இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350). இந்த வருடத்தின் மிக முக்கியமான பைக்குகளில் ஒன்றாக ராயல் என்பீல்டு ஹண்டர் 350 கருதப்படுகிறது. தற்போது ஹண்டர் 350 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் முழுமையாக தயாராகி விட்டது.

இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் நாளை (ஆகஸ்ட் 7) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த பைக்கில், 349 சிசி, சிங்கிள் சிலிண்டர், 2-வால்வு, 4-ஸ்ட்ரோக், எஸ்ஓஹெச்சி, ஃப்யூயல் இன்ஜெக்டட், ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்மில் 20.2 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். இந்த பைக்கின் வீல்பேஸ் நீளம் 1,370 மிமீ ஆகும். அதே நேரத்தில் இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 150 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 800 மிமீ ஆகவும் இருக்கும்.

இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!

ஹண்டர் 350 பைக் ஒரு லிட்டருக்கு 36.2 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 114 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டிருக்கும்.

இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!

அத்துடன் முன் மற்றும் பின் பகுதிகளில் 17 இன்ச் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும். முன் பகுதியில் 110/70 செக்ஸன் டயரும், பின் பகுதியில் 140/70 செக்ஸன் டயரும் வழங்கப்பட்டிருக்கும். இரு பக்கமும் ட்யூப்லெஸ் டயர்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கருப்பு நிற சைலென்சர், சிங்கிள்-பீஸ் சீட், ஸ்பிளிட் க்ராப் ரெயில்கள் ஆகியவையும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!

மேலும் வட்ட வடிவ ஹாலோஜன் ஹெட்லேம்ப், ஹாலோஜன் டெயில்லேம்ப் ஆகியவையும் புத்தம் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் இடம்பெற்றிருக்கும். இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் 350, கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 போன்ற பைக்குகளுக்கு, ஹண்டர் 350 பைக் விற்பனையில் சவால் அளிக்கும்.

இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணம், அதன் விலை. ஆம், ஹண்டர் 350 பைக்தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக்காக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பைக்கின் ஆரம்ப விலை 1.4 லட்ச ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!

ஆனால் ஹண்டர் 350 பைக்கின் விலை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ராயல் என்பீல்டு நிறுவனம் நாளைதான் வெளியிடும். விலை குறைவான பைக்காக இருக்கும் என்பதால், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்கை வாங்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் உள்ளது.

இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!

ஆனால் அதிக விலை காரணமாக பலராலும் அந்த கனவை நிறைவேற்றி கொள்ள முடியாத சூழல் காணப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். தற்போதே ராயல் என்பீல்டு ஷோரூம்களில், ஹண்டர் 350 பைக்கை பற்றி பலரும் ஆர்வத்துடன் விசாரித்து வருகின்றனர்.

இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!

ராயல் என்பீல்டு நிறுவனம் இதற்கு அடுத்தபடியாக புல்லட் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. 350 சிசி செக்மெண்ட்டில் 2 புதிய பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதால், இந்த செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!

350 சிசி செக்மெண்ட் மட்டுமல்லாது, 650 சிசி செக்மெண்ட்டிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்த செக்மெண்ட்டில் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில், மேலும் பல்வேறு புதிய பைக்குகளை களமிறக்குவதற்கும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Royal enfield hunter 350 india launch tomorrow
Story first published: Saturday, August 6, 2022, 13:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X