பேரில், எஸ்1 புரோ வேரியண்ட்டிற்கு உரிய ரூ.30,000 கூடுதல் தொகையை செலுத்தி, அப்கிரேடு செய்து கொள்ளலாம்.

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தி வைப்பு: வாடிக்கையாளர்களுக்கு மாற்று வழி அறிவிப்பு

உற்பத்திப் பிரிவில் சில பிரச்னைகளை சரிசெய்யும் விதமாக இந்த முயற்சியை ஓலா நிறுவனம் செய்துள்ளது. இதன்மூலமாக, தடங்கல் இல்லாமல் அதிக அளவில் ஓலா எஸ்1 புரோ ஸ்கூட்டரை உற்பத்தி செய்து கூடிய விரைவில் டெலிவிரி கொடுக்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தி வைப்பு: வாடிக்கையாளர்களுக்கு மாற்று வழி அறிவிப்பு

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து எஸ்1 புரோ வேரியண்ட்டை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன கூடுதல் சிறப்பம்சங்கள் கிடைக்கும் என்பதை தொடர்ந்நது பார்க்கலாம். எஸ்1 வேரியண்ட் மணிக்கு 90 கிமீ வேகம் வரையிலும், பேட்டரியை சார்ஜ் செய்தால் 121 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தி வைப்பு: வாடிக்கையாளர்களுக்கு மாற்று வழி அறிவிப்பு

அதேநேரத்தில், எஸ்1 புரோ ஸ்கூட்டர் மணிக்கு 115 கிமீ வேகம் வரையில் செல்லும் திறன் வாய்ந்ததுடன், பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 181 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். எஸ்1 வேரியண்ட்டில் நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என்ற இரண்டு ரைடிங் மோடுகள் வழங்கப்படும் நிலையில், எஸ்1 புரோ வேரியண்ட்டில் ஹைப்பர் என்ற அதிக செயல்திறனை வெளிப்படுத்தும் ரைடிங் மோடு உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola S1 Production Halted Temporarily.
Story first published: Monday, January 17, 2022, 15:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X