சிங்கிள் சார்ஜில் 300 கிமீ பயணித்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஆதாரத்துடன் நிரூபித்த இளைஞர்கள்!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) ஸ்கூட்டரை பயன்படுத்தும் இரு இளைஞர்கள் தங்களின் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Ola S1 Pro electric scooters) ஓர் முழு சார்ஜில் 300 கிமீ ரேஞ்ஜ் தந்திருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சிங்கிள் சார்ஜில் 300 கிமீ பயணித்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஆதாரத்துடன் நிரூபித்த இளைஞர்கள்!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வந்தநிலையில் தற்போது அவை நல்ல பெயரை பெற தொடங்கியிருக்கின்றன. அதாவது, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சாதகமான தகவல்கள் பிற ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்கள் வாயிலாக வெளி வர தொடங்கியிருக்கின்றது.

சிங்கிள் சார்ஜில் 300 கிமீ பயணித்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஆதாரத்துடன் நிரூபித்த இளைஞர்கள்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்கள் பலர் தங்களுக்கு டெலிவரி கொடுக்கப்பட்ட மின்சார ஸ்கூட்டரையும், ஓலா நிறுவனத்தையும் வசைபாடிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், இரு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உரிமையாளர்கள் அவர்களின் வாகனத்தை புகழ்ந்துத் தள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.

சிங்கிள் சார்ஜில் 300 கிமீ பயணித்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஆதாரத்துடன் நிரூபித்த இளைஞர்கள்!

குறிப்பாக, அண்மையில் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று அனைத்து ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்களையும் பொறாமையடைய வைத்திருக்கின்றது. தங்களுடைய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜில் 300 கிமீ ரேஞ்ஜை தந்திருப்பதாக அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கின்றனர்.

சிங்கிள் சார்ஜில் 300 கிமீ பயணித்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஆதாரத்துடன் நிரூபித்த இளைஞர்கள்!

இந்த தகவலை அவர்கள் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கின்றனர். சதேந்திர யாதவ் மற்றும் ஜிகர் பர்டா இவர்களே ஒற்றை முழு சார்ஜில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 300 கிமீ ரேஞ்ஜை பெற்ற இளைஞர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்த டேட்டா படங்களையே அவர்கள் இணையத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.

சிங்கிள் சார்ஜில் 300 கிமீ பயணித்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஆதாரத்துடன் நிரூபித்த இளைஞர்கள்!

ஒருவர் 300 கி.மீட்டரையும்., மற்றொருவர் 303 கி.மீட்டரையும் ஓர் முழு சார்ஜில் கடந்திருக்கின்றனர் என்பது அவர்கள் வெளியிட்டிருக்கும் டேட்டா படங்கள் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. வழக்கமாக ஓர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒற்றை முழு சார்ஜில் 180 கிமீ வரை செல்லும் என்பதே நிறுவனத்தின் வாக்குறுதி ஆகும்.

சிங்கிள் சார்ஜில் 300 கிமீ பயணித்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஆதாரத்துடன் நிரூபித்த இளைஞர்கள்!

ஆனால், பயன்படுத்திய வேண்டிய விதத்தில் பயன்படுத்தினால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இன்னும் பல மடங்கு அதிக தூரம் பயணிக்க முடியும் என்பதை இரு இளைஞர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். அதிக ரேஞ்ஜ் பெறுவதற்காக இருவரும் மிகக் குறைவான வேகத்திலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணித்திருக்கின்றனர்.

சிங்கிள் சார்ஜில் 300 கிமீ பயணித்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஆதாரத்துடன் நிரூபித்த இளைஞர்கள்!

மணிக்கு 20 கிமீ தொடங்கி 30 கிமீ வரையிலான வேகத்தில் மட்டுமே அவர்கள் பயணித்திருக்கின்றனர். இதன் விளைவாகவே அவர்களால் 300 கிமீ ரேஞ்ஜை பெற முடிந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, "தற்போது தங்களுடைய பகுதியில் மழை பெய்துக் கொண்டிருப்பதாகவும், இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதாகவும்" இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இதன் வாயிலாக "எங்களாலேயே நம்ப முடியாத அளவிற்கு ரேஞ்ஜை நாங்கள் பெற்றிருக்கின்றோம்" என தெரிவித்துள்ளனர்.

சிங்கிள் சார்ஜில் 300 கிமீ பயணித்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஆதாரத்துடன் நிரூபித்த இளைஞர்கள்!

இதுமட்டுமில்லைங்க, மின்சாரத்தைக் குடிக்கக் கூடிய எந்த சாதனங்களையும் அவர்கள் பயன்படுத்தவில்லை என தெரிவித்திருக்கின்றனர். இத்துடன், பெரும்பாலும் பிரேக்கை பிடிக்காமலே அவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டியிருக்கின்றனர். அதேநேரத்தில் தேவைக்கேற்ப அவர்கள் பிரேக்கை பயன்படுத்தியிருக்கின்றனர். இதுமாதிரியான யுக்திகளாலேயே இரு இளைஞர்களாலும் அதிக ரேஞ்ஜை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெற முடிந்திருக்கின்றது.

சிங்கிள் சார்ஜில் 300 கிமீ பயணித்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஆதாரத்துடன் நிரூபித்த இளைஞர்கள்!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அண்மையில் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. யார் தங்களுடைய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிக தூரம் பயணிக்கும் வாகனமாக மாற்றுகின்றார்களோ அவர்களுக்கே இலவசமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சிங்கிள் சார்ஜில் 300 கிமீ பயணித்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஆதாரத்துடன் நிரூபித்த இளைஞர்கள்!

சுமார் பத்து நபர்களுக்கு இலவசமாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், 300 கிமீ பயணித்திருக்கும் சதேந்திர யாதவ் மற்றும் ஜிகர் பர்டா ஆகியோருக்கு இலவசமாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிங்கிள் சார்ஜில் 300 கிமீ பயணித்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஆதாரத்துடன் நிரூபித்த இளைஞர்கள்!

தற்போது இந்தியாவில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.39 லட்சத்திற்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் 181 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனிற்காக 3.97 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. 11 பிஎச்பி மற்றும் 58 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாரே எஸ்1 ப்ரோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 115 கிமீ ஆகும்.

Most Read Articles
English summary
Owners of ola s1 pro electric scooter get 300 km range in single charge
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X