ராயல் என்பீல்டிற்கு மவுசு குறைகிறதா? இதை பார்த்தா அப்படி தான் தெரியுது...

ராயல் என்ஃபீல்டு வாகனங்களின் கடந்த ஜூன் 2022ற்கான விற்பனை ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதை விரவாக காணலாம் வாருங்கள்.

ராயல் என்ஃபீல்டிற்கு மவுசு குறைகிறதா ? இதைப் பார்த்தா அப்படி தான் தெரியுது . . .

ஈஷர் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் 2022ற்கான ராயல் என்ஃபீல்டு பைக்குக்களை விற்பனை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 61,407 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

ராயல் என்ஃபீல்டிற்கு மவுசு குறைகிறதா ? இதைப் பார்த்தா அப்படி தான் தெரியுது . . .

இந்த ஜூன் மாத விற்பனையைக் கடந்தாண்டு அதாவது 2021 ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் 42.65 சதவீத விற்பனை வளர்ச்சி இருக்கிறது. அப்பொழுது வெறும் 43,048 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. மாத விற்பனை வளர்ச்சியை ஒப்பிடும் போது மொத்தம் 63,643 வாகனங்கள் கடந்த மே மாதம் விற்பனையாகியிருந்தது. அதிலிருந்து ஜூன் மாத விற்பனை 3.51 சதவீதம் அதிகமாகியுள்ளது.

ராயல் என்ஃபீல்டிற்கு மவுசு குறைகிறதா ? இதைப் பார்த்தா அப்படி தான் தெரியுது . . .

இந்நிறுவனம் விரைவில் மீட்டியோர் 350எக்ஸ் என்ற பைக்கை விரைவில் வெளியிடவுள்ளது. இத்துடன் தற்போது மீட்டியோர் 650, ஷாட்கன் 650, ஹிமாலயன் 450, 450 ஸ்கிராம், ஹன்டர் 350, புதிய புல்லட் 350 ஆகிய பைக்குகளையும் டெஸ்ட் செய்து வருகிறது.

ராயல் என்ஃபீல்டிற்கு மவுசு குறைகிறதா ? இதைப் பார்த்தா அப்படி தான் தெரியுது . . .

கடந்த ஜூன் மாத விற்பனையில் இந்நிறுவனம் விற்பனை செய்து வரும் 350 சிசிக்கும் குறைவான வாகனங்களான கிளாசிக், மீட்டியோர், எலெக்டரா, புல்லட், ஆகிய பைக்குகளின் விற்பனை 50,405 ஆக உள்ளது. இதுவே கடந்த 2021 ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும் போது 37,258 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. ஒட்டு மொத்த வளர்ச்சி 35.29 சதவீதமாக இருக்கிறது. ஒட்டு மொத்த விற்பனையில் 82.08 சதவீதம் இந்த செக்மெண்டிலேயே நடந்துள்ளது. இதுவே கடந்த மே மாத விற்பனையான 53,835 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 6.37 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டிற்கு மவுசு குறைகிறதா ? இதைப் பார்த்தா அப்படி தான் தெரியுது . . .

அடுத்ததாக 350 சிசிக்கு அதிகமான வாகனங்களான ஹிமாலயன்,650 ட்வின் ஆகிய பைக்குக்களை ஒப்பிடும் போது மொத்தம் 11,002 வாகனங்கள் கடந்த ஜூன் மாதம் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2021 ஜூன் மாதம் வெறும் 5,790 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது அதாவது விற்பனையில் 90.02 சதவீதம் வளர்ச்சியாகும் கடந்த மே மாத விற்பனையும் 9,808 வாகனங்களாக இருந்தது. இது 12.17 சதவீத வளர்ச்சியாகும். இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனையில் இந்த செக்மெண்டில் மட்டும் 17.92 சதவீதம் விற்பனையாகியுள்ளது.

ராயல் என்ஃபீல்டிற்கு மவுசு குறைகிறதா ? இதைப் பார்த்தா அப்படி தான் தெரியுது . . .

ஒட்டு மொத்த விற்பனையில் உள்நாட்டு விற்பனை மட்டும் 50,265 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதைக் கடந்த 2021 ஜூன் மாத விற்பனையான 35,815 வாகனங்களுடன் ஒப்பிடும் போது 40.35 சதவீத விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. இதுவே கடந்த மே மாத விற்பனையான 53,525 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 6.09 சதவீதம் விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டிற்கு மவுசு குறைகிறதா ? இதைப் பார்த்தா அப்படி தான் தெரியுது . . .

வெளிநாட்டு ஏற்றுமதிக்காத தரவுகளைப் பார்க்கும் போது கடந்த ஜூன் மாதம் மொத்தம் 11,142 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இது கடந்தாண்டு ஜூன் மாத ஏற்றுமதியுடன் ஒப்பிடும் போது 7233 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. தற்போது அது 54.04 சதவீத வளர்ச்சியாகவுள்ளது. இதுவே கடந்த மே ஏற்றுமதியான 10,118 என்ற ஏற்றுமதி எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 10.12 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டிற்கு மவுசு குறைகிறதா ? இதைப் பார்த்தா அப்படி தான் தெரியுது . . .

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஹன்டர் 350 சிசி பைக்கின் டெஸ்டிங்கை தீவிரமாகச் செய்து வருகிறது. இந்த பைக் மீட்டியோ 350, கிளாசிக் 350 பைக்குகளின் செக்மெண்டில் இந்த பைக்கும் களம் இறங்குகிறது. ராயல் என்பீல்டின் அதே 349 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜினை தான் இந்த பைக்கிலும் பயன்படுத்துகின்றனர்.

ராயல் என்ஃபீல்டிற்கு மவுசு குறைகிறதா ? இதைப் பார்த்தா அப்படி தான் தெரியுது . . .

இது 20.2 எச்பி பவர் மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ராயல் என்ஃபீல்டு ரோடுஸ்டர் ஸ்டைலிங்கில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் அந்நிறுவனத்திலேயே குறைந்த விலை பைக்காக விலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்கெட்டிற்கு வரும் போது ரூ1.3 லட்சம் முதல் ரூ1.4 லட்சம் வரை விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்

Most Read Articles
English summary
Royal Enfield June month sales report released by eicher know full details
Story first published: Saturday, July 2, 2022, 10:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X