பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹண்டர்350 பைக் வெளியீடு! இந்த பைக்கை பாத்தே ஆகணும்னு காத்திட்டு இருக்கீங்களா?

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) பைக் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த இருசக்கர வாகனம் மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை பாத்தே ஆகணும்னு காத்திட்டு இருக்கீங்களா? இதோ தெள்ள தெளிவாக வீடியோல தெரியுது!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் விரைவில் ஹண்டர் 350 (Hunter 350) பைக்கை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. நிறுவனத்தின் மலிவு விலை மோட்டார்சைக்கிளாக ஹண்டர் 350 விற்பனைக்கு வர உள்ளது. இதனை அறிமுகம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் நிறுவனம் ஏற்கனவே தயார் செய்துவிட்டது.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை பாத்தே ஆகணும்னு காத்திட்டு இருக்கீங்களா? இதோ தெள்ள தெளிவாக வீடியோல தெரியுது!

இந்த நிலையிலேயே ஐஷர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் லால் ஓர் தரமான சம்பவத்தைச் செய்திருக்கின்றார். அவர், இளைஞர்களின் எதிர்பார்ப்பில் பெரிதும் இடம் பிடித்திருக்கும் ஹண்டர் 350 பைக்கை வெளியீடு செய்திருக்கின்றார். இதுவே இந்த மோட்டார்சைக்கிள் முழுமையாகக் காட்சியளிப்பது முதல் முறையாகும்.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை பாத்தே ஆகணும்னு காத்திட்டு இருக்கீங்களா? இதோ தெள்ள தெளிவாக வீடியோல தெரியுது!

இதற்கு முன்னதாக மறைப்புகளுடன் மட்டுமே இந்த பைக் காட்சியளித்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. பைக்கை முழுமையாகக் காட்சியளிக்கக் கூடிய அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பைக்கின் விலை மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றிய விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை பாத்தே ஆகணும்னு காத்திட்டு இருக்கீங்களா? இதோ தெள்ள தெளிவாக வீடியோல தெரியுது!

இதுகுறித்த தகவல் வரும் 7ம் தேதி அன்றே வெளியிடப்பட இருக்கின்றது. அன்றைய தினத்திலேயே இருசக்கர வாகனம் விற்பனைக்கான அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக பெற உள்ளது. நிறுவனம் இருசக்கர வாகனத்தின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அது, ரூ. 1.06 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை பாத்தே ஆகணும்னு காத்திட்டு இருக்கீங்களா? இதோ தெள்ள தெளிவாக வீடியோல தெரியுது!

ஆகையால், பைக்கின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க இருசக்கர வாகனம் அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கிய வாகனமாகவும் விற்பனைக்கு வர இருக்கின்றது.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை பாத்தே ஆகணும்னு காத்திட்டு இருக்கீங்களா? இதோ தெள்ள தெளிவாக வீடியோல தெரியுது!

ஹண்டர் ஓர் ஸ்கிராம்ப்ளர் ரக இருசக்கர வாகனமாகும். இந்த தோற்றத்தை கூடுதல் மெருகேற்றும் வகையிலேயே அனைத்து அம்சங்களும் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, டியர்டிராப் ஸ்டைலிலான ஃப்யூவல் டேங்க், டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் பைக்குகளில் பயன்படுத்துவதைப் போன்ற ஃபிளாட்டான டயர்கள் மற்றும் ட்யூவல் டோன் நிறத்தால் பைக் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

இதுபோதாதென்று இருசக்கர வாகனத்தை கஸ்டமைஸ் வாயிலாகவும் பல மடங்கு சிறப்பானதாக மாற்றிக் கொள்ளும் வசதி வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக ராயல் என்பீல்டு தெரிவித்திருக்கின்றது. புதிய ஹண்டர் 350 ரெட்ரோ மற்றும் மெட்ரோ என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை பாத்தே ஆகணும்னு காத்திட்டு இருக்கீங்களா? இதோ தெள்ள தெளிவாக வீடியோல தெரியுது!

கூடுதல் சிறப்பு தேர்வாக ஹண்டர் மெட்ரோ வேரியண்டில் சப்-வேரியண்ட் தேர்வு ஒன்று வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அது ரிபெல் எனும் பெயரில் கிடைக்கும் என கூறப்படுகின்றது. இந்த வேரியண்ட் ரீபெல் பிளாக், ரீவெல் ப்ளூ மற்றும் ரீபெல் ரெட் ஆகிய நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை பாத்தே ஆகணும்னு காத்திட்டு இருக்கீங்களா? இதோ தெள்ள தெளிவாக வீடியோல தெரியுது!

இதேபோல், மெட்ரோ வேரியண்டும் பன்முக நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இத்துடன், இரு வேரியண்டுகளுக்கும் எம்ஐஒய் எனும் சிறப்பு ஸ்கீமை அறிவித்துள்ளது. அதாவது, இந்த திட்டத்தின் வாயிலாக உங்களுக்கான ஹண்டர் 350 பைக்கை உங்களுக்கு பிடித்தவாறு மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை பாத்தே ஆகணும்னு காத்திட்டு இருக்கீங்களா? இதோ தெள்ள தெளிவாக வீடியோல தெரியுது!

ராயல் என்பீல்டு ஹண்டர் பைக்கில் 350 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் 4 ஸ்ட்ரோக் மோட்டாராகும். இந்த மோட்டாரையே மீட்டியோர் பைக்கில் ராயல் என்பீல்டு பயன்படுத்தி வருகின்றது. அதிகபட்சமாக 20 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸிலேயே இந்த மோட்டார் இயங்கும்.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை பாத்தே ஆகணும்னு காத்திட்டு இருக்கீங்களா? இதோ தெள்ள தெளிவாக வீடியோல தெரியுது!

சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் என இருவிதமான ஆப்ஷன்கள் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, ட்ரிப்பர் நேவிகேஷன், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற அம்சங்களும் இப்பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
Royal enfield hunter 350 revealed by siddhartha lal
Story first published: Friday, August 5, 2022, 13:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X