மீண்டும் தன்னை "கிங்" என நிரூபித்த ராயல் என்ஃபீல்டு... போட்டிப் போட யாருமே இல்ல...

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 350 சிசி செக்மெண்டில் விற்பனையில் கெத்து காட்டி வருகிறது. இந்நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத விற்பனை ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இது குறித்த தெளிவான தகவல்களைக் காணலாம்.

மீண்டும் தன்னை கிங் என நிரூபித்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிப் போட யாருமே இல்ல . . .

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு எனத் தனி மவுசு இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பைக் வைத்திருப்பவர்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துடன் பார்க்கின்றனர். எப்பொழுதும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு மக்கள் மத்தியில் டிராமண்ட் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

மீண்டும் தன்னை கிங் என நிரூபித்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிப் போட யாருமே இல்ல . . .

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான ராயல் என்ஃபீல்டு பைக்கின் விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடும் போது 52.88 சதவீத வளர்ச்சியும், கடந்த ஜூலை மாத விற்பனையை ஒப்பிடும் போது 26.20 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

மீண்டும் தன்னை கிங் என நிரூபித்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிப் போட யாருமே இல்ல . . .

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 70,112 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் மட்டும் 62,892 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. 7,220 வானகங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு விற்பனையுடன் ஒப்பிடும் போது கடந்தாண்டு வெறும் 39,070 வாகனங்கள் மட்டுமே உள்நாட்டில் விற்பனையாகியிருந்தது. 6790 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தது

மீண்டும் தன்னை கிங் என நிரூபித்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிப் போட யாருமே இல்ல . . .

உள்நாட்டு விற்பனையில் 60.97 சதவீத வளர்ச்சியும், ஏற்றுமதியில் 6.33 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது. இதுவே வாகனத்தின் வகையின் வாரியாக பார்த்தால் கடந்த மாதம் 350 சிசிக்கு குறைவான வாகனங்கள் மொத்தம் 62,236 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. 350 சிசிக்கு அதிகமான வாகனங்கள் மொத்தம் 7876 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

மீண்டும் தன்னை கிங் என நிரூபித்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிப் போட யாருமே இல்ல . . .

இதை ஒப்பீட்டு பார்த்தாலும் கடந்தாண்டு 350 சிசிக்கு குறைவான வாகனங்களாக 38,572 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. 350 சிசிக்கு அதிகமான வாகனங்களாக 7,288 வானகங்கள் விற்பனையாகியிருந்தது. இது 350 சிசிக்கு குறைவான வாகன விற்பனையில் 61.35 சதவீத வளர்ச்சியும், 350 சிசிக்கு அதிகமான வாகனங்களில் 8.07 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

மீண்டும் தன்னை கிங் என நிரூபித்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிப் போட யாருமே இல்ல . . .

இதுவே கடந்த ஜூலை மாத விற்பனையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மொத்தமாக 26.20 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த ஜூலை மாதம் மொத்தம் 46,529 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனையாகியுள்ளது, 9,026 வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகியுள்ளது.

மீண்டும் தன்னை கிங் என நிரூபித்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிப் போட யாருமே இல்ல . . .
Royal Enfield Aug-22 Aug-21 Growth % YoY
<350cc 62,236 38,572 61.35
>350cc 7,876 7,288 8.07
Domestic 62,892 39,070 60.97
Exports 7,220 6,790 6.33
Total 70,112 45,860 52.88
Royal Enfield Aug-22 Jul-22 Growth % MoM
<350cc 62,236 46,336 34.31
>350cc 7,876 9,219 -14.57
Domestic 62,892 46,529 35.17
Exports 7,220 9,026 -20.01
Total 70,112 55,555 26.20
மீண்டும் தன்னை கிங் என நிரூபித்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிப் போட யாருமே இல்ல . . .

இதில் உள்நாட்டு விற்பனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 35.17 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஆனால் ஏற்றுமதியில் 20.01 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதுவே வாகன வகையை வைத்து பாரத்தால் கடந்த ஜூலை மாதம் 350 சிசிக்கு குறைவான வாகனங்கள் மொத்தம் 46,336 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியிருந்தது. 350 சிசிக்கு அதிகமான பைக்குகள் 9219 விற்பனையாகியிருந்தது.

மீண்டும் தன்னை கிங் என நிரூபித்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிப் போட யாருமே இல்ல . . .

இதில் 350 சிசிக்கு குறைவான வாகன விற்பனை 34.31 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆனால் 350 சிசிக்கு அதிகமான வாகனங்களின் விற்பனை 14.57 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்றுமதியிலும் 350 சிசிக்கு அதிகமான பைக்குகளின் விற்பனையில் மட்டுமே சரிவைச் சந்தித்துள்ளன.

மீண்டும் தன்னை கிங் என நிரூபித்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிப் போட யாருமே இல்ல . . .

ஆனால் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் அபார வளர்ச்சியையே இந்நிறுவனம் சந்தித்துள்ளது. இது போகக் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் இந்த நிதியாண்டு துவங்கி 5 மாதமாகிறது. அதற்கான விற்பனை அறிக்கையும் வெளியாகியுள்ளது. அதன்படி இந்நிறுவனம் இந்த நிதியாண்டில் 350 சிசி செக்மெண்டில் மொத்தம் 2.64,376 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 1,82,681 வானகங்கள் விற்பனையாகியிருந்தது. இது 45 சதவீத வளர்ச்சியாகும்.

மீண்டும் தன்னை கிங் என நிரூபித்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிப் போட யாருமே இல்ல . . .

350 சிசிக்கு அதிகமான வாகனங்களில் மொத்தம் 30,857 வாகனங்கள் கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையாகியிருந்தது. இந்த நிதியாண்டில் 48,496 வாகனங்கள் தற்போது விற்பனையாகியுள்ளது. இது 57 சதவீத வளர்ச்சியாகும்.

மீண்டும் தன்னை கிங் என நிரூபித்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிப் போட யாருமே இல்ல . . .

ஒட்டு மொத்தமாகக் கடந்த நிதியாண்டில் மொத்தம்2,13,538 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் தற்போது 3,12,872 வாகனங்கள் இந்த நிதியாண்டின் முதல் 5 மாதத்திற்கு விற்பனையாகியுள்ளது. இது 47 சதவீத வளர்ச்சியாகும். இதில் ஏற்றுமதியும் அடங்கும். கடந்தாண்டு வெறும் 30,501 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. இந்தாண்டு மொத்தம் 45,809 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இது 50 சதவீத வளர்ச்சியாகும்.

மீண்டும் தன்னை கிங் என நிரூபித்த ராயல் என்ஃபீல்டு . . . போட்டிப் போட யாருமே இல்ல . . .

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது தயாரிப்புகளை வெளியிடும் செக்மெண்டில் தற்போது கிங்காக இருக்கிறது. இந்நிறுவனத்திற்குப்போட்டியாகப் பல நிறுவனங்கள் வாகனங்களை இறக்கியும் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை. இந்த ஆகஸ்ட் மாத விற்பனையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மீண்டும் தன்னை ஒரு "கிங்" என நிரூபித்துள்ளது.

Most Read Articles
English summary
Royal Enfield 2022 august sales report find full details here
Story first published: Friday, September 2, 2022, 11:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X