ஹைதராபாத்தில் தயாராகும் இட்ரைஸ்ட் 350 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் அறிமுகம் - டீசர் வெளியீடு!

இ-ட்ரைஸ்ட் 350 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் அறிமுகத்தை உறுதிப்படுத்தும் வகையில் புதிய டீசர் வீடியோ ஒன்றினை ப்யூர் இவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

ஹைதராபாத்தில் தயாராகும் இட்ரைஸ்ட் 350 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் அறிமுகம் - டீசர் வெளியீடு!

ஐதராபாத்தில் உள்ள ஐஐடி தொழில் நிறுவனத்தை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான ப்யூர் இவி அதன் முதல் எலக்ட்ரிக் பைக்கினை இட்ரைஸ்ட் 350 என்கிற பெயரில் விற்பனைக்கு கொண்டுவர தயாராகி வருகிறது. முன்னதாக இந்த இ-பைக்கை பற்றிய விபரங்கள் படங்களுடன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெளீயீடு செய்யப்பட்டு இருந்தன.

ஹைதராபாத்தில் தயாராகும் இட்ரைஸ்ட் 350 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் அறிமுகம் - டீசர் வெளியீடு!

வெளியீடு செய்யப்பட்டு முழுவதுமாக 1 வருடம் நிறைவடைந்துவிட்ட நிலையில், ப்யூர் இட்ரைஸ்ட் 350 தற்சமயம் வாடிக்கையாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இ-பைக்குகளுள் முதன்மையானதாக உள்ளது. இதற்கிடையில் தான் தற்போது ப்யூர் இவி இந்தியா நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் புதிய இட்ரைஸ்ட் 350 எலக்ட்ரிக் பைக் தொடர்பான டீசர் வீடியோவினை வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத்தில் தயாராகும் இட்ரைஸ்ட் 350 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் அறிமுகம் - டீசர் வெளியீடு!

இதன் மூலம் இந்த எலக்ட்ரிக் பைக்கின் அறிமுகத்தினை மிக விரைவில் எதிர்பார்க்கலாம். வெறும் 15 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ள இந்த டீசர் வீடியோவில், ஏற்கனவே வெளிக்காட்டப்பட்ட இட்ரைஸ்ட் 350 பைக்கின் ஸ்டைலிங் பாகங்கள் அருகாமையிலும், சற்று தொலைவிலும் காட்டப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக, பைக்கின் பெட்ரோல் டேங்கில் வழங்கப்பட உள்ள ஸ்டைலிஷான 'ETryst 350' லோகோவினை பார்க்க முடிகிறது.

ஹைதராபாத்தில் தயாராகும் இட்ரைஸ்ட் 350 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் அறிமுகம் - டீசர் வெளியீடு!

மற்றப்படி புதிய இட்ரைஸ்ட் 350 -இன் அறிமுகம் எப்போது என்பது குறித்த விபரங்கள் எதுவும் இந்த டீசர் வீடியோவில் வெளியிடப்படவில்லை. ப்யூர் இவி இந்தியா நிறுவனத்தின் இந்த டீசர் வீடியோ பதிவிற்கு கீழே, "இந்த எலக்ட்ரிக் பைக்கின் விலை மற்றும் ரேஞ்சை எந்த அளவிற்கு எதிர்பார்க்கலாம்?" என நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "விலைகள் மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

ஹைதராபாத்தில் தயாராகும் இட்ரைஸ்ட் 350 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் அறிமுகம் - டீசர் வெளியீடு!

கூடுதல் விபரங்களுக்கு https://pureev.in/etryst-350/ என்கிற இணையத்தள பக்கத்தினை தொடர்பு கொள்ளவும்." என ப்யூர் இவி நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இட்ரைஸ்ட் 350 ஆனது முற்றிலுமாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட உள்ள எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த மாடலில் 3.5kWh பேட்டரி தொகுப்பினை தயாரிப்பு நிறுவனம் வழங்க உள்ளது.

ஹைதராபாத்தில் தயாராகும் இட்ரைஸ்ட் 350 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் அறிமுகம் - டீசர் வெளியீடு!

இந்த பேட்டரியினை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 120கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இதன் டாப்-ஸ்பீடு 85kmph ஆக இருக்கலாம். அதேநேரம் விரைவான ஆரம்பக்கட்ட முடுக்கத்தினையும் இந்த எலக்ட்ரிக் பைக்கில் எதிர்பார்க்கலாம். இட்ரைஸ்ட் எலக்ட்ரிக் பைக்கின் 50 டெமோ மாதிரிகள் கடந்த 2021 மார்ச் மாதத்தில் தயாரிக்கப்பட்டு சில குறிப்பிட்ட டீலர்ஷிப் மையங்களுக்கு டெஸ்ட் ட்ரைவ்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

ஹைதராபாத்தில் தயாராகும் இட்ரைஸ்ட் 350 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் அறிமுகம் - டீசர் வெளியீடு!

இதனை தொடர்ந்து ப்யூர் இவி நிறுவனத்தின் இந்த எலக்ட்ரிக் பைக்கின் அறிமுகம் முன்னதாக கடந்த 2021 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு ஒதுக்கப்பட்டது. தோற்றத்தை பொறுத்தவரையில், நமக்கு மிகவும் பரீட்சையமான எரிபொருள் என்ஜின் மோட்டார்சைக்கிள்கள் போன்றதான தோற்றத்தை இட்ரைஸ்ட் 350 கொண்டுள்ளதை படங்களில் காணலாம். அதேபோல் இதன் ஆற்றலும், செயல்படுதிறனும் கூட அன்றாட பயன்பாட்டு மோட்டார்சைக்கிள்களுக்கு இணையானதாக இருக்கும் என்கிறது ப்யூர் இவி நிறுவனம்.

ஹைதராபாத்தில் தயாராகும் இட்ரைஸ்ட் 350 எலக்ட்ரிக் பைக்!! விரைவில் அறிமுகம் - டீசர் வெளியீடு!

முதற்கட்டமாக இந்த இ-பைக் பெங்களூர், ஹைதராபாத் மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன. அதன்பின்னரே நமது சென்னை உள்பட மற்ற நகரங்களுக்கு இட்ரைஸ்ட் 350 -இன் சந்தை விரிவுப்படுத்தப்படும். ஏற்கனவே கூறியதுபோல், இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஹைதராபாத்தில் உள்ள தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Pure ev etryst 350 new teaser released expected india launch soon details
Story first published: Thursday, March 10, 2022, 15:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X