போட்டியாளர்களை வேட்டையாட வந்த ஹண்டர் 350... மிகவும் குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக் அறிமுகம்!

இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் காத்து கிடந்த ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போட்டியாளர்களை வேட்டையாட வந்த ஹண்டர் 350... மிகவும் குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக் அறிமுகம்!

இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் காத்து கிடந்த ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் இன்று (ஆகஸ்ட் 7) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஜே பிளாட்பார்ம் (J Platform) அடிப்படையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில், 349 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

போட்டியாளர்களை வேட்டையாட வந்த ஹண்டர் 350... மிகவும் குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக் அறிமுகம்!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்மில் 20.2 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 114 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்களை வேட்டையாட வந்த ஹண்டர் 350... மிகவும் குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக் அறிமுகம்!

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை பற்றி குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், அதன் எடைதான். ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் எடை 181 கிலோ ஆகும் (ரெட்ரோ வேரியண்ட்டின் எடை 178 கிலோ, மெட்ரோ வேரியண்ட்டின் எடை 181 கிலோ). இது ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கை விட 10 கிலோ குறைவாகும். அதே நேரத்தில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்குடன் ஒப்பிடும்போது இது 17 கிலோ குறைவாகும்.

போட்டியாளர்களை வேட்டையாட வந்த ஹண்டர் 350... மிகவும் குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக் அறிமுகம்!

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் வீல்பேஸ் நீளம் 1,370 மிமீ ஆக உள்ளது (கிளாசிக் 350 பைக்கின் வீல் பேஸ் நீளம் 1,390 மிமீ ஆகவும், மீட்டியோர் 350 பைக்கின் நீளம் 1,400 மிமீ ஆகவும் இருக்கிறது.) அதே நேரத்தில் இந்த பைக்கின் இருக்கை உயரம் 800 மிமீ ஆக உள்ளது. ரெட்ரோ, மெட்ரோ மற்றும் மெட்ரோ ரீபல் என ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த பைக்கின் ஆரம்ப விலை 1,49,900 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

போட்டியாளர்களை வேட்டையாட வந்த ஹண்டர் 350... மிகவும் குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக் அறிமுகம்!

இது ஆரம்ப நிலை ரெட்ரோ வேரியண்ட்டின் விலையாகும். அதே நேரத்தில் மெட்ரோ வேரியண்ட்டின் விலை 1,63,900 ரூபாய் ஆகவும், மெட்ரோ ரீபல் வேரியண்ட்டின் விலை 1,68,900 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜே-பிளாட்பார்ம் பைக்குகளிலேயே மிகவும் விலை குறைவான பைக் என்ற பெருமையை ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பெற்றுள்ளது.

போட்டியாளர்களை வேட்டையாட வந்த ஹண்டர் 350... மிகவும் குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக் அறிமுகம்!

இதன் உடன்பிறப்புகளான கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 பைக்குகளின் ஆரம்ப விலை முறையே 1.90 லட்ச ரூபாய் ஆகவும், 2.01 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இந்திய சந்தையில், ஹோண்டா சிபி350 ஆர்எஸ் (Honda CB350 RS), ஜாவா 42 (Jawa Forty Two) மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் (Yezdi Roadster) போன்ற பைக்குகள் உடன் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 போட்டியிடும்.

போட்டியாளர்களை வேட்டையாட வந்த ஹண்டர் 350... மிகவும் குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக் அறிமுகம்!

இதில், ஹோண்டா சிபி350 ஆர்எஸ் பைக்கின் ஆரம்ப விலை 2.03 லட்ச ரூபாய் ஆகவும், டாப் மாடலின் விலை 2.04 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. அதே நேரத்தில், ஜாவா 42 பைக்கின் ஆரம்ப விலை 1.67 லட்ச ரூபாய் ஆகவும், டாப் மாடலின் விலை 1.81 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. இதற்கிடையே யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கின் ஆரம்ப விலை 2.01 லட்ச ரூபாய் ஆகவும், டாப் மாடலின் விலை 2.09 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது.

போட்டியாளர்களை வேட்டையாட வந்த ஹண்டர் 350... மிகவும் குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக் அறிமுகம்!

எனவே போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் விலை குறைந்த பைக்காக ராயல் என்பீல்டு ஹண்டர் 350 திகழ்கிறது. மிகவும் விலை குறைவானது என்பதால், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. ராயல் என்பீல்டு நிறுவனம் இதற்கு அடுத்தபடியாக புல்லட் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Most Read Articles
English summary
Royal enfield hunter 350 launched in india
Story first published: Sunday, August 7, 2022, 20:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X