யெஸ்டி அட்வென்ச்சர் பைக் vs ராயல் என்பீல்டு ஹிமாலயன்!! மலிவான அட்வென்ச்சர் பைக்கில் சிறந்தது எது?

சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு பல மாதங்களாகினாலும் விற்பனையில் தொடர்ந்து வெற்றிக்கரமாக இருக்கும் அட்வென்ச்சர் பைக் ராயல் என்பீல்டு ஹிமாலயன் ஆகும். குறிபிட்ட கால இடைவெளியில் இந்த பைக்கிற்கு அப்டேட்டை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கி வந்தாலும், இதன் பெற்றிக்கு மற்றொரு வலுவான காரணமும் உள்ளது. அதுதான் சந்தையில் போட்டியில்லாமை.

யெஸ்டி அட்வென்ச்சர் பைக் vs ராயல் என்பீல்டு ஹிமாலயன்!! மலிவான அட்வென்ச்சர் பைக்கில் சிறந்தது எது?

இந்த 2022ஆம் ஆண்டு துவக்கம் வரையில் இந்த ராயல் என்பீல்டு அட்வென்ச்சர் பைக்கிற்கு விற்பனையில் போட்டி மாடல் எதுவும் இல்லை. ஆனால் இந்த நிலை நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. ஏனெனில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள பழமையான யெஸ்டி பிராண்டில் இருந்து ஹிமாலயன் பைக்கிற்கு போட்டியாக சுட, சுட புதிய அட்வென்ச்சர் பைக் ஒன்று களமிறக்கப்பட்டுள்ளது. இவை இவை இரண்டிற்கும் இடையேயான வித்தியாசங்களை பகுதி வாரியாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யெஸ்டி அட்வென்ச்சர் பைக் vs ராயல் என்பீல்டு ஹிமாலயன்!! மலிவான அட்வென்ச்சர் பைக்கில் சிறந்தது எது?

ஸ்டைல்

பைக்கின் ஸ்டைல் என்பது வாடிக்கையாளரின் இரசனைக்கு ஏற்றது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஹிமாலயன் & யெஸ்டி அட்வென்ச்சர் என இரண்டுமே தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன.

யெஸ்டி அட்வென்ச்சர் பைக் vs ராயல் என்பீல்டு ஹிமாலயன்!! மலிவான அட்வென்ச்சர் பைக்கில் சிறந்தது எது?

யெஸ்டி அட்வென்ச்சர் பைக் சமீபத்திய அறிமுகம் என்பதால், அது கண்ணை கவரும் வகையில் கவர்ச்சியானதாக தெரியலாம். அதற்காக ஹிமாலயனின் தோற்றத்தை எந்த குறையும் கூறிவிட முடியாது. யெஸ்டி அட்வென்ச்சரில் மாடர்ன் தொடுதல்களாக ஹெட்லைட், டெயில்லைட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் என அனைத்தும் எல்இடி-இல் வழங்கப்பட்டுள்ளன.

யெஸ்டி அட்வென்ச்சர் பைக் vs ராயல் என்பீல்டு ஹிமாலயன்!! மலிவான அட்வென்ச்சர் பைக்கில் சிறந்தது எது?

என்ஜின் அமைப்பு

ராயல் என்பீல்டு ஹிமாலயனில் 411சிசி, ஆயில்-கூல்டு, SOHC என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம்-இல் 23.98 பிஎச்பி மற்றும் 4,500 ஆர்பிஎம்-இல் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

யெஸ்டி அட்வென்ச்சர் பைக் vs ராயல் என்பீல்டு ஹிமாலயன்!! மலிவான அட்வென்ச்சர் பைக்கில் சிறந்தது எது?

ஆனால் அதிநவீன DOHC மற்றும் லிக்யூடு-கூல்டு அமைப்பினால் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள யெஸ்டி அட்வென்ச்சரில் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 29.78 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 29.9 என்எம் டார்க் திறன் வரையில் பெறலாம். இத்தனைக்கும் இந்த அட்வென்ச்சர் பைக்கில் அளவில் சிறிய 334சிசி என்ஜின் தான் வழங்கப்படுகிறது.

யெஸ்டி அட்வென்ச்சர் பைக் vs ராயல் என்பீல்டு ஹிமாலயன்!! மலிவான அட்வென்ச்சர் பைக்கில் சிறந்தது எது?

சேசிஸ் & சஸ்பென்ஷன்

ஹிமாலயனை அரை-இரட்டை சட்டகத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் கட்டமைக்கிறது. ஆனால் புதிய அறிமுகமான யெஸ்டி அட்வென்ச்சர் பைக் ஆனது இரட்டை-தொட்டில் சட்டகத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவை இரண்டும் வெவ்வேறான சேசிஸ் வகையினை கொண்டுள்ளன. இவற்றில் எது சிறந்தது என்பதை இரண்டையும் ஓட்டி பார்க்காமல் கூற இயலாது.

யெஸ்டி அட்வென்ச்சர் பைக் vs ராயல் என்பீல்டு ஹிமாலயன்!! மலிவான அட்வென்ச்சர் பைக்கில் சிறந்தது எது?

ஆனால் இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சஸ்பென்ஷன் அமைப்புகளை பெற்றுள்ளன. அட்வென்ச்சர் பைக்குகள் என்பதால் ஏறக்குறையாக ஒரே மாதிரியாக முன்பக்கத்தில் 200மிமீ-இல் டிராவல் உடன் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 180மிமீ டிராவல் உடன் மோனோ சஸ்பென்ஷன் அமைப்பும் வழங்கப்பட்டுள்ளன.

யெஸ்டி அட்வென்ச்சர் பைக் vs ராயல் என்பீல்டு ஹிமாலயன்!! மலிவான அட்வென்ச்சர் பைக்கில் சிறந்தது எது?

வசதிகள் & தொழிற்நுட்பங்கள்

சந்தைக்கு புதிய அறிமுகம் என்பதால், நாம் எதிர்பார்த்ததை போல் ஹிமாலயன் மாடலை காட்டிலும் யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கில் சில கூடுதல் வசதிகளும், தொழிற்நுட்பங்களும் அதிகம் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல் யெஸ்டி மாடலில் சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள விளக்குகள் எல்இடி தரத்திலானவை. மேலும், 3 ரைட் மோட்கள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடி, ஒளி பிரகாசத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் போன்றவற்றையும் யெஸ்டி அட்வென்ச்சர் பைக் பெற்றுள்ளது.

யெஸ்டி அட்வென்ச்சர் பைக் vs ராயல் என்பீல்டு ஹிமாலயன்!! மலிவான அட்வென்ச்சர் பைக்கில் சிறந்தது எது?

விலை

இந்திய வாடிக்கையாளர்களை பொறுத்தவரையில் பைக்கின் விலை மிகவும் முக்கியமாகும். ஆனால் உண்மையில் இதில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் யெஸ்டி அட்வென்ச்சரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.09 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யெஸ்டி அட்வென்ச்சர் பைக் vs ராயல் என்பீல்டு ஹிமாலயன்!! மலிவான அட்வென்ச்சர் பைக்கில் சிறந்தது எது?

ஜாவா பிராண்டை போல் பழமை வாய்ந்த யெஸ்டி பிராண்டையும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தான் நிர்வகிக்க உள்ளது. யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கை காட்டிலும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் விலை கிட்டத்தட்ட ரூ.10,000 அளவில் அதிகமாக ரூ.2,14,869 ஆக உள்ளது. மீண்டும் உயிர்பெற்றுள்ள யெஸ்டி பிராண்டில் இருந்து இந்த அட்வென்ச்சர் பைக் மட்டுமின்றி ஸ்க்ராம்ப்ளர் பைக் ஒன்றும், க்ரூஸர் பைக் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Royal enfield himalayan vs newyezdi adventure
Story first published: Friday, January 14, 2022, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X