ஒருவேல எல்லாரும் லடாக் ட்ரிப் போக ஆரம்பிச்சுட்டாங்களா? தாறுமாறாக உயரும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் விற்பனை!

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை உயர்ந்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒருவேல எல்லாரும் லடாக் ட்ரிப் போக ஆரம்பிச்சுட்டாங்களா? தாறுமாறாக உயரும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் விற்பனை!

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த டிசம்பர் மாதம் 65,194 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 65,492 ஆக இருந்தது. அதாவது ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை 0.46 சதவீதம் குறைந்துள்ளது. வருடாந்திர ரீதியில் சரிவு என்றாலும் மாதாந்திர ரீதியில் ராயல் என்பீல்டு நிறுவனம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஒருவேல எல்லாரும் லடாக் ட்ரிப் போக ஆரம்பிச்சுட்டாங்களா? தாறுமாறாக உயரும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் விற்பனை!

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் இந்திய சந்தையில் 44,830 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 65,194 ஆக உயர்ந்துள்ளது. இது 45.4 சதவீத வளர்ச்சியாகும். ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.

ஒருவேல எல்லாரும் லடாக் ட்ரிப் போக ஆரம்பிச்சுட்டாங்களா? தாறுமாறாக உயரும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் விற்பனை!

இதில், ஹிமாலயனும் ஒன்று. கடந்த டிசம்பர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் அட்வென்ஜர் டூரர் பைக் 390 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 941 ஹிமாலயன் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 4,611 ஆக உயர்ந்துள்ளது.

ஒருவேல எல்லாரும் லடாக் ட்ரிப் போக ஆரம்பிச்சுட்டாங்களா? தாறுமாறாக உயரும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் விற்பனை!

இது 390 சதவீத வளர்ச்சியாகும். உள்நாட்டு சந்தையில் மட்டுமல்லாது ஏற்றுமதியிலும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,042 ஹிமாலயன் பைக்குகளை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2,487 ஆக உயர்ந்துள்ளது. இது 138.8 சதவீத வளர்ச்சியாகும்.

ஒருவேல எல்லாரும் லடாக் ட்ரிப் போக ஆரம்பிச்சுட்டாங்களா? தாறுமாறாக உயரும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் விற்பனை!

எனவே இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் ஏற்றுக்கொள்ளப்பட்ட தயாரிப்பு என்பது வலுவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் சிறிய அளவில் அப்டேட் செய்யப்பட்டது. அப்போது புதிய வண்ண தேர்வுகளை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியது.

ஒருவேல எல்லாரும் லடாக் ட்ரிப் போக ஆரம்பிச்சுட்டாங்களா? தாறுமாறாக உயரும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் விற்பனை!

அத்துடன் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியும் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் மீட்டியோர் 350 பைக்கிற்கு அடுத்தபடியாக ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியை பெற்ற இரண்டாவது ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமையை ஹிமாலயன் தன்வசமாக்கியது. தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் 2.14 லட்ச ரூபாய் முதல் 2.22 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒருவேல எல்லாரும் லடாக் ட்ரிப் போக ஆரம்பிச்சுட்டாங்களா? தாறுமாறாக உயரும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் விற்பனை!

இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் 411 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, எஸ்ஓஹெச்சி, 4 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 24.3 பிஹெச்பி பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஒருவேல எல்லாரும் லடாக் ட்ரிப் போக ஆரம்பிச்சுட்டாங்களா? தாறுமாறாக உயரும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் விற்பனை!

வட்ட வடிவ ஹெட்லேம்ப், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம், ஹசார்டு லேம்ப் ஸ்விட்ச், ஸ்பிளிட் சீட் ஆகியவையும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் முக்கிய அம்சங்களாக உள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் காலங்களில் இந்திய சந்தையில் இன்னும் நிறைய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

ஒருவேல எல்லாரும் லடாக் ட்ரிப் போக ஆரம்பிச்சுட்டாங்களா? தாறுமாறாக உயரும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் விற்பனை!

இதில், ஸ்கிராம் 411 (Scram 411) பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பைக் இந்திய சந்தையில் அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து ஹண்டர் 350 ஸ்கிராம்ப்ளர் (Hunter 350 Scrambler) மற்றும் சூப்பர் மீட்டியோர் 350 க்ரூஸர் (Super Meteor 650 Cruiser) ஆகிய பைக்குகளும் விற்பனைக்கு வரவுள்ளன.

ஒருவேல எல்லாரும் லடாக் ட்ரிப் போக ஆரம்பிச்சுட்டாங்களா? தாறுமாறாக உயரும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் விற்பனை!

ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள இந்த பைக்குகளுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதுதவிர ஹிமாலயன் 450 (Himalayan 450) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பைக்கில் லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஒருவேல எல்லாரும் லடாக் ட்ரிப் போக ஆரம்பிச்சுட்டாங்களா? தாறுமாறாக உயரும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் விற்பனை!

சக்தி வாய்ந்த இந்த இன்ஜின் அதிகபட்சமாக 40 பிஹெச்பி பவரை உருவாக்க கூடியதாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேடிஎம் நிறுவனத்தின் 390 அட்வென்ஜர் (KTM 390 Adventure) பைக்குடன் இது சந்தையில் போட்டியிடும். ஆனால் அடுத்த ஆண்டின் ஏதேனும் ஒரு சமயத்தில்தான் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Royal enfield himalayan sales increased by 390 per cent details here
Story first published: Tuesday, January 25, 2022, 23:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X