இதோட 5வது முறை... தானாக தீ பிடித்த குறிப்பிட்ட நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த முறை எங்கே தெரியுமா?

குறிப்பிட்ட நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் தீ விபத்தில் சிக்கி சர்ச்சையை கிளப்பியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இதோட ஐந்தாவது முறை... தானாக தீ பிடுத்த குறிப்பிட்ட நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த முறை எங்கே தெரியுமா?

மீண்டும் ஓர் மின்சார இருசக்கர வாகன தீ விபத்து நிகழ்வு நாட்டில் அரங்கேறியிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அரங்கேறிய தீ விபத்து நிகழ்வுகளின் அதிர்ச்சியில் இருந்தே இந்தியர்கள் இன்னும் வெளிவராத நிலையில் தற்போது புதியதாக ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ந்து தீ விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

இதோட ஐந்தாவது முறை... தானாக தீ பிடுத்த குறிப்பிட்ட நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த முறை எங்கே தெரியுமா?

அண்மைக் காலங்களாக இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தீ விபத்து தொடர் கதையாகிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய தீ விபத்து சம்பவமும் நாட்டில் நடைபெற்றுள்ளது. இந்த முறையும் ப்யூர் இவி (Pure EV) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கூட்டரே தீ விபத்தில் சிக்கியிருக்கின்றது. ஏற்கனவே இந்த நிறுவனத்தின் தயாரிப்பு சார்ந்து தீ விபத்து சம்பவங்கள் பல அரங்கேறியிருக்கின்றநிலையில் தற்போது மீண்டும் ஒன்று புதிதாக நடைபெற்றிருக்கின்றது.

இதோட ஐந்தாவது முறை... தானாக தீ பிடுத்த குறிப்பிட்ட நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த முறை எங்கே தெரியுமா?

எனவேதான் இந்த முறையும் என்ற வார்த்தையை மேலே உள்ள ஸ்லைடில் பயன்படுத்தியிருக்கின்றோம். குஜராத் மாநிலத்திலேயே இந்த தீ விபத்து சம்பவம் நடைப்பெற்றிருக்கின்றது. படன் மாவட்டைத் சேர்ந்தவர் சுவிதிநாத். இவருக்கு சொந்தமான இப்ளூட்டோ 7ஜி (EPluto 7G) இ-ஸ்கூட்டரே தீயிறிக்கு இரையாகியிருக்கின்றது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்துக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கின்றது.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அதேநேரத்தில், தீ விபத்தால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுவதுமாக எரிந்து நாசமாகியிருக்கின்றது. இந்த நிகழ்வுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

இதோட ஐந்தாவது முறை... தானாக தீ பிடுத்த குறிப்பிட்ட நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த முறை எங்கே தெரியுமா?

ப்யூர் எனெர்ஜி நிறுவனத்தின் தயாரிப்பு சார்ந்து நடைபெறும் ஐந்தாவது தீ விபத்து நிகழ்வு இதுவாகும். கடந்த மாதம் ஹைதரபாத்தில் நடைபெற்ற தீ விபத்து நிகழ்விலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்பே சம்பந்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஹைதராபாத்தில் நிகழ்த்தியதைப் போலவே மிக மோசமான சம்பவத்தை குஜராத் மாநிலத்திலும் அது நிகழ்த்தியிருக்கின்றது.

இதோட ஐந்தாவது முறை... தானாக தீ பிடுத்த குறிப்பிட்ட நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த முறை எங்கே தெரியுமா?

இந்த சம்பவத்தால் ப்யூர் இவி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோர் பலர் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர். குறிப்பாக, தொடர்ச்சியாக தீ விபத்து சம்பவம் அரங்கேறிக் கொண்டிருப்பதால் அடுத்து நம்ம வாகனத்திற்கு என்ன ஆகுமோ என்ற அச்சத்துடன் அந்நிறுவனத்தின் வாகனத்தை பயன்பட்டாளர்கள் பயணிக்க தொடங்கியிருக்கின்றனர்.

இதோட ஐந்தாவது முறை... தானாக தீ பிடுத்த குறிப்பிட்ட நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த முறை எங்கே தெரியுமா?

ப்யூர் இவி நிறுவனம் சமீபத்தில் 2 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ரீ-கால் செய்தது. தொடர் தீ விபத்தை காரணம் காட்டி இந்த அழைப்பை அது விடுத்திருந்தது. பிரச்னைகள் குறித்து தன்னுடைய தயாரிப்பை ஆய்வு செய்யும் விதமாக இந்த அழைப்பை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அனைவரையும் அதிர வைக்கும் வகையில் புதிய தீ விபத்து சம்பவம் நாட்டில் நடைப்பெற்றிருக்கின்றது.

இதோட ஐந்தாவது முறை... தானாக தீ பிடுத்த குறிப்பிட்ட நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த முறை எங்கே தெரியுமா?

மீண்டும் மீண்டும் ஒரே நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனம் தொடர்ச்சியாக தீ விபத்தில் சிக்கி வருவது உண்மையில் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, புதிய நிகழ்வு நிறுவனத்தின் தயாரிப்பை வெறுக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி, தொடர் தீ விபத்து சம்பவங்கள் ஒட்டுமொத்த இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களையும் ஆட்டம் காண வைத்திருக்கின்றது.

இதோட ஐந்தாவது முறை... தானாக தீ பிடுத்த குறிப்பிட்ட நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த முறை எங்கே தெரியுமா?

ப்யூர் இவி நிறுவனத்தின் தயாரிப்புகள் மட்டுமின்றி இன்னும் சில நிறுவனங்களின் தயாரிப்புகளும் தீ விபத்தில் சிக்கியிருக்கின்றன. இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தீ விபத்து தொடர் கதையாகி இருக்கின்றது என கூறுமளவிற்கு இந்த கசப்பான சம்பவம் மாதம் ஒரு முறை, வாரம் ஒரு முறை என அரங்கேறத் தொடங்கியிருக்கின்றது.

இதோட ஐந்தாவது முறை... தானாக தீ பிடுத்த குறிப்பிட்ட நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த முறை எங்கே தெரியுமா?

எனவேதான் இந்த விவகாரத்தில் தற்போது அரசு தலையிட்டிருக்கின்றது. மேலும், இதில் தீர்வை எட்ட வேண்டும் என்பதற்காக ஓர் குழுவை அமைத்திருக்கின்றது. இந்த குழு எதிர்காலத்திற்கான எலெக்ட்ரிக் வாகனங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஆராயும். இதுமட்டுமின்றி தொடர் தீ விபத்துகளுக்கான காரணம் என்ன என்பதையும் அது ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், விரைவில் தீ விபத்திற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அவை விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதோட ஐந்தாவது முறை... தானாக தீ பிடுத்த குறிப்பிட்ட நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த முறை எங்கே தெரியுமா?

இதுதவிர, அரசு வெகு விரைவில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட இருக்கின்றது. மின்சார வாகன தயாரிப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களையே அரசு வெளியிட இருக்கின்றது. இந்த வழிகாட்டுதல்களை மீறும் மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கின்றது. ஆகையால், விரைவில் இந்திய சந்தையில் ஆண்டி ஃபையர் போன்ற பாதுகாப்பு வசதி நிறைந்த மின்சார வாகனங்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: முதல் நான்கு படங்களே குஜராத் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்து சம்பவத்திற்கு உட்பட்டவை ஆகும். மற்ற அனைத்தும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இ-ஸ்கூட்டர் தீ விபத்து சம்பவங்களுடையது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Pure ev epluto 7g electric scooter catches fire in gujarat
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X