பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தில் விற்பனையில் அதகளப்படுத்தும் நம்ம ஊர் சென்னை ராயல் என்பீல்டு பைக்!! நம்பர்.1 இடத்தில்

யுனிடெட் கிங்டம்-இல் 125சிசி+ பைக்குகள் விற்பனையில் ராயல் என்பீல்டின் பைக் முதலிடத்தை பிடித்து ஆச்சிரியப்படுத்தியுள்ளது.

Recommended Video

Mahindra Scorpio Classic Unveil Tamil Walkaround | புதிய அவதாரம் எடுத்த மஹிந்திரா ஸ்கார்பியோ!

எந்த ராயல் என்பீல்டு பைக் அது? இங்கிலாந்தில் பைக்குகள் விற்பனை எந்த அளவில் உள்ளது என்பதை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தில் விற்பனையில் அதகளப்படுத்தும் நம்ம ஊர் சென்னை ராயல் என்பீல்டு பைக்!! நம்பர்.1 இடத்தில்

இங்கிலாந்தில் தோன்றி தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு, இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் பிராண்டாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனது சந்தையை விரிவுப்படுத்தி உள்ளது.

பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தில் விற்பனையில் அதகளப்படுத்தும் நம்ம ஊர் சென்னை ராயல் என்பீல்டு பைக்!! நம்பர்.1 இடத்தில்

இந்தியாவில் ராயல் என்பீல்டு பைக்குகளை பிடிக்காதவர்களோ அல்லது பார்த்தில்லாதவர்களோ இருக்க மாட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன். அந்த அளவிற்கு, பெரும்பாலானோர் ராயல் என்பீல்டு பைக்கை தனது குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவும், இந்த ராயல் என்பீல்டு பைக்கை வாங்க வேண்டும் என கனவும் கொண்டுள்ளனர்.

பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தில் விற்பனையில் அதகளப்படுத்தும் நம்ம ஊர் சென்னை ராயல் என்பீல்டு பைக்!! நம்பர்.1 இடத்தில்

இது இந்தியாவில் மட்டுமல்ல, பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தில் கூட தான் என அங்கு விற்பனையான ராயல் என்பீல்டு பைக்குகளின் எண்ணிக்கை வெளிக்காட்டுகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால், அங்கு 125சிசி-க்கு மேல் என்ஜினை கொண்ட பைக்குகள் விற்பனையில் முதலிடத்தை ராயல் என்பீல்டின் மோட்டார்சைக்கிள் பிடித்துள்ளது. அது வேறெந்த பைக்கும் அல்ல... மீட்டியோர் 350 தான்.

பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தில் விற்பனையில் அதகளப்படுத்தும் நம்ம ஊர் சென்னை ராயல் என்பீல்டு பைக்!! நம்பர்.1 இடத்தில்

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மீட்டியோர் 350 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2020இன் இறுதியில் அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுகத்திற்கு முன்பு வரையில், ராயல் என்பீல்டு பைக்குகள் என்றாலே சற்று அதிர்வுடன் தான் இயங்கும் என்கிற கருத்து பரவலாக இருந்தது. அதனை மாற்றி அமைத்த மோட்டார்சைக்கிள் தான் மீட்டியோர் 350 ஆகும்.

பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தில் விற்பனையில் அதகளப்படுத்தும் நம்ம ஊர் சென்னை ராயல் என்பீல்டு பைக்!! நம்பர்.1 இடத்தில்

அத்தகைய அதிர்வுகள் தான் ராயல் என்பீல்டு பிராண்டின் அடையாளம் என்றாலும், புத்தம் புதிய ஜே-ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட முதல் பைக்கான இதில் இயக்கத்தின்போது ஏற்படும் அதிர்வுகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. மேலும், இதே ஜே-ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு புதிய கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தில் விற்பனையில் அதகளப்படுத்தும் நம்ம ஊர் சென்னை ராயல் என்பீல்டு பைக்!! நம்பர்.1 இடத்தில்

இந்தியாவில் உள்ளதை போல, தோன்றியது அங்கதான் என்பதால் என்னவோ பிரிட்டனிலும் ராயல் என்பீல்டு பிராண்ட் பிரபலமானதாக உள்ளது. இந்த பிராண்டின் மீட்டியோர் 350 பைக் 2022 ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் வரையில் பிரிட்டனில் 1,135 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தில் விற்பனையில் அதகளப்படுத்தும் நம்ம ஊர் சென்னை ராயல் என்பீல்டு பைக்!! நம்பர்.1 இடத்தில்

அதாவது கடந்த 7 மாதத்தில் அந்த நாட்டில் மொத்தம் 1,135 மீட்டியோர் 350 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலமாக இந்த 7 மாதங்களில் அதிகம் விற்பனையான 125சிசி-க்கு மேற்பட்ட என்ஜின் கொண்ட பைக்குகளில் முதலிடத்தை அங்கு மீட்டியோர் 350 பிடித்துள்ளது. முன்னதாக இந்த இடத்தில் பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக் நீண்ட காலமாக இருந்துவந்தது.

பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தில் விற்பனையில் அதகளப்படுத்தும் நம்ம ஊர் சென்னை ராயல் என்பீல்டு பைக்!! நம்பர்.1 இடத்தில்

அந்த 1250சிசி பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்கை முந்திக்கொண்டு ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 முதலிட கிரீடத்தை அணிந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் யுகே-வில் சிறந்த விற்பனை பைக்குகள் லிஸ்ட்டில் முதல் 5 இடங்களுள் ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கும் இருந்துவந்தது. ஆனால் தற்போது இண்டர்செப்டர் 650 யுகே நாட்டில் சற்று ஓரங்கட்டப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தில் விற்பனையில் அதகளப்படுத்தும் நம்ம ஊர் சென்னை ராயல் என்பீல்டு பைக்!! நம்பர்.1 இடத்தில்

இண்டர்செப்டர் 650 பைக் மட்டுமின்றி, ஹிமாலயன் மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 உள்ளிட்டவையும் பிரிட்டனில் விற்பனையில் இருக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளாகும். மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஜேடி1 என்ஜின் தான் அதன்பின் வெளிவந்த புதிய தலைமுறை கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 பைக்குகளிலும் வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தில் விற்பனையில் அதகளப்படுத்தும் நம்ம ஊர் சென்னை ராயல் என்பீல்டு பைக்!! நம்பர்.1 இடத்தில்

மேலும், இதே என்ஜின் தான் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புல்லட் 350 பைக்கிலும் பொருத்தப்பட உள்ளது. இவற்றில் வழங்கப்படும் புதிய 349சிசி என்ஜினில் ஆயில்-கூல்டு யூனிட் போன்ற மாடர்ன் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் மென்மையான பயணத்திற்காக ஒருவழியாக ராயல் என்பீல்டு இந்த என்ஜினில் புஷ் ராட்-ஐ சேர்த்துள்ளது.இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6100 ஆர்பிஎம்-இல் 20.4 பிஎஸ் மற்றும் 4000 ஆர்பிஎம்-இல் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Most Read Articles
English summary
Royal enfield meteor 350 uk sales
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X