ECE, DOT, ISI சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் தலைக்கவசம்... எப்படி இருக்கு? இதோ ரிவியூ தகவல்!

கடந்த 2021ம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 120ம் ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சில சிறப்பு பதிப்பு தயாரிப்புகளை நிறுவனம் வெளியிட்டது. அந்தவகையில், நிறுவனம் வெளியிட்டவற்றில் தலைக்கவசங்களும் ஒன்று. இதில் ஒன்றை ரிவியூ செய்வதற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் ஓர் ஹெல்மெட்டை எங்களிடம் அனுப்பி வைத்தது.

நாங்களும் நம்முடைய வாசகர்கள் மற்றும் ஹெல்மெட் பிரியர்களுக்கு பயன்பெறும் வகையில், நிறுவனத்தின் சிறப்பு பதிப்பு ஹெல்மெட்டை ஆய்வு செய்து பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த தகவலையே இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

ராயல் என்பீல்டு நிறுவனம் வர்த்தக பணியில் களமிறங்கி 120 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த வரலாற்று நிகழ்வை நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு விழாவாக கொண்டாடியது. மேலும் இதன் ஒரு பகுதியாக சில சிறப்பு தயாரிப்புகளை சென்ற ஆண்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தவற்றில் ஹெல்மெட்டுகளும் ஒன்று. விற்பனையில் இருக்கும் வழக்கமான ஹெல்மெட்டுகளைக் காட்டிலும் இது தனி சிறப்புகளைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதனை வாடிக்கையாளர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவே நிறுவனம் தனது பிரத்யேக தயாரிப்பு ஹெல்மெட் ஒன்றை அண்மையில் எங்களிடம் அனுப்பி வைத்து.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

ஹெல்மெட்டின் தனித்துவமான ஸ்டைலை, அதை தாங்கி வந்த பெட்டியே எங்களுக்கு உணர்த்தும் வகையில் இருந்தது. தனித்துவமான பிரிண்டிங்குகளால் அந்த பெட்டி அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. 120 ஆண்டுகள் சிறப்பு பதிப்பு ஹெல்மெட் என்னுள் இருக்கின்றது என்பதை விளக்கும் வகையில் அப்பெட்டியின் மீது செய்திருந்த பிரிண்டிங் இருந்தன.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

இந்த அமைப்பு எங்கள் ஒட்டுமொத்த குழுவினரின் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் இருந்தது. குறிப்பாக, பெட்டி மீது கொடுக்கப்பட்டிருந்த பிரிண்டிங் இந்த ஆவலை அதிகரிக்கச் செய்யும் வகையில் இருந்தது. இதற்கேற்ப பெட்டிக்குள் மிகவும் அழகிய மற்றும் ஸ்டைலிஷான ஹெல்மெட் இருந்தது.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

பெட்டியின் வெளிப்பகுதியில் நிறுவனத்தின் 120 ஆண்டுகள் பயணம் பற்றிய தகவலும் கொடுக்கப்பட்டிருந்தது, அந்த பெட்டியின் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. இத்துடன், முழு கருப்பு நிறத்தில் அப்பெட்டி காட்சியளித்தது. இதற்குள்ளேயே ஓர் வெள்ளை சேடின் ஸ்லிங் பேக்கிற்குள் ஹெல்மெட் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

இத்துடன், ஹெல்மெட்டின் வடிவமைப்பு பற்றிய தகவலை விளக்கும் வகையில் ஓர் அஞ்சல் அட்டையை நிறுவனம் வைத்திருந்தது. அந்த அட்டையில் 'கோ இன்டர்செப்டர்' எனும் எழுத்துக்கள் இடம் பெற்றிருந்தன. 1962ம் ஆண்டில் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய இன்டர்செப்டர் 750க்கு மரியாதை செலத்தும் வகையில் இந்த அட்டை அமைந்திருக்கின்றது.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

இத்துடன், அந்த பைக்கின் படமும் அவ்வட்டையில் இடம் பெற்றிருக்கின்றன. ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கிய மிக முக்கியமான தயாரிப்புகளில் இதுவும் ஒன்று. தற்போது இந்த பெயரில் நிறுவனம் பைக்கை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. 1962ம் ஆண்டில் உலகின் அதி-வேக மோட்டார்சைக்கிளாக இது விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

இந்த பைக்கில் 736 சிசி திறன் கொண்ட பாரல்லல்-ட்வின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டது. இதுவே, நிறுவனம் இதுவரை தயாரித்ததிலேயே மிகவும் மென்மையான ட்வின் எஞ்ஜினாக காட்சியளிக்கின்றது. இன்றும்கூட, இது மிகவும் மதிக்கப்படும் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக காட்சியளிக்கின்றது. இதற்கு புகழை சேர்க்கும் வகையிலேயே நிறுவனம் தனது புதிய சிறப்பு பதிப்பு ஹெல்மெட்டுடன் சேர்த்து அஞ்சல் கார்டையும் வழங்கியிருக்கின்றது.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

கோ இன்டர்செப்டர் லிமிடெட் எடிசன் ராயல் என்பீல்டு ஹெல்மெட்

நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த 120 ஆண்டு ஸ்பெஷல் எடிசன் ஹெல்மெட்டுகளில் கோ இன்டர்செப்டர் தலைக்கவசமும் ஒன்று. இந்த ஹெல்மெட்டை முழுக்க முழுக்க ஹேண்ட் பெயிண்டிங்கால் நிறுவனம் அலங்கரித்திருக்கின்றது. மிகவும் பிரைட்டான சிவப்பு நிறம் மட்டுமே ஹெல்மெட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

அதேநேரத்தில் ஹெல்மெட்டின் இடது புறம் இன்டர்செப்டர் 750-இன் படங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆம், ஒரு பக்கம் காலியாகவும், மறு பக்கம் இன்டர்செப்டரின் படமும், நடுவில் இன்டர்செப்டர் என்ற பெயரும் இடம் பெற்றிருக்கின்றது. இது ஹெல்மெட்டிற்கு மிக சிறப்பான தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

இதுமட்டுமின்றி ஹெல்மெட்டின் முன் பக்கத்தில் பழங்கால ராயல் என்பீல்டு நிறுவன முத்திரை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், வெள்ளை நிற நூலால் வெளிப்புறத்தில் தையல் செய்யப்பட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, பிரீமியம் தர லெதர் ஹெல்

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

இதன் உட்பக்கத்தில் அதிக சொகுசான அனுபவத்தை வழங்கக் கூடியி ஸ்பாஞ்சுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது பயன்பாட்டாளர்களுக்கு அசௌகரியமான அனுபவத்தை துளியளவும் வழங்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும், இது வியர்வையை துளியளவும் உரிஞ்சாது என்பதால் துர்நாற்றம் வீசுதல் போன்ற அசௌகரியம் இருக்காது.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

இதில் மற்றுமொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஹெல்மெட்டின் உற்பத்தியை வேகா ஆட்டோ (Vega Auto) வாயிலாக செய்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் வேகா-வின் சின்னம் பின் பக்க ராட்செட் ஸ்ட்ராப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

மேலும், ஹெல்மெட்டின் உட்பக்கம் சிறிய அறிவிப்பு துணி துண்டும், அத்துடன், 022/120 எனும் எண்கள் இடம் பெற்றிருக்கின்றன. 22 என்பது தயாரிப்பு எண்ணிக்கையும், 120 என்பது 120ம் ஆண்டு சிறப்பு பதிப்பு என்பதை விளக்கும் வகையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

ஹெல்மெட்டின் வெளிப்புறம் இலகுரக கண்ணாடி இழையாலும், கண்ணாடி விசர் பாலிகார்பனேட்டாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் ஒட்டுமொத்த எடையே 1,280 கிராம் ஆகும். இசிஇ, டிஓடி மற்றும் ஐஎஸ்ஐ ஆகிய சான்றுகள் இந்த ஹெல்மெட்டிற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

ராயல் என்பீல்டு நிறுவனம் 12 தனித்துவமான நிற தேர்வில் ஹெல்மெட்டை விற்பனைக்கு வழங்குகின்றது. 12 தசாப்தங்களை (120 ஆண்டுகளை) குறிக்கும் வகையில் இந்த 12 விதமான நிற தேர்வு வழங்கப்படுகின்றது. இந்த 12ம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வெவ்வேறு லெஜண்டரி மோட்டார்சைக்கிள்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

ஒட்டுமொத்தமாக ராயல் என்பீல்டு நிறுவனம் 120 யூனிட்டுகளை உருவாக்கி இருக்கின்றது. இவை சிறப்பு பதிப்பு என்பதால் இந்த குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைச் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டது. இவை அனைத்தும் ஏற்கனவே விற்பனையாகிவிட்டன என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

ஹெல்மெட் சூப்பரா இருக்கு... இசிஇ, டிஓடி, ஐஎஸ்ஐ சான்று பெற்ற ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் ஹெல்மெட்! ரிவியூ தகவல்!

அதேநேரத்தில் உங்களுக்கு இந்த ஹெல்மெட் மீது விருப்பம் இருந்தால், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இதற்காக பதிவு செய்யலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த முறை விற்பனைக்கு வரும்போது அதுகுறித்த தகவலை நமக்கு வழங்க இப்பதிவு உதவும். இச்சிறப்பு பதிப்பு ஹெல்மெட்டுகள் ரூ. 6,950 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Royal enfield 120 years celebration helmet review
Story first published: Monday, January 24, 2022, 17:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X