18 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனை... ராயல் என்பீல்டின் தயாரிப்பிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் ஹண்டர் 350 (Hunter 350) பைக்கிற்கு இந்திய சந்தையில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

18 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனை... ராயல் என்பீல்டின் தயாரிப்பிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 பைக்கிற்கு இந்திய சந்தையில் மிக அமோகமான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2022 ஆகஸ்டு மாதத்திலேயே அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த வாகனம் விற்பனைக்கு வருவதற்கு முன்னதாகவே இந்தியர்கள் மத்தியில் பன்மடங்கு எதிர்பார்ப்பைத் தூண்டிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

18 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனை... ராயல் என்பீல்டின் தயாரிப்பிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு!

இதே டிமாண்ட் தற்போது விற்பனைக்கு வந்த பின்னரும் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு சில வாகனங்கள் விற்பனைக்கு வருவதற்கு முன்னர் எதிர்பார்ப்பு அதிகம் நிலவும். ஆனால், விற்பனைக்கு வந்த பின்னர் அது பெரியளவில் கவராது. ஆனால், அவ்வாறு இல்லாமல் ஹண்டர் 350 பைக் இந்தியர்களின் மனதை மிக சூப்பராக கவர தொடங்கியிருக்கின்றது.

18 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனை... ராயல் என்பீல்டின் தயாரிப்பிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு!

இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2022 ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 18,197 யூனிட்டுகள் விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மிக சூப்பரான டிமாண்ட் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹண்டர் 350 நிறுவனத்தின் மிகவும் எடைக் குறைவான மோட்டார்சைக்கிள் ஆகும்.

18 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனை... ராயல் என்பீல்டின் தயாரிப்பிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு!

மேலும், புல்லட் 350-ஐக் காட்டிலும் மிக குறைவான விலைக் கொண்ட ராயல் என்பீல்டு பைக்காகவும் இது காட்சியளிக்கின்றது. இதுபோன்று காரணங்களினாலேயே ஹண்டர் 350 பைக்கிற்கு நல்ல வரவேற்பு சந்தையில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ரெட்ரோ, மெட்ரோ மற்றும் மெட்ரோ ரிபெல் ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் இப்பைக் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

18 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனை... ராயல் என்பீல்டின் தயாரிப்பிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு!

இதன் ஆரம்ப விலை ரூ.1.50 லட்சம் ஆகும். அதேவேலையில், இதன் உயர்நிலை தேர்வு ரூ. 1.69 லட்சம் என்கிற விலையில் விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த இருசக்கர வாகனத்தை ராயல் என்பீல்டு நிறுவனம் ஜே பிளாட்பாரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியிருக்கின்றது.

18 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனை... ராயல் என்பீல்டின் தயாரிப்பிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு!

ராயல் என்பீல்டு நிறுவனம் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி ஃபூயவல் இன்ஜெக்டட் ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 20 எச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

18 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனை... ராயல் என்பீல்டின் தயாரிப்பிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு!

இந்த அம்சங்களும் இருசக்கர வாகனத்தின் பக்கம் மக்கள் குவிய காரணமாக இருக்கின்றது. இதன் விற்பனை நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன மாடலான கிளாசிக் 350-இன் விற்பனையையே மிஞ்சும் அளவிற்கு உள்ளது. ஆகையால், அடுத்து வரும் நாட்களில் கிளாசிக் 350-ஐயே மிஞ்சுவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

18 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனை... ராயல் என்பீல்டின் தயாரிப்பிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு!

கிளாசிக் 350க்கு இணையான சிறப்பம்சங்களுடன் இப்பைக் விற்பனைக்குக் கிடைப்பதால் பலர் தற்போது ஹண்டர் 350-ஐ வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். இன்னும் பல காரணங்கள் இந்தியர்கள் இப்பைக்கை வாங்க காரணமாக இருக்கின்றது. 41மிமீ டெலிஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க், ட்வின் கேஸ் சார்ஜ்ட் ஷாக் அப்சார்பர் பின்பக்கத்தில் சிறந்த சஸ்பென்ஷனுக்காக வழங்கப்பட்டிருக்கின்றது.

18 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனை... ராயல் என்பீல்டின் தயாரிப்பிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு!

இதுதவிர இன்னும் பல அம்சங்கள் இந்த பைக்கில் சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக வழங்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, சிறப்பான பிரக்கிங் அனுபவத்திற்காக டூயல் சேனல் எபிஎஸ் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 300 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 270 மிமீ டிஸ்க் பின் பக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், ஃப்ளோட்டிங் டைப் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், ஸ்பிளிட் கிராப் ரெயில்கள் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

18 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனை... ராயல் என்பீல்டின் தயாரிப்பிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு!

மேலும், பைக்கின் கவர்ச்சியான தோற்றத்தை மெருகேற்றும் வகையில் வட்ட வடிவ எல்இடி டெயில் லேம்ப், கருப்பு நிறத்தினாலான அலாய் வீல்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் பன்முக நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கொண்டிருக்கின்றது.

18 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனை... ராயல் என்பீல்டின் தயாரிப்பிற்கு கிடைக்கும் அமோக வரவேற்பு!

எட்டுவிதமான நிற தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஃபேக்டரி பிளாக், ஃபேக்டரி சில்வர், டேப்பர் ஒயிட், டேப்பர் ஆஷ், டேப்பர் கிரே, ரிபெல் பிளாக், ரிபெல் ப்ளூ, ரிபெல் ரெட் ஆகிய நிற தேர்வுகளிலேயே ஹண்டர் 350 பைக் விற்பனைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Royal enfield hunter 350 sales reached 18197 units in august 2022
Story first published: Thursday, September 15, 2022, 20:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X