ஒட்டுமொத்த இளைஞர்களும் சொக்கிபோக போறாங்க! ஒத்த சீட் கொண்ட பாபர் ரக பைக் உற்பத்தியில் ராயல் என்பீல்டு..

ராயல் என்பீல்டு நிறுவனம் புதுமுக வாகனங்களைக் களமிறக்குவதில் மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மற்றுமொரு புதிய தயாரிப்பையும் அந்நிறுவனம் நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் ஓர் புதுமுக மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் நிறுவனத்தின் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் அளவுகடந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பே சூப்பர் மீட்டியோர் 650 மோட்டார்சைக்கிளை நாட்டில் பொதுப் பார்வைக்குக் கொண்டு வந்தது.

பாபர் ஸ்டைல் பைக்

இந்த பைக்கிற்கு இந்தியாவில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையிலேயே கோவாவில் நடைபெற்ற 2022 ரைடர் மேனியா வாயிலாகவே சூப்பர் மீட்டியோர் 650 பைக் வெளியீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரத்யேகமாக அந்த நிகழ்விலேயே புக்கிங் பணிகள் தொடங்கின. ஆனால், அங்கு பங்குபெற்றவர்களால் மட்டுமே புக்கிங்கை மேற்கொள்ள முடியும் என்ற நிபந்தனையை நிறுவனம் நிர்ணயித்து. இது அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்தது.

அனைவரும் இந்த பைக்கை புக் செய்து கொள்ள இன்னும் சில வாரங்கள் ஆகும். ஆம், நாடு தழுவிய புக்கிங்கை இன்னும் நிறுவனம் தொடங்கவில்லை. அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த பணிகள் தொடங்கப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலேயே யாருமே எதிர்பார்த்திராத ஓர் நடவடிக்கையாக நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் பாபர் ஸ்டைலில் இருக்கும் என கூறப்படுகின்றது.

இதுவும் இந்தியாவில் அதிகம் டிமாண்டைப் பெற்று வரும் 350 சிசி பிரிவை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட இருக்கின்றது. மேலும், நிறுவனத்தின் புகழ்பெற்ற ஜே பிளாட்பாரத்தில் வைத்தே இந்த வாகனத்தை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்க இருக்கின்றது. இதுதவிர வேறு எந்த தகவலும் பாபர் ஸ்டைலில் உருவாக்கப்பட்டு வரும் பைக் பற்றி வெளியாகவில்லை. வெகு விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், இப்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கிளாசிக் 350 பைக்கின் சிறப்பம்சங்களைத் தாங்கிய வாகனமாக அது உருவாக்கப்பட இருப்பதாக தெரிவிக்கின்றன. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிளை தழுவி புதிய பாபர் ஸ்டைல் மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட இருப்பது ஒட்டுமொத்த ராயல் என்பீல்டு டூ-வீலர் பிரியர்களையும் குஷியில் ஆழ்த்தியிருக்கின்றது. இந்த வாகனம் ஒற்றை இருக்கை வசதி மற்றும் வட்ட வடிவை ஹெட்லைட் உடன் உருவாகிக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

ஆகையால், தற்போது விற்பனையில் உள்ள பிற ராயல் என்பீல்டு தயாரிப்புகளில் இருந்து கணிசமாக இந்த வாகனம் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூடுதலாக, டியர் டிராப் ஸ்டைல் ஃப்யூவல் டேங்க், ஏப் ஹேங்கர் ஹேண்டில்பார், டெயில் லைட்டை தாங்கிய ஃபெண்டர் மற்றும் ஒயர் ஸ்போக் வீல்கள் உள்ளிட்ட அம்சங்களும் புதிய பாபர் ஸ்டைல் மோட்டார்சைக்கிளில் இடம் பெற இருக்கின்றன.

இதுதவிர, முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ட்வின் ரியர் ஸ்பிரிங்கும் இடம் பெற உள்ளன. இத்துடன், டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் செட்-அப்புகளும் புதிய பாபர் ஸ்டைல் மோட்டார்சைக்கிளில் எதிர்பார்க்கப்படுகின்றது. எஞ்ஜினை பொருத்தவரை நிறுவனம் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு மோட்டாரையே பயன்படுத்த இருக்கின்றது. இந்த மோட்டார் 20 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளுடனேயே புதிய பாபர் ஸ்டைல் மோட்டார்சைக்கிள் எதிர்பார்க்கப்படுகின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய பாபர் ஸ்டைல் மோட்டார்சைக்கிளை மட்டுமில்லைங்க புதிதாக ஹிமாலயன் அடிப்படையிலான எலெக்ட்ரிக் பைக்கையும் இந்தியாவில் வெளியீடு செய்ய இருக்கின்றது. தற்போது நிறுவனம் இந்த பைக்கின் உருவாக்க பணியிலும் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஆகையால், கூடிய விரைவில் அட்வென்சர் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் வகையில் நிறுவனம் எலெக்ட்ரிக் ஹிமாலயன் சந்தையில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Source: bikewale

Most Read Articles
English summary
Royal enfield developping bobber style bike
Story first published: Tuesday, November 29, 2022, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X