இப்பவே இவ்ளோ மாஸ்... இன்னும் போக போக டாப்ல எகிற போகுது... கெத்து காட்டும் ராயல் என்பீல்டு பைக்குகள்!

ராயல் என்பீல்டு நிறுவனம் பைக் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இப்பவே இவ்ளோ மாஸ்... இன்னும் போக போக டாப்ல எகிற போகுது... கெத்து காட்டும் ராயல் என்பீல்டு பைக்குகள்!

இந்தியாவில் நடப்பாண்டு ஜூலை மாதத்திற்கான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதன்படி ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 46,529 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் வெறும் 39,290 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இப்பவே இவ்ளோ மாஸ்... இன்னும் போக போக டாப்ல எகிற போகுது... கெத்து காட்டும் ராயல் என்பீல்டு பைக்குகள்!

இதன் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் 18.42 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் நடப்பாண்டு ஜூலை மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக் என்ற பெருமையை கிளாசிக் 350 பெற்றுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 16,890 ஆக இருந்த ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 23,223 ஆக உயர்ந்துள்ளது. இது 37.50 சதவீத வளர்ச்சியாகும்.

இப்பவே இவ்ளோ மாஸ்... இன்னும் போக போக டாப்ல எகிற போகுது... கெத்து காட்டும் ராயல் என்பீல்டு பைக்குகள்!

இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூலை மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 8,088 மீட்டியோர் 350 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 8,777 ஆக இருந்தது. இது 7.85 சதவீத வீழ்ச்சியாகும்.

இப்பவே இவ்ளோ மாஸ்... இன்னும் போக போக டாப்ல எகிற போகுது... கெத்து காட்டும் ராயல் என்பீல்டு பைக்குகள்!

இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் இந்தியாவில் 6,530 புல்லட் 350 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 7,133 ஆக இருந்தது. இது விற்பனையில் ஏற்பட்டுள்ள 8.45 சதவீத வீழ்ச்சியாகும்.

இப்பவே இவ்ளோ மாஸ்... இன்னும் போக போக டாப்ல எகிற போகுது... கெத்து காட்டும் ராயல் என்பீல்டு பைக்குகள்!

ராயல் என்பீல்டு நிறுவனம் வெகு விரைவில் புல்லட் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. எனவே புதிய தலைமுறை மாடல் வந்த பிறகு வாங்கி கொள்ளலாம் என பலர் இந்த பைக்கை வாங்கும் முடிவை தற்காலிகமாக ஒத்தி வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்பவே இவ்ளோ மாஸ்... இன்னும் போக போக டாப்ல எகிற போகுது... கெத்து காட்டும் ராயல் என்பீல்டு பைக்குகள்!

இதன் காரணமாக ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் விற்பனை குறைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் புல்லட் 350 பைக்கின் விற்பனை மீண்டும் உயரும் என ராயல் என்பீல்டு நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதற்கிடையே இந்த பட்டியலில் எலெக்ட்ரா 350 பைக் நான்காவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

இப்பவே இவ்ளோ மாஸ்... இன்னும் போக போக டாப்ல எகிற போகுது... கெத்து காட்டும் ராயல் என்பீல்டு பைக்குகள்!

கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 2,949 எலெக்ட்ரா 350 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 3,853 ஆக உயர்ந்துள்ளது. இது 30.65 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது ராயல் என்பீல்டு ஹிமாலயன் ஆகும்.

இப்பவே இவ்ளோ மாஸ்... இன்னும் போக போக டாப்ல எகிற போகுது... கெத்து காட்டும் ராயல் என்பீல்டு பைக்குகள்!

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் 2,730 ஹிமாலயன் பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 3,441 ஆக உயர்ந்துள்ளது. இது 26.04 சதவீத வளர்ச்சியாகும். இதற்கிடையே இந்த பட்டியலில் ஆறாவது மற்றும் கடைசி இடத்தில் இருப்பது ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் ஆகும்.

இப்பவே இவ்ளோ மாஸ்... இன்னும் போக போக டாப்ல எகிற போகுது... கெத்து காட்டும் ராயல் என்பீல்டு பைக்குகள்!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய 2 பைக்குகளும்தான் 650 ட்வின்ஸ் என குறிப்பிடப்படுகின்றன. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 811 ஆக இருந்த ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 1,394 ஆக உயர்ந்துள்ளது. இது 71.89 சதவீத வளர்ச்சியாகும்.

இப்பவே இவ்ளோ மாஸ்... இன்னும் போக போக டாப்ல எகிற போகுது... கெத்து காட்டும் ராயல் என்பீல்டு பைக்குகள்!

ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் காலங்களில் நிறைய 650 சிசி பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு சில பைக்குகள் சாலை சோதனை செய்யப்படும்போது கேமராவின் கண்களில் சிக்கியுள்ளன. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களும் நமக்கு கிடைத்துள்ளன. எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய 650 சிசி பைக்குகள் வெகு விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

இப்பவே இவ்ளோ மாஸ்... இன்னும் போக போக டாப்ல எகிற போகுது... கெத்து காட்டும் ராயல் என்பீல்டு பைக்குகள்!

இதற்கிடையே வரும் மாதங்களில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்வதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன. ஏனெனில் ராயல் என்பீல்டு நிறுவனம் வெகு சமீபத்தில் ஹண்டர் 350 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கையும் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

Most Read Articles
English summary
Royal enfield july 2022 model wise sales classic 350 leads chart
Story first published: Tuesday, August 30, 2022, 14:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X