மீண்டும் கொடிகட்டி பறக்கும் ராயல் என்பீல்டின் 350சிசி பைக்குகள்! போட்டியாளர்களுக்கு போன மாசம் செம அடிபோல!

ராயல் என்பீல்டு நிறுவனம் 2022 நவம்பரில் மட்டும் ஒட்டுமொத்தமாக 70 ஆயிரத்து 766 யூனிட்டுகள் புதிய இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பெரும் பங்கு நிறுவனத்தின் 350 சிசி மோட்டார்சைக்கிள்களே விற்பனையாகியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்பீல்டு, சென்ற நவம்பர் மாதத்தில் தங்களுக்கு என்ன மாதிரியான வரவேற்பு உள் மற்றும் வெளிநாட்டு சந்தையில் நிலவியது என்பது பற்றிய தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. புதிய மாதம் தொடங்கியதும் வாகன உற்பத்தியாளர்கள் ஒவ்வொருவராக முடிவுற்ற நவம்பர் மாத விற்பனை புள்ளி விபரங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. அந்தவகையிலேயே, தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனமும் வாகன விற்பனை புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது.

ராயல் என்பீல்டு

நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தைக் காட்டிலும் 2022 நவம்பரில் கூடுதலாக 37 சதவீதம் அதிகமாக வாகனங்கள் விற்பனையாகியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் 2021 நவம்பரில் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் 51 ஆயிரத்து 654 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியநிலையில், 2022 நவம்பரில் அது 70 ஆயிரத்து 766 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் விற்பனை நிலவரம் இதுவாகும்.

உள்ளூரில் மட்டும் நிறுவனத்தின் தயாரிப்புகள் 65,760 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இது 2021 நவம்பரைக் காட்டிலும் 47 சதவீதம் அதிகம் விற்பனை எண்ணிக்கை ஆகும். கடந்த ஆண்டு நவம்பரில் 44,830 யூனிட் ராயல் என்பீல்டு இருசக்கர வாகனங்களே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. உள்ளூரில் ராயல் என்பீல்டு தயாரிப்புகளுக்கு வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படும் அதேவேளையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருக்கின்றது.

சென்ற ஆண்டு நவம்பரில் ஏற்றுமதி செய்யப்பட்ட ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை 6,824 யூனிட்டுகளாக இருந்தநிலையில், அதன் எண்ணிக்கை 2022 நவம்பரில் 5,006 ஆக குறைந்துள்ளது. இது 27 சதவீதம் குறைவான ஏற்றுமதி விகிதம் ஆகும். இதனால் ஏற்பட்ட சோகத்தைத் தீர்க்கும் விதமாக உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு மிக சூப்பராக அதிகரித்துள்ளது. இந்த விற்பனை எண்ணிக்கை மிகவும் ஸ்ட்ராங்கான வரவேற்பு ராயல் என்பீல்டின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் கிடைக்கத் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதே ஆண்டு அக்டோபரிலும் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக அளவில் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது. 80 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளே 2022 அக்டோபரில் விற்பனையாகின. இந்த விற்பனை வளர்ச்சியே முடிவுற்ற நவம்பர் மாதத்திலும் தொடர்ந்திருக்கின்றது. இது அடுத்தடுத்த மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப நிறுவனம் இந்திய சந்தையில் புதுமுக டூ-வீலர்களை களமிறக்க ஆயத்தமாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 650 சிசி இருசக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்தியது.

இதனை 2023 ஆம் ஆண்டின் ஜனவரியில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இப்போதே பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த வாகனத்தை போலவே இன்னும் சில புதுமுக வாகனங்களைக் களமிறக்கும் பணியில் ராயல் என்பீல்டு மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது. அந்தவகையில், 350 சிசி, 450 சிசி மற்றும் 650 சிசி என அனைத்து பிரிவிலும் புதுமுக இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்க ராயல் என்பீல்டு திட்டமிட்டிருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, விரைவில் ஜே சீரிஸ் பிளாட்பாரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் புதிய தலைமுறை புல்லட் மற்றும் பாபர் ஸ்டைலில் உருவாகி வரும் புதிய 350 சிசி பைக் ஆகியவையே வெகு விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமில்லைங்க, ராயல் என்பீல்டு நிறுவனம் மின்சார இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் விதமாக விரைவில் எலெக்ட்ரிக் பைக்கையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதற்காக நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஹிமாலயன் அட்வென்சர் பைக்கின் அடிப்படை தோற்றத்தில் ஓர் மின்சார டூ-வீலரை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் வெளியாகிய தகவல்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. இந்த எலெக்ட்ரிக் பைக் அதிக தூரம் அட்வென்சர் பயணங்களை மேற்கொள்ள விரும்புவோர்க்கு ஏதுவாக உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆகையால், அதிக ரேஞ்ஜ் மற்றும் விரைவில் சார்ஜாகும் திறனுடனும் அது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Royal enfield 47 percent sales growth domestic
Story first published: Saturday, December 3, 2022, 6:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X