இப்படி ஒரு ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக் வரப்போகுதா! சந்தோஷத்தில் தலை, கால் புரியாமல் குதிக்கும் ரசிகர்கள்!

இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் உலக அளவில் மிகவும் பிரபலமாக திகழ்கிறது. பாரம்பரியமும், இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ற நவீனமும் கலந்த ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு பல்வேறு நாடுகளின் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு காணப்படுகிறது.

தற்போதைய நிலையில் கிளாசிக் 350 (Classic 350), மீட்டியோர் 350 (Meteor 350), புல்லட் 350 (Bullet 350), இன்டர்செப்டார் 650 (Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) மற்றும் ஹிமாலயன் (Himalayan) என ஏராளமான பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வெகு சமீபத்தில் சூப்பர் மீட்டியோர் 650 (Super Meteor 650) என்ற பைக்கையும் கூட ராயல் என்பீல்டு நிறுவனம் பொது பார்வைக்கு கொண்டு வந்தது.

இப்படி ஒரு ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக் வரப்போகுதா! சந்தோஷத்தில் தலை, கால் புரியாமல் குதிக்கும் ரசிகர்கள்!
Image used for representation purpose only

ஆனால் உலகம் வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வரும் நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனம் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் பைக்கை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் (Harley-Davidson) போன்ற நிறுவனங்கள் கூட எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்து விட்டன. எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் இருந்தும் எலெக்ட்ரிக் பைக்குகளை வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் நிறைய பைக்குகளின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை சந்தைப்படுத்துவது குறித்து தற்போது பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், ஹிமாலயன் பைக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் ஒன்று என கூறப்படுகிறது. ராயல் என்பீல்டு ஹிமாலயன், அட்வென்ஜர் ரகத்தை சேர்ந்த பைக் (Adventure Bike) ஆகும். எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ராயல் என்பீல்டு தன்னை பிரீமியம் நிறுவனமாக நிலை நிறுத்தி கொள்வதற்கு விரும்புகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த யுக்திக்கு, ஹிமாலயன் எலெக்ட்ரிக் பைக் உதவி செய்யலாம். ஏனெனில் நாங்கள் ஏற்கனவே கூறியபடி, இது அட்வென்ஜர் பைக் ஆகும். எனவே தொலைதூர பயணங்களை மேற்கொள்பவர்கள் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை அதிகமாக பயன்படுத்துவார்கள். தொலைதூர பயணங்களை மேற்கொள்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென்றால், ரேஞ்ச் (Range) அதிகமாக இருப்பது அவசியம். அப்படியானால் ராயல் என்பீல்டு நிறுவனம் பெரிய பேட்டரிகளை பொருத்தியாக வேண்டும்.

இதன் காரணமாக ராயல் என்பீல்டு ஹிமாலயன் எலெக்ட்ரிக் பைக்கின் விலை மிகவும் அதிகமாக இருக்கும். எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தால் இதனை பிரீமியம் எலெக்ட்ரிக் பைக்காக நிலை நிறுத்த முடியும். பெரிய பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் கூட, ஹிமாலயன் எலெக்ட்ரிக் பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் சிறப்பாக இருக்க வேண்டும் என ராயல் என்பீல்டு நிறுவனம் விரும்புகிறது. அட்வென்ஜர் பைக்குகளுக்கு க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மிகவும் முக்கியமான ஒன்று என்பதால், ராயல் என்பீல்டு நிறுவனம் அந்த விஷயத்தில் தெளிவாக உள்ளது.

எனவே நல்ல க்ரவுண்ட் க்ளியரன்ஸ் இருக்கும்படியான வடிவமைப்பில் நாம் ஹிமாலயன் எலெக்ட்ரிக் பைக் எதிர்பார்க்கலாம். ஆனால் ராயல் என்பீல்டு ஹிமாலயன் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் நீண்ட நாட்கள் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது 2025 அல்லது 2026ம் ஆண்டுதான் ஹிமாலயன் எலெக்ட்ரிக் பைக் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அதன்பின் இறுதி தயாரிப்பு நிலை வெர்ஷன் விற்பனைக்கு வருவதற்கு மேலும் சில காலம் ஆகலாம். ஆனால் இந்த தகவல்களை ராயல் என்பீல்டு நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் 650 சிசி செக்மெண்ட்டில் பல்வேறு புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் புல்லட் 350 பைக்கின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளையும் ராயல் என்பீல்டு நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் இருந்து ஏராளமான புதிய பைக்குகளை நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Royal enfield himalayan electric to debut this year
Story first published: Sunday, November 27, 2022, 23:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X