பெட்ரோல் வண்டிலாம் ஓரமா நில்லு... இவ்ளோ கம்மியான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! இந்த தீபாவளி சரவெடிதான்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

பெட்ரோல் வண்டிலாம் ஓரமா நில்லு... இவ்ளோ கம்மியான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! இந்த தீபாவளி சரவெடிதான்!

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

பெட்ரோல் வண்டிலாம் ஓரமா நில்லு... இவ்ளோ கம்மியான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! இந்த தீபாவளி சரவெடிதான்!

அவை ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) மற்றும் ஓலா எஸ்1 (Ola S1) ஆகியவை ஆகும். இதில், ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.40 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

பெட்ரோல் வண்டிலாம் ஓரமா நில்லு... இவ்ளோ கம்மியான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! இந்த தீபாவளி சரவெடிதான்!

இதில், புதிய 2022 ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த சுதந்திர தினத்தன்றுதான் (ஆகஸ்ட் 15) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் கடந்த செப்டம்பர் 7ம் தேதி தொடங்கியது. தற்போது புதிய ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பெட்ரோல் வண்டிலாம் ஓரமா நில்லு... இவ்ளோ கம்மியான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! இந்த தீபாவளி சரவெடிதான்!

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 141 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அராய் அமைப்பு வழங்கிய சான்று ஆகும். இது மிகவும் சிறப்பான ரேஞ்ச் என்பதில் சந்தேகமில்லை.

பெட்ரோல் வண்டிலாம் ஓரமா நில்லு... இவ்ளோ கம்மியான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! இந்த தீபாவளி சரவெடிதான்!

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 95 கிலோ மீட்டர்கள் ஆகும். புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் ஓலா எஸ்1 ஆகிய மாடல்கள் உங்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் இவற்றின் விலை அதிகம் என நீங்கள் கருதினால், கொஞ்ச நாட்கள் மட்டும் பொறுத்து கொள்ளுங்கள்.

பெட்ரோல் வண்டிலாம் ஓரமா நில்லு... இவ்ளோ கம்மியான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! இந்த தீபாவளி சரவெடிதான்!

அதுவும் அதிக நாட்கள் எல்லாம் இல்லை. வரும் தீபாவளி வரைக்கும்தான். ஆம், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வரும் தீபாவளி பண்டிகையின்போது மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் வண்டிலாம் ஓரமா நில்லு... இவ்ளோ கம்மியான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! இந்த தீபாவளி சரவெடிதான்!

வரும் தீபாவளி பண்டிகையின்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்யவிருப்பது ஏற்கனவே விற்பனையில் உள்ள எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மிகவும் விலை குறைவான வேரியண்ட்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அனேகமாக இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 80 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் வண்டிலாம் ஓரமா நில்லு... இவ்ளோ கம்மியான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! இந்த தீபாவளி சரவெடிதான்!

இதன் மூலம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையை இது பெறலாம். அத்துடன் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிகவும் விலை குறைவான பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று என்ற பெருமையையும் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

பெட்ரோல் வண்டிலாம் ஓரமா நில்லு... இவ்ளோ கம்மியான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! இந்த தீபாவளி சரவெடிதான்!

வசதிகளை பொறுத்தவரையில், கிட்டத்தட்ட ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதேபோல் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மூவ்ஓஎஸ் சாஃப்ட்வேரையும் (MoveOS Software) இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் வண்டிலாம் ஓரமா நில்லு... இவ்ளோ கம்மியான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! இந்த தீபாவளி சரவெடிதான்!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) செயல்பட்டு வருபவர் பாவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal). இவர் சமூக வலை தளங்களில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். இவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு ஒன்று ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருவதை சூசகமாக உறுதி செய்யும் வகையில் இருக்கிறது.

பெட்ரோல் வண்டிலாம் ஓரமா நில்லு... இவ்ளோ கம்மியான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! இந்த தீபாவளி சரவெடிதான்!

இந்த மாதத்தில் (அக்டோபர்) இந்திய சந்தையில் உள்ள தங்களது வாடிக்கையாளர்களுக்காக மிகப்பெரிய புதிய தயாரிப்பு ஒன்றை அறிமுகம் செய்ய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக பாவிஷ் அகர்வால் தற்போது பதிவிட்டுள்ளார். ஆனால் புதிய தயாரிப்பு தொடர்பான தகவல்கள் எதையும் அவர் வெளிப்படுத்தவில்லை.

பெட்ரோல் வண்டிலாம் ஓரமா நில்லு... இவ்ளோ கம்மியான விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! இந்த தீபாவளி சரவெடிதான்!

இதையெல்லாம் வைத்து பார்க்கையில், வரும் தீபாவளி பண்டிகையின்போது, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக தென்படுகின்றன. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், 80 ஆயிரம் ரூபாய்க்குள் அறிமுகம் செய்யப்பட்டால், இந்த புதிய தயாரிப்பு விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

Most Read Articles

English summary
Ola to launch affordable electric scooter
Story first published: Friday, October 7, 2022, 13:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X