ஆஹா இது வேற லெவல் இணைப்பா இருக்குதே... மலேசியா அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்துடன் இணைந்த டிவிஎஸ்!

பிரபல டிவிஎஸ் (TVS) நிறுவனம் மலேசியா அரசாங்கத்திற்கு சொந்தமான பெட்ரோனஸ் (Petronas) நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆஹா இது வேற லெவல் இணைப்பா இருக்குதே... மலேசியா அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்துடன் இணைந்த டிவிஎஸ்!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, பெட்ரோனஸ் எனும் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணியை இரு நிறுவனங்களும் கூட்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது.

ஆஹா இது வேற லெவல் இணைப்பா இருக்குதே... மலேசியா அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்துடன் இணைந்த டிவிஎஸ்!

இரு நிறுவனங்களும் இணைந்து மிக சக்தி வாய்ந்த ரேஸ் குழுவை உருவாக்க இருக்கின்றன. பெட்ரோனஸ், இது மலேசியா அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் ஆகும். இது எஞ்ஜின் ஆயில் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனம் ஆகும்.

ஆஹா இது வேற லெவல் இணைப்பா இருக்குதே... மலேசியா அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்துடன் இணைந்த டிவிஎஸ்!

கூட்டணியின் அடிப்படையில் பெட்ரோனஸ் நிறுவனம், டிவிஎஸ் ரேசிங் குழுவிற்கு தேவையான உயர் பெர்ஃபார்மன்ஸ் திறன் கொண்ட எஞ்ஜின் ஆயில் போன்றவற்றை வழங்க இருக்கின்றது. இந்த மாதிரியான முக்கிய பங்களிப்பை நிறுவனம் வழங்க இருப்பதாலும், தற்போது கூட்டணி வைக்கப்பட்டிருப்பதாலும் ரேசிங் டீமின் பெயர் 'பெட்ரோனஸ் டிவிஎஸ் ரேசிங் டீம்' (PETRONAS TVS Racing Team) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆஹா இது வேற லெவல் இணைப்பா இருக்குதே... மலேசியா அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்துடன் இணைந்த டிவிஎஸ்!

டிவிஎஸ் நிறுவனம் அண்மையில் பெட்ரோனஸ் நிறுவனத்தின் லூப்ரிகன்ட் ஆயிலை இந்தியாவில் வணிகம் செய்வதற்காக ஓர் ஒப்பந்தத்தை செய்தது. இந்த ஒப்பந்தத்தின் இலவச இணைப்பாகவே இந்த ரேஸ் டீமை உருவாக்கும் பார்ட்னர்ஷிப்பும் அமைந்துள்ளது.

ஆஹா இது வேற லெவல் இணைப்பா இருக்குதே... மலேசியா அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்துடன் இணைந்த டிவிஎஸ்!

இரு நிறுவனங்களின் கூட்டணியில் தயாராகும் லூப்ரிகேன்ட்ஸ் (எஞ்ஜின் ஆயில்கள்), பெட்ரோனஸ் டிவிஎஸ் ட்ரூ4 ரேஸ்ப்ரோ (PETRONAS TVS TRU4 RacePro) எனும் பெயரில் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. 2022 மே மாதத்தில் இருந்து அது நாடு முழுவதும் விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஹா இது வேற லெவல் இணைப்பா இருக்குதே... மலேசியா அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்துடன் இணைந்த டிவிஎஸ்!

இந்த இணைவு குறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் சிஇஓ-ஆன கேஎன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "பெட்ரோனஸ் நிறுவனத்துடன் இணைந்து டிவிஎஸ் ரேசிங் குழுவை மேம்படுத்த இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. பெட்ரோனஸ் பல முற்போக்கான தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.

ஆஹா இது வேற லெவல் இணைப்பா இருக்குதே... மலேசியா அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்துடன் இணைந்த டிவிஎஸ்!

எனவே, நிறுவனத்தின் கை தேர்ந்த நிபுணத்துவம் மற்றும் டிவிஎஸ் ரேசிங்கின் நாற்பது ஆண்டு கால பந்தய அனுபவம் ஆகிய இரண்டும் நம்மை அடுத்த லெவல் உச்சத்திற்கு கொண்டு செல்ல போகின்றது" என நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஆஹா இது வேற லெவல் இணைப்பா இருக்குதே... மலேசியா அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்துடன் இணைந்த டிவிஎஸ்!

இவரைத் தொடர்ந்து பேசிய பெட்ரோனஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டவுன்ஸ்ட்ரீம் பெட்ரோனாஸ், சஸலி ஹம்ஸா, பெட்ரோனஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் நல்ல மதிப்பு நிலவி வருகின்றது. இந்திய நிறுவனத்தின் வாயிலாக பெட்ரோனஸ் நிறுவனம் எல்பிஜி சப்ளையை செய்து வருகின்றது.

ஆஹா இது வேற லெவல் இணைப்பா இருக்குதே... மலேசியா அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்துடன் இணைந்த டிவிஎஸ்!

இத்துடன், ஆம்பிளஸ் வாயிலாக சோலார் பேனல்களையும் பெட்ரோனஸ் வழங்கி வருகின்றது. இந்த நிலையிலேயே பெட்ரோனஸ் டிவிஎஸ் ரேசிங் டீம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மிக சிறந்த வளர்ச்சியின் அறிகுறி" என அவர் தெரிவித்தார்.

ஆஹா இது வேற லெவல் இணைப்பா இருக்குதே... மலேசியா அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்துடன் இணைந்த டிவிஎஸ்!

இவ்வாறு இரு நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த இணைவை புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். அதேநேரத்தில், இந்த புதிய இணைவின் வாயிலாக டிவிஎஸ் நிறுவனம் உலக மோட்டார்ஸ்போர்ட்ஸில் மிக பெரிய மைல் கல்லை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது இந்த இணைவு ரேஸ் குழுவை சர்வதேச தரத்திற்கு இணையானதாக மாற்றியமைக்க இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Petronas tvs racing team joins hand
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X