நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர்... இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா?

சமீபத்தில் ஓலா ஸ்கூட்டர் ஒன்ற நடுரோட்டில் சஸ்பென்சன் உடைந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்

நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர் . . . இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா ?

பெட்ரோல் விலைவாசி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் பெட்ரோல் ஸ்கூட்டர்களைவிட்டுவிட்டு எலெக்டரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் முக்கியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான்.

நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர் . . . இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா ?

இந்த ஸ்கூட்டர் வெளியானது முதல் விற்பனை சூடுபிடித்தது. மக்கள் பலர் இந்த ஸ்கூட்டரை புக் செய்து வாங்கினர். ஓலா நிறுவனம் இந்த ஸ்கூட்டரை வழக்கமான டீலர் முறையில் இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளரிடமே விற்பனை செய்தது. இது ஒரு வித்தியாசமான முயற்சியாக இருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பல்வேறு இடங்களில் எலெக்டரிக் ஸ்கூட்டர் தீ பிடிக்கும் சம்பவம் நடந்தது.

நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர் . . . இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா ?

இதில் ஓலா நிறுவனத்தின் ஒரு ஸ்கூட்டரும் தீ பிடித்தது. இந்த செய்தி வேகமாக பரவியதும் ஓலா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களை சிலர் வாங்கி தயங்கினர். இது மட்டுமல்லாமல் இந்த ஸ்கூட்டரை வாங்கியவர் சிலர் இந்த ஸ்கூட்டரில் பல பிரச்சனைகள் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட துவங்கிவிட்டனர்.

நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர் . . . இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா ?

தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் இந்த ஸ்கூட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டென்சன் ஆகி இந்த ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவமும் சமீபத்தில் நடந்தது. இதற்கிடையில் 61 வயது முதியவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓலா ஸ்கூட்டரில் ரிவர்சில் செல்லும் போது இது வேகமாக சென்றதால் கீழே விழுந்ததில் காயமடைந்தார். இந்த செய்தியும் வெளியானது.

நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர் . . . இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா ?

இந்நிலையில் ஓலா ஸ்கூட்டரில் உள்ள மற்றொரு பிரச்சனை குறித்து சமீபத்தில் ஒருவர் ட்விட்டரில் புகைப்படம் ஒன்று வெளியிட்டது தற்போது ஓலா நிறுவனத்தின் மீது நம்பகமற்ற தன்மையை மேலும் அதிகரித்துள்ளது. ட்விட்டரில் ஸ்ரீநாத் மேனன் என்ற பெயரில் இருந்த ஒருவர் தனது பக்கத்தில் ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரின் முன்பக்க சஸ்பென்சன் பலமில்லாமல் இருப்பதாகவும் குறைவான வேகத்தில் சென்ற போது உடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர் . . . இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா ?

இந்த ட்வீட்டில் ஓலா ஸ்கூட்டரின் முன்பக்க சஸ்பென்சன் உடைந்து ஸ்கூட்டர் ரோட்டில் கிடக்கும் புகைப்படம் ஒன்றை அதில் பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்தில் ஓலா ஸ்கூட்டரின் முன் பக்க வீல் முற்றிலுமாக ஸ்கூட்டரிலிருந்து உடைந்து தனியாக கிடந்தது. இந்த ட்வீட்டில் அவர் ஓலா நிறுவனத்தயும், அதன் சிஇஓ பர்வேஷ் அகர்வாலையும் டேக் செய்து ட்வீட் செய்திருந்தார்.

நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர் . . . இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா ?

மேலும் இந்த ட்வீட்டில் அவர் ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டரின் டிசைன மாற்ற வேண்டும் அப்பொழுது தான் ஸ்கூட்டரை பயன்படுத்துபவர்கள் உயிர் பாதுகாக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீடில் மேலும் சிலர் தங்களுக்கும் இது போன்று நடந்தாக கருத்திட்டிருந்தனர். அதில்ஒருவர் தனது சிவப்பு நிற ஓலா ஸ்கூட்டரின் முன்பக்கம் உடைந்த புகைப்படத்தையும் கருத்திட்டிருந்தார்.

நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர் . . . இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா ?

இதே போல பலர் ஓலா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் வாடிக்கையாளர்கள் புகாருக்கு சரியாக பதிலளிப்பதில்லை என்றும், புகாரளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த புதிய பிரச்சனை ஓலாவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கூட்டர் பேட்டரி தீ பிடிப்பது, பைக் ரிவர்சில் செல்வது, சாஃப்ட்வேரில் ஏற்படும் டெக்னிக்கல் கோளாறுகள் என பல பிரச்சனைகள் ஓலா ஸ்கூட்டரில் இருப்பதுஅந்நிறுவனத்தை தற்போது திக்குமுக்காட வைத்துள்ளது.

நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர் . . . இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா ?

இதற்கிடையில் ஓலா ஸ்கூட்டர் முழு சார்ஜில் 200 கி.மீ வரை பயணித்ததாக ஒருவர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். அவருக்கு ஓலா நிறுவனத்தின் சிஇஓ ஒரு புதிய ஸ்கூட்டர் ஒன்றை பரிசளித்தார். இதுவரை 2 பேர் இப்படியாக செய்துள்ளனர். இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் சிஇஓ முழு சார்ஜில் 200 கி.மீ ஓட்டுபவர்களுக்கு ஒரு ஓலா எஸ்1ப்ரோ இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஓலா ஸ்கூட்டருக்கு இப்படி பாசிடிவ் மற்றும் நெக்டிவ் செய்திகள் ஓலா நிறுவனம் குறித்து சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது...

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola scooter suspension broke in middle of the road new issue on quality
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X