ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் வாங்கும் ப்ளான் இருக்கா? கொஞ்சம் பொறுங்க... புதிய ஹிமாலயன் 450 வருகிறது!!

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் 450சிசி வெர்சன் அடுத்த 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் டீசர் வீடியோ ஒன்று புதியதாக வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

TVS Ronin Top Things In Tamil | இந்த புதிய பைக்கை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோவை பாத்திருங்க!

அதன் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனம் கூறவந்துள்ள தகவல்களையும், இந்த புதிய ஹிமாலயன் பைக்கை பற்றியும் இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் வாங்கும் ப்ளான் இருக்கா? கொஞ்சம் பொறுங்க... புதிய ஹிமாலயன் 450 வருகிறது!!

இந்தியாவில் வாடிக்கையாளர்களின் தேவை மெல்ல மெல்ல அனைத்து விதமான பயணங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய அட்வென்ச்சர் பைக்குகளின் பக்கம் திரும்பி வருகிறது. இதற்கு தற்சமயம் ராயல் என்பீல்டு ஹிமாலாயன் பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கையே சாட்சியாகும்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் வாங்கும் ப்ளான் இருக்கா? கொஞ்சம் பொறுங்க... புதிய ஹிமாலயன் 450 வருகிறது!!

இந்தியாவின் மலிவான அட்வென்ச்சர் பைக்குகளுள் ஒன்றாக விளங்கும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் அறிமுகத்தில் இருந்து குறிப்பாக இளம் தலைமுறையினரை வெகுவாக ஈர்த்துள்ளது. இதனாலேயே விரைவில் ஆற்றல்மிக்க ஹிமாலயன் பைக்காக ஹிமாலயன் 450 மாடலை களமிறக்க ராயல் என்பீல்டு நிறுவனம் தயாராகி வருகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் வாங்கும் ப்ளான் இருக்கா? கொஞ்சம் பொறுங்க... புதிய ஹிமாலயன் 450 வருகிறது!!

தற்போதைய ஹிமாலயன் 411 பைக் கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் ட்ரிப்பர் நாவிகேஷன் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, விரைவில் 450சிசி-யில் ஹிமாலயன் களமிறக்கப்படுகிறது. இதற்கிடையில்தான் தற்போது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் ஹிமாலயன் 450 பைக் குறித்த டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய ஹிமாலயன் 450 பைக்கின் அறிமுகம் அடுத்த 2023ஆம் ஆண்டில் இருக்கலாம். தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரில் பைக்கின் முன்பக்கத்தை மட்டுமே காண முடிகிறது. இந்த புதிய ஹிமாலயன் பைக்கின் திறனை வெளிக்காட்டும் விதமாக சகதியில் ஓட்டி செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோவாக இது உள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் வாங்கும் ப்ளான் இருக்கா? கொஞ்சம் பொறுங்க... புதிய ஹிமாலயன் 450 வருகிறது!!

இதனால் பைக்கின் முன்பக்கத்தின் பெரும்பகுதியையும் சகதி மறைக்கிறது. இருப்பினும் பைக்கின் முன்பக்க எல்இடி ஹெட்லைட்டையும், அதற்கு மேலாக சிறிய அளவிலான எதிர்காற்று தடுப்பு கண்ணாடியையும் காண முடிகிறது. வீடியோவில், சோதனை ஓட்டங்கள் ஒன்று, இரண்டு, மூன்று... என சென்றுக் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் வாங்கும் ப்ளான் இருக்கா? கொஞ்சம் பொறுங்க... புதிய ஹிமாலயன் 450 வருகிறது!!

ராயல் என்பீல்டு நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள ஹிமாலயன் 450 பைக் தொடர்பான முதல் டீசர் வீடியோவான இதில் பைக்கின் தோற்றம் முழுவதுமாக காட்டப்படவில்லை என்றாலும், கிட்டத்தட்ட தற்போதைய ஹிமாலயன் 411 பைக்கின் அடிப்படையிலானதாக இதனை எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி, இதற்கு முன்னர் ஹிமாலயன் 450 பைக்கின் ஸ்பை படங்கள் சிலமுறை வெளியாகி இருந்தன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் வாங்கும் ப்ளான் இருக்கா? கொஞ்சம் பொறுங்க... புதிய ஹிமாலயன் 450 வருகிறது!!

அவற்றில் பைக் மறைப்புகளால் மறைக்கப்பட்டு இருந்தது என்றாலும், ஹெட்லேம்ப்பை சுற்றிலும் வளையம், எதிர்காற்று தடுப்பு கண்ணாடி, முன் பிரேக், பெட்ரோல் டேங்க் மற்றும் பக்கவாட்டு பேனல்களை தற்போதைய ஹிமாலயன் 411 பைக்கில் இருந்து மாறுப்பட்டதாக புதிய ஹிமாலயன் 450 மாடல் பெற்றுவரவுள்ளதை அவற்றின் வாயிலாக அறிய முடிந்திருந்தது.அத்துடன், புதிய ஹிமாலயன் 450 பைக்கில் வழக்கத்தை காட்டிலும் அளவில் சிறியதாக எக்ஸாஸ்ட் குழாய் பொருத்தப்படுகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் வாங்கும் ப்ளான் இருக்கா? கொஞ்சம் பொறுங்க... புதிய ஹிமாலயன் 450 வருகிறது!!

பின்பக்க இறுதிமுனையில் பொருட்களை கட்டி எடுத்து செல்வதற்கு அலமாரி பெரியதாக வழங்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஸ்பை படங்களில், பைக்கின் படிக்கட்டு-வடிவ இருக்கை அமைப்பில் எந்த மாற்றமும் வழங்கப்பட்டதுபோல் தெரியவில்லை என்பதால், ஹிமாலயன் 450 பைக்கின் இறுதிமுனையில் சில மாற்றங்களை ராயல் என்பீல்டு கொண்டுவரலாம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் வாங்கும் ப்ளான் இருக்கா? கொஞ்சம் பொறுங்க... புதிய ஹிமாலயன் 450 வருகிறது!!

அதாவது, பைக்கை அளவில் பெரியதாக காட்ட வேண்டும் என்பதற்காக பைக்கின் இறுதிமுனை பகுதி நன்கு நீளமானதாக வழங்கப்படலாம். அதேபோல் ஹேண்டில்பார் மற்றும் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதிகளின் பொசிஷனிலும் சற்று மாற்றங்கள் கொண்டுவரப்படலாம். புதிய ஹிமாலயன் 450 பைக்கில் பொருத்தப்படும் 450சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 40 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் வாங்கும் ப்ளான் இருக்கா? கொஞ்சம் பொறுங்க... புதிய ஹிமாலயன் 450 வருகிறது!!

இதன் மூலமாக கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் என போட்டி அட்வென்ச்சர் பைக்குகளை காட்டிலும் ஆற்றல்மிக்கதாக ஹிமாலயன் 450 விளங்கவுள்ளது. ஹிமாலயன் 411 மாடலின் தற்போதைய என்ஜின் அதிகப்பட்சமாக 24.3 பிஎச்பி மற்றும் 32 என்எம் டார்க் திறன் வரையில் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. என்ஜினை போல் 5-ஸ்பீடு கியர்பாக்ஸிற்கு மாற்றாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த புதிய ஹிமாலயன் பைக்கில் வழங்கப்படலாம்.

NOTE: Except teaser images, other images are representative purpose only

Most Read Articles
English summary
Royal enfield shared first official teaser himalayan 450 launch will be next year
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X