இந்தியர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் யமஹா பைக் இதுதான்!! எக்ஸ்.எஸ்.ஆர்155... இந்தோனிஷியாவில் வெளியீடு

அப்டேட் செய்யப்பட்ட 2022 யமஹா எக்ஸ்.எஸ்.ஆர்155 மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தைகளில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புதிய யமஹா எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் யமஹா பைக் இதுதான்!! எக்ஸ்.எஸ்.ஆர்155... இந்தோனிஷியாவில் வெளியீடு!

ஜப்பானை சேர்ந்த யமஹாவின் இந்தோனிஷியா பிரிவு 2022 எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கை அதன் உள்நாட்டு சந்தையில் வெளியீடு செய்துள்ளது. இந்தோனிஷியாவில் பிரபலமான ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளுள் ஒன்றாக விளங்கும் எக்ஸ்.எஸ்ஆர்155 மாடலுக்கு அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வகையில் அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் யமஹா பைக் இதுதான்!! எக்ஸ்.எஸ்.ஆர்155... இந்தோனிஷியாவில் வெளியீடு!

இந்த அப்டேட்களின்படி, இந்த நியோ-ரெட்ரோ மோட்டார்சைக்கிளுக்கு இரு புதிய பெயிண்ட் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. யமஹா அதன் முதல் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தினை வென்று 60 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. இதனை நினைவுக்கூறும் விதமாக பிரத்யேகமான சிவப்பு-வெள்ளை நிற பெயிண்ட் தேர்வு புதிய இரு நிறத்தேர்வுகளில் ஒன்றாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தியர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் யமஹா பைக் இதுதான்!! எக்ஸ்.எஸ்.ஆர்155... இந்தோனிஷியாவில் வெளியீடு!

வெள்ளையை அடிப்படை நிறமாக கொண்ட இந்த பெயிண்ட் தேர்வில் பைக்கின் பக்கவாட்டு பகுதிகள் ஐகானிக் ரெட் ஸ்பீடு ப்ளாக் டிசைனில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சிவப்பு நிறங்களை பைக்கின் பெட்ரோல் டேங்க், பக்கவாட்டு பேனல்கள் மற்றும் முன்பக்க ஃபெண்டரில் பார்க்க முடிகிறது. மேலும் இந்த பெயிண்ட் தேர்வில் பைக்கின் அலாய் சக்கரங்கள் மற்றும் தலைக்கீழான முன்பக்க ஃபோர்க்குகள் தங்க நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் யமஹா பைக் இதுதான்!! எக்ஸ்.எஸ்.ஆர்155... இந்தோனிஷியாவில் வெளியீடு!

இவை தவிர்த்து மற்ற பாகங்கள் அனைத்தும் இந்த பெயிண்ட் தேர்வில் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மற்றொரு புதிய மேட் டார்க் நீல நிற பெயிண்ட் தேர்வில் பைக்கின் பெட்ரோல் டேங்க் பகுதியில் 'எக்ஸ்.எஸ்.ஆர்' கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அடர் நீல நிறத்தை பைக்கின் பெட்ரோல் டேங்க் மற்றும் முன்பக்க ஃபெண்டரில் பார்க்கப்படுகிறது. அதேநேரம் பெட்ரோல் டேங்க் பகுதியிலும், பக்கவாட்டு பேனல்களிலும் க்ரே நிறம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் யமஹா பைக் இதுதான்!! எக்ஸ்.எஸ்.ஆர்155... இந்தோனிஷியாவில் வெளியீடு!

இவை தவிர்த்து இந்த இரண்டாவது புதிய பெயிண்ட் தேர்வில் பைக்கின் பெரும்பான்மையான பகுதிகள் கருப்பு நிறத்திலேயே உள்ளன. எந்த அளவிற்கு என்றால், பைக்கின் முன்பக்க சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் மற்றும் சக்கரங்கள் கூட கருப்பு நிறத்தில் தான் உள்ளன. இந்த காஸ்மெட்டிக் மாற்றங்களை தவிர்த்து எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கின் இயந்திர பாகங்களில் எந்த மாற்றத்தையும் யமஹா மேற்கொள்ளவில்லை.

இந்தியர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் யமஹா பைக் இதுதான்!! எக்ஸ்.எஸ்.ஆர்155... இந்தோனிஷியாவில் வெளியீடு!

இந்தியாவில் ஆர்15 வி4 மற்றும் எம்டி15 பைக்குகளில் பொருத்தப்படுகின்ற 155சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் வெவ்வேறான வால்வு செயல்பாட்டு தொழிற்நுட்பத்துடன் எக்ஸ்.எஸ்.ஆர்155 மாடலிலும் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 19.3 பிஎஸ் மற்றும் 8,500 ஆர்பிஎம்-இல் 14.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்தியர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் யமஹா பைக் இதுதான்!! எக்ஸ்.எஸ்.ஆர்155... இந்தோனிஷியாவில் வெளியீடு!

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப்பர் & உதவி க்ளட்ச் நிலையானதாக இணைக்கப்படுகின்றன. என்ஜின் மட்டுமின்றி ஆர்15 வி4 மற்றும் எம்டி15 பைக்குகளின் அதே டெல்டாபாக்ஸ் ஃப்ரேமில் தான் இந்த யமஹா ஸ்க்ராம்ப்ளர் பைக்கும் உருவாக்கப்படுவதால், அவற்றுடன் சில பொதுவான பாகங்களில் இது ஒத்து போகிறது.

இந்தியர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் யமஹா பைக் இதுதான்!! எக்ஸ்.எஸ்.ஆர்155... இந்தோனிஷியாவில் வெளியீடு!

எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கின் மற்ற சிறப்பம்சங்களாக பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷன், அலுமினியம் ஸ்விங்கார்ம், முன் & பின்பக்க டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் இவற்றிற்கு உதவியாக இரட்டை-சேனல் ஏபிஎஸ் அமைப்பு உள்ளிட்டவற்றை சொல்லலாம். இந்தியாவில் விற்பனையில் இல்லை என்றாலும் யமஹா எக்ஸ்.எஸ்.ஆர்155 பைக்கிற்கு பெரிய அளவில் இரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

இந்தியர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் யமஹா பைக் இதுதான்!! எக்ஸ்.எஸ்.ஆர்155... இந்தோனிஷியாவில் வெளியீடு!

இதனால் இதன் இந்திய அறிமுகத்தை பலர் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த ஸ்க்ராம்ப்ளர் பைக்கினை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் யமஹா தற்போதைக்கு இல்லை. கடந்த ஆண்டில் யமஹா புத்தம் புதிய எஃப்.இசட்-எக்ஸ் மற்றும் நான்காம் தலைமுறை ஆர்15 & ஆர்15 எம் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தியது. இவற்றிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தியர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் யமஹா பைக் இதுதான்!! எக்ஸ்.எஸ்.ஆர்155... இந்தோனிஷியாவில் வெளியீடு!

இவற்றை தொடர்ந்து ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் மற்றும் ஆர்15 எஸ் பைக்குகள் இந்தியாவில் களமிறக்கப்பட்டன. இவற்றிற்கு அடுத்து, அப்டேட் செய்யப்பட்ட யமஹா எம்டி-15 பைக்கின் அறிமுகத்தினை வரும் மாதங்களில் எதிர்பார்க்கிறோம். இந்திய இளம் தலைமுறையினரின் ஃபேவரட் பைக்காக உருவெடுத்துவரும் எம்டி-15 -இன் புதிய அப்டேட் வெர்சனில் இரட்டை-சேனல் ஏபிஎஸ் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதி உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கிறோம்.அதேநேரம் எம்டி-15 பைக்கின் விலைகளும் அப்டேட்களுக்கேற்ப சற்று அதிகரிக்கப்படலாம்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
R15 v4 based updated 2022 yamaha xsr 155 debuts
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X