ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!

ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கிற்கு புதியதாக இரு நிறதேர்வுகளை வழங்கியுள்ளது. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!

இந்தியாவில் ஒரு சமயத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மட்டுமே இளைஞர்களின் ஃபேவரட் மோட்டார்சைக்கிள்களாக விற்பனையாகும் என்ற நிலை இருந்தது. ஆனால் அதனை அட்வென்ச்சர் பைக்கிற்கும் சேர்த்து மாற்றிய பெருமை ராயல் என்பீல்டு ஹிமாலயனையே சேரும். ஹிமாலயன் ஒன்றும் இந்தியாவின் முதல் அட்வென்ச்சர் பைக் கிடையாது.

ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!

இதற்கு முன்னரே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இம்பல்ஸ் பைக்கை அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக களமிறக்கியது. ஆனால் குறைந்த சிசி என்ஜினினால் கடைசி வரையில் இம்பல்ஸால் வாடிக்கையாளர்களை கவர முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஹீரோ இம்பல்ஸின் தோற்றம் சிலரை வெகுவாக கவர்ந்தது.

ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!

இதனை சரியாக புரிந்துக்கொண்ட ராயல் என்பீல்டு நிறுவனம் எந்தவொரு சமரசமுமின்றி நேரடியாக ஆற்றல்மிக்க 411சிசி-யில் ஹிமாலயன் என்ற பெயரில் தனது முதல் அட்வென்ச்சர் பைக்கை கொண்டுவந்தது. ஹீரோ மோட்டோகார்பை போல, ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கும் ரசிகர்கள் ஏராளம் என்பதால், எதிர்பார்த்தப்படி ஹிமாலயன் செம்ம ஹிட்.

ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!

இத்தகைய அட்வென்ச்சர் பைக்கில் தான் தற்போது டுனே ப்ரவுன் மற்றும் கிளாசியல் நீலம் என்ற இரு புதிய நிறத்தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் டுனே ப்ரவுன் ஆனது முன்பு விற்பனையில் இருந்த ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கின் டெசார்ட் ஸ்ட்ரோமை ஒத்து காணப்படுகிறது. அதாவது அதேபோன்று பாலைவன மணலின் மஞ்சள் நிறத்தில் ஹிமாலயனில் வழங்கப்பட்டுள்ளது.

ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!

இதேபோன்றதான நிறத்தேர்வு விற்பனையில் உள்ள கிளாசிக் 350 பைக்கிலும் டெசார்ட் சாண்ட் என்கிற பெயரில் கிடைக்கிறது. ஆனால் இந்த கிளாசிக் பைக்குகளில் இருந்து சற்று வித்தியாசப்படும் வகையில் ஹிமாலயனின் டுனே ப்ரவுன் பெயிண்ட் தேர்வில் சிறிது பச்சை நிறமும் திட்டுத்திட்டாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனாலேயே ஹிமாலயனில் இந்த நிறத்தேர்வு கவர்ச்சியானதாகவும், புத்துணர்ச்சியானதாகவும் காட்சியளிக்கிறது.

ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!

ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கிற்கு புதியதாக வழங்கப்பட்டுள்ள மற்றொரு நிறத்தேர்வான கிளாசியல் நீலமும் கிளாசிக் 500 மற்றும் கிளாசிக் 350 பைக்குகளுக்கு வழங்கப்பட்ட லாகூன் நீல நிறத்தேர்வை ஒத்து காணப்படுகிறது. ஆனால் ஹிமாலயனில் இந்த கிளாசியல் நீல நிறத்தேர்வில் நீல நிறத்துடன் வேறெந்த நிறமும் கலந்திருக்கவில்லை.

ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!

இந்த 2 புதிய நிறத்தேர்வுகளையும் சேர்த்து இனி ராயல் என்பீல்டின் இந்த அட்வென்ச்சர் பைக் மொத்தம் 9 விதமான நிறத்தேர்வுகளில் கிடைக்கும். இந்த புதிய நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் பைக்குகள் தற்போதைக்கு டெல்லி உள்பட நாட்டின் மிக சில டீலர்ஷிப் மையங்களில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொச்சிமச்சான் என்கிற டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள படத்தினை தான் மேலே காண்கிறீர்கள்.

ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!

Image Courtesy: KochiMachan, TURBOCHARGED

ஆனால் கூடிய விரைவில் அனைத்து டீலர்ஷிப் மையங்களிலும் இந்த புதிய நிறங்களில் ஹிமாலயன் பைக்குகள் அலங்கரிக்கும். ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகளுக்கு விற்பனையில் போட்டி என்றுபார்த்தால், எதுவுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் முழு-அட்வென்ச்சர் பைக்காக பிரபலமாகிவரும் ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 மாடல்களுக்கு சற்று போட்டியினை அளிக்கின்றன.

ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!

அதேபோல் விலையை பொறுத்து பார்க்கும்போதும், கேடிஎம் 390 அட்வென்ச்சர், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் உள்ளிட்டவை ஹிமாலயனுக்கு போட்டியாக விளங்குகின்றன. இதில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராடின் ஜி310 ஜிஎஸ் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களும் மிக சமீபத்தில் புதிய நிறத்தேர்வை பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனுடன் ஜி310ஆர் நாக்டு பைக்கிற்கும் புதிய நிறத்தேர்வுகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கியுள்ளது.

ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!

ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் ஹிமாலயன் பைக்கை முதன்முதலாக 2016இல் அறிமுகப்படுத்தியது. அப்போது இந்த அட்வென்ச்சர் பைக்கில் பிஎஸ்3 என்ஜினே வழங்கப்பட்டது. அதன்பின் 2019இல் ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 அறிமுகமாகும் வரையில் விற்பனையில் போட்டியில்லா மாடலாக நாடு முழுவதும் ஹிமாலயன் பிரபலமாகியது. இதனாலேயே 450சிசி என்ஜினுடனும் அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு நிறுவனம் தயாராகி வருகிறது.

Most Read Articles
English summary
Royal enfield himalayan get two new colours
Story first published: Saturday, July 2, 2022, 19:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X