கஸ்டமர்ஸின் விருப்பம் தான் முக்கியம்... எலக்ட்ரிக் பைக்குகளை வடிவமைக்க தயாராகும் ராயல் என்பீல்டு!!

புதியதாக தயாரிக்கப்பட உள்ள எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு வாடிக்கையாளர்களின் கருத்தை ராயல் என்பீல்டு நிறுவனம் கேட்டறிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

கஸ்டமர்ஸின் விருப்பம் தான் முக்கியம்... எலக்ட்ரிக் பைக்குகளை வடிவமைக்க தயாராகும் ராயல் என்பீல்டு!!

உலகளவில் எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக்கை நம்பியே உள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதில் நமது இந்தியா மட்டும் என்ன விதிவிலக்கா... எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதில் பல ஆட்டோமொபைல் பிராண்ட்கள் ஏற்கனவே இறங்கிவிட்டன.

கஸ்டமர்ஸின் விருப்பம் தான் முக்கியம்... எலக்ட்ரிக் பைக்குகளை வடிவமைக்க தயாராகும் ராயல் என்பீல்டு!!

ஆனால் சில நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் தன்னை எவ்வாறு தனித்துவமாக நிலைநிறுத்தி கொள்வது என்பதில் சற்று குழம்பி போய் உள்ளன. குறிப்பாக, ராயல் என்பீல்டு பெரிதும் குழம்பி போய் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ராயல் என்பீல்டு பைக்குகளின் அடையாளமே அவற்றின் உறுமும் சத்தம் தான்.

கஸ்டமர்ஸின் விருப்பம் தான் முக்கியம்... எலக்ட்ரிக் பைக்குகளை வடிவமைக்க தயாராகும் ராயல் என்பீல்டு!!

ஆனால் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களில் அவ்வாறான சத்தங்கள் வெளிவராது. உறுமும் சத்தம் மட்டுமில்லை, மற்ற சாதாரண பைக்குகளில் இருந்து வெளிவரும் சத்தம் கூட எலக்ட்ரிக் பைக்குகளில் இருந்து வெளிவருவதில்லை. இதனாலேயே நேரடியாக வாடிக்கையாளர்களின் விருப்பத்தையும், கருத்தையும் கேட்டறியும் முடிவில் ராயல் என்பீல்டு நிறுவனம் இறங்கியுள்ளது போல.

கஸ்டமர்ஸின் விருப்பம் தான் முக்கியம்... எலக்ட்ரிக் பைக்குகளை வடிவமைக்க தயாராகும் ராயல் என்பீல்டு!!

இதுகுறித்து ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்தியாவிற்கான வணிக தலைமை அதிகாரி வி ஜெயா பிரதீப் சமீபத்தில் அளித்த பேட்டியில், "பிராண்டின் பண்புகளுடன் எலக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களில் நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை நாங்கள் ஆய்வு செய்கிறோம்" என கூறியவர், எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை தயாரிப்பதில் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போதைக்கு அவசரப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கஸ்டமர்ஸின் விருப்பம் தான் முக்கியம்... எலக்ட்ரிக் பைக்குகளை வடிவமைக்க தயாராகும் ராயல் என்பீல்டு!!

இதை தான் ராயல் என்பீல்டின் முன்னோடி நிறுவனமான ஈச்சர் மோட்டார்ஸின் நிர்வாக இயக்குனர் சித்தார்த் லாலும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். ராயல் என்பீல்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளிவருவதற்கு இன்னும் 4 வருடங்கள் ஆகலாம். தற்சமயம் பிராண்ட் மிகவும் அடிப்படையான ஆராய்ச்சிகளிலும், மிகவும் அடிப்படையான பிளாட்ஃபாரங்களிலும் தான் பணியாற்றி வருகிறது.

கஸ்டமர்ஸின் விருப்பம் தான் முக்கியம்... எலக்ட்ரிக் பைக்குகளை வடிவமைக்க தயாராகும் ராயல் என்பீல்டு!!

எதுவும் இன்னும் முழுமையாக அமையவில்லை என சித்தார்த் லால் கூறியுள்ளார். மோட்டார்சைக்கிள்களை வடிவமைப்பதில் புதிய புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் ராயல் என்பீல்டு பெயர் பெற்றது. அப்படி இருக்கையில், முற்றிலும் மாறுப்பட்ட எலக்ட்ரிக் பைக்குகள் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு முன்னர் இந்த நிறுவனம் எந்த அளவிற்கு ஆலோசிக்கும் என்பதை நான் கூற வேண்டியதில்லை.

கஸ்டமர்ஸின் விருப்பம் தான் முக்கியம்... எலக்ட்ரிக் பைக்குகளை வடிவமைக்க தயாராகும் ராயல் என்பீல்டு!!

தற்கால மாடர்ன் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் அத்தனை அம்சங்களுடனும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்க ராயல் என்பீல்டு முயற்சிக்கும் என்பது மட்டும் உறுதி. அதிலிலும் குறிப்பாக, முதல் எலக்ட்ரிக் பைக்கை முற்றிலும் புதிய பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைத்து முதல் தயாரிப்பிலேயே பலரது கவனத்தை கவர ராயல் என்பீல்டு விரும்பும்.

கஸ்டமர்ஸின் விருப்பம் தான் முக்கியம்... எலக்ட்ரிக் பைக்குகளை வடிவமைக்க தயாராகும் ராயல் என்பீல்டு!!

ஆனால் உண்மையில், பைக்கின் தோற்றத்தை வடிவமைப்பதை காட்டிலும் எலக்ட்ரிக் பைக்குகளில் தனது சிக்னெச்சர் உறுமும் சத்தத்தை எவ்வாறு ராயல் என்பீல்டு கொண்டுவர உள்ளது என்பதை அறியவே ஆவலாக உள்ளோம். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு வரும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் தனது எரிபொருள் என்ஜின் பைக்குகள் நல்லப்படியாக விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

கஸ்டமர்ஸின் விருப்பம் தான் முக்கியம்... எலக்ட்ரிக் பைக்குகளை வடிவமைக்க தயாராகும் ராயல் என்பீல்டு!!

ஏனெனில் நடப்பு 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனை நல்லப்படியாகவே இருந்துள்ளது. கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கிய நடப்பு நிதியாண்டில் முதல் 3 மாதங்களில் மட்டும், அதாவது ஜூன் மாதம் வரையில் மட்டுமே 1.86 லட்ச பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

கஸ்டமர்ஸின் விருப்பம் தான் முக்கியம்... எலக்ட்ரிக் பைக்குகளை வடிவமைக்க தயாராகும் ராயல் என்பீல்டு!!

கடந்த 2021-22 நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகள் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில், 1.86 லட்சம் என்பது சுமார் 52% அதிகமாகும். ஏனெனில் கடந்த ஆண்டில் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 1.86 லட்சத்தில் பாதி எண்ணிக்கையில் மட்டுமே ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனையாகி இருந்தன. இவ்வாறு ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், புதியது புதியதாக அறிமுகமாகிவரும் பைக்குகளே ஆகும்.

கஸ்டமர்ஸின் விருப்பம் தான் முக்கியம்... எலக்ட்ரிக் பைக்குகளை வடிவமைக்க தயாராகும் ராயல் என்பீல்டு!!

இந்தியாவில் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் 1 புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தும் முடிவில் ராயல் என்பீல்டு கடந்த 2021இல் இருந்து செயல்பட்டு வருகிறது. இதன்படி நடப்பு 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஸ்க்ராம் 411 மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எடை குறைவான ராயல் என்பீல்டு பைக்காக ஹண்டர் 350 அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Royal enfield studying the expectations of buyers on electric two wheelers
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X