ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது? ஒற்றுமைகள் & வேற்றுமைகள்...

ராயல் என்பீல்டு பிராண்டில் இருந்து மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹண்டர் 350 பைக் இளம் தலைமுறையினர் மத்தியில் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு விற்பனையில் போட்டியளிக்க பல மோட்டார்சைக்கிள்கள் ரெடியாக உள்ளன.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது? ஒற்றுமைகள் & வேற்றுமைகள்...

ஆனால் உண்மையில் அவற்றை காட்டிலும் சொந்த ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிக பிரபலமான கிளாசிக் 350 மாடல் தான் ஹண்டர் 350-க்கு பலத்த போட்டியாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஒரே என்ஜினை பகிர்ந்து கொண்டிருப்பது மட்டுமின்றி, ஒரே விதமான ஜே பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இவை இரண்டிற்கும் இடையே ஒற்றுமை & வேற்றுமைகளை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது? ஒற்றுமைகள் & வேற்றுமைகள்...

என்ஜின் & செயல்படுதிறன்

ஏற்கனவே கூறியதுபோல் கிளாசிக் 350-இன் 349சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது? ஒற்றுமைகள் & வேற்றுமைகள்...

5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் இந்த இரு பைக்குகளிலும் வழங்கப்பட்டாலும், புதிய ஹண்டர் 350-இல் சற்று திருத்தியமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளதாக அறிமுகத்தின்போது ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால் பயணத்தின்போது கிளாசிக் 350 உடன் ஒப்பிடுகையில் புதிய ஹண்டர் பைக்கில் வித்தியாசமான அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது? ஒற்றுமைகள் & வேற்றுமைகள்...

இயந்திர பாகங்கள்

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த சில வருடங்களாக தனது புதிய பைக்குகளை ஜே பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைத்து வருகிறது. இதன்படி புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க, இதே ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு ஹண்டர் 350 தற்போது வெளிவந்துள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது? ஒற்றுமைகள் & வேற்றுமைகள்...

இருப்பினும் கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் பைக்கின் முன்பக்கம் கிட்டத்தட்ட 15மிமீ தரையை நோக்கி தாழ்வானது. அதேபோல் கிளாசிக் 350-இல் 19-இன்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்க, ஹண்டர் 350-இல் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய மாற்றங்களினால் நகர்புறத்திற்கு ஏற்றதாக ஹண்டர் 350 விளங்குகிறது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது? ஒற்றுமைகள் & வேற்றுமைகள்...

சஸ்பென்ஷன் & பிரேக்குகள்

சஸ்பென்ஷனுக்கு இந்த இரு பைக்குகளிலும் ஒரே மாதிரியாக முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக்குகளுமே வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் பிரேக் பாகங்களிலும் இரண்டும் ஒத்து காணப்படுகின்றன.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது? ஒற்றுமைகள் & வேற்றுமைகள்...

கிளாசிக் 350 & ஹண்டர் 350 என இரு பைக்குகளின் விலை குறைவான வேரியண்ட்களில் பின் சக்கரத்தில் ட்ரம் பிரேக்கையும், விலைமிக்க வேரியண்ட்களில் டிஸ்க் பிரேக்கையும் பெறலாம். ஆனால் பிரேக்குகளின் அளவுகள் இவற்றில் வேறுப்படுகின்றன. அதாவது, ஹண்டர் 350-இல் பிரேக் ரோட்டாரின் அளவு 240மிமீ, கிளாசிக் 350-இல் 270மிமீ ஆகும். முன்பக்க 300மிமீ டிஸ்க் பிரேக்கில் மாற்றமில்லை.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது? ஒற்றுமைகள் & வேற்றுமைகள்...

தொழிற்நுட்ப அம்சங்கள்

புதிய ஹண்டர் 350 பைக்கில் சார்ஜிங் வசதி கொடுக்கப்படவில்லை. ஆனால் 2021 செப்டம்பரில் வெளிவந்த புதிய தலைமுறை கிளாசிக் 350-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்பீடோ மீட்டர் & ஓடோ மீட்டர் இரண்டும் முறையே அனலாக் & டிஜிட்டல் தரத்தில் இந்த பைக்குகளில் வழங்கப்படுகின்றன.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது? ஒற்றுமைகள் & வேற்றுமைகள்...

டச்சோ மீட்டர் ஆனது கிளாசிக் 350-இல் வழங்கப்படுவதில்லை. ஆனால் ஹண்டரில் ராயல் என்பீல்டு நிறுவனம் டிஜிட்டலில் கொடுத்துள்ளது. அதேபோல் புதிய ஹண்டர் 350 பைக்கின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ட் ஸ்க்ரீன் ஆனது கிளாசிக் மாடலில் வழங்கப்படுவதில்லை. பின் இருக்கை பயணிக்கான ஃபுட் ரெஸ்ட்டை ஹண்டர் மாடல் மட்டும் பெறுகிறது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது? ஒற்றுமைகள் & வேற்றுமைகள்...

முடிவுரை

வழக்கமான ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலில் இருந்து வித்தியாசமான, இளமையான தோற்றம் கொண்ட பைக்கை வாங்க நினைப்போர்க்கு ஹண்டர் 350 சரியான தேர்வாகும். விலை & எடையிலும் புதிய ஹண்டர் 350 மிகவும் குறைவாக உள்ளது. எந்த அளவிற்கு என்றால், கிளாசிக் 350-இன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.10 லட்சம் என்ற அளவில் இருந்து ஆரம்பிக்க, ஹண்டர் 350 ரூ.1.49 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.

Most Read Articles
English summary
Royal enfield classic 350 vs new hunter 350
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X