ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?

ராயல் என்பீல்டு நிறுவனம் மிக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இளம் தலைமுறையினரை வெகுவாக கவரும் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஹண்டர் 350-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?

புத்தம் புதிய ராயல் என்பீல்டு தயாரிப்பாக களமிறக்கப்பட்டுள்ள இதற்கு விற்பனையில் போட்டியளிக்க ஹோண்டா சிபி350ஆர்எஸ், ஜாவா 42 மற்றும் டிவிஎஸ் மோட்டாரின் சமீபத்திய அறிமுகமான ரோனின் உள்ளிட்டவை தயாராக உள்ளன. இவற்றில் இருந்து புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது என்பதை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?

என்ஜின்

என்ஜினை பொறுத்தவரையில் மேற்கூறப்பட்ட மோட்டார்சைக்கிள்களில் அதிக சிசி என்ஜின் கொண்ட பைக்காக ஹண்டர் 350 விளங்குகிறது. இதில் வழங்கப்பட்டுள்ள 349சிசி ஏர்-ஆயில் கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 6100 ஆர்பிஎம்-இல் 21 பிஎஸ் மற்றும் 4000 ஆர்பிஎம்-இல் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?

ஹண்டர் மாடலுக்கு அடுத்து ஹோண்டா சிபி350ஆர்எஸ் பைக் 348.36சிசி ஏர் கூல்டு என்ஜினை கொண்டுள்ளது. அதிகப்பட்சமாக 5500 ஆர்பிஎம்-இல் 21 பிஎஸ் மற்றும் 3000 ஆர்பிஎம்-இல் 30 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இதன் என்ஜின் அமைப்பில் ஏர்-கூல்டு யூனிட் மட்டுமே உள்ளது, ஆயில்-கூல்டு யூனிட் இல்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?

டிரான்ஸ்மிஷன்

புதிய ஹண்டர் 350 பைக்கில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ளது. டிவிஎஸ் ரோனின் & சிபி350ஆர்எஸ் பைக்குகளிலும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் தான் வழங்கப்படுகிறது. ஆனால் ஜாவா 42 பைக்கில் மட்டும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. அதாவது இந்த பைக்கில் 6 கியர்கள் உள்ளன.

ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?

பரிமாண அளவுகள்

பரிமாண அளவுகளில், வீல்பேஸ் அதாவது முன் & பின் சக்கரங்கள் இடையேயான தூரம் ஆனது ஹோண்டா சிபி350ஆர்எஸ் பைக்கில் அதிகமாக உள்ளது. ஆனால் க்ரவுண்ட் க்ளியரென்ஸை, அதாவது தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதியை ரோனின் மாடல் உயரமாக கொண்டுள்ளது.

ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?

தரையில் இருந்து ஓட்டுனர் இருக்கையின் உயரம் ஹண்டர் 350 & சிபி350ஆர்எஸ் என இரண்டிலும் ஒரே மாதிரியாக 800மிமீ ஆக உள்ளது. எடை குறைவான ராயல் என்பீல்டு பைக் என கூறப்பட்டாலும் புதிய ஹண்டர் 350 மற்ற 3 பைக்குகளை காட்டிலும் சற்று எடைமிக்கதாக உள்ளது. ஆனால் மற்ற பைக்குகளுடன் ஒப்பிடுகையில் ஹண்டர் மாடலில் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு குறைவே.

ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?

ஏபிஎஸ் & சஸ்பென்ஷன்

புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350, ரோனின் மற்றும் ஜாவா 42 பைக்குகள் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-ஐ கொண்டுள்ளன. ஆனால் ஹோண்டா சிபி350ஆர்எஸ்-இன் கை இந்த விஷயத்தில் ஓங்கி உள்ளது. ஏனெனில் இந்த ஹோண்டா பைக்கில் இரட்டை சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.

ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?

சஸ்பென்ஷனை பொறுத்தவரையில், டிவிஎஸ் ரோனினை தவிர்த்து மற்ற மூன்றிலும் முன்பக்கத்தில் வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் வழங்கப்பட்டிருக்க, ரோனினில் மட்டுமே சற்று பிரீமியம் தரத்திலான யுஎஸ்டி ஃபோர்க்குகள் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் பின்பக்கத்தில் இந்த டிவிஎஸ் மாடலில் மட்டும் மோனோஷாக் கொடுக்கப்படுகிறது.

Specs Hunter 350 Ronin Jawa 42 CB350RS
Engine cc 349 cc 225.9 cc 293 cc 348.36 cc
Engine Type Air-Oil Cooled, Fi Air-Oil Cooled, Fi Liquid Cooled Air Cooled
Power 21 PS 6100 RPM 20.4 PS 7750 RPM 28 PS 21 PS 5500 RPM
Torque 27 Nm 4000 RPM 19.93 Nm 3750 RPM 27.05 Nm 30 Nm 3000 RPM
Transmission 5-speed 5-speed 6-speed 5-speed
Wheelbase mm 1370 1357 1369 1441
Ground Clearance 150.5 181 165 168
Seat Ht Rider 800 795 765 800
Kerb Wt kgs 177-181 160 172 179
Fuel Tank Litres 13 14 14 15
Front Tyre 110/70-17 110/70-17 90/90-18 100/90-19
Rear Tyre 140/70-17 130/70-17 120/80-17 150/70-17
Front Disc 300 mm 300 mm 280 mm 310 mm
Rear Disc 270 mm 240 mm Drum 240 mm
ABS Single / Dual Single / Dual Single / Dual Dual Channel
Front Suspension Telescopic USD Telescopic Telescopic
Rear Suspension Twin Shockers Mono Twin Shockers Twin Shockers
Headlight Halogen LED Halogen LED
Taillight Halogen / LED LED LED LED
Instrument Cluster Analog / Digital Digital Semi Digital Semi-Digital
Bluetooth App Optional Yes No Yes
USB Charger - - No No
Ride Modes No Yes No No
Bluetooth Optional Yes No Yes
Price Range, Ex-Delhi - ₹1.49 Lakh - ₹1.70 Lakh ₹1.74 Lakh - ₹1.96 Lakh ₹2.03 Lakh
Most Read Articles
English summary
Royal enfield hunter 350 vs honda cb350rs vs jawa 42 vs tvs ronin find here the comparison
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X