டிவிஎஸ் புதுசா ஒரு பைக்கை கொண்டு வரப்போறாங்க... யாருக்கு போட்டின்னு தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க..

டிவிஎஸ் நிறுவனம் விரைவில் Zeppelin R பைக்கை மார்கெட்டில் இறக்கவுள்ளது. இந்த பைக் குறித்த விபரங்கள் மற்றும் மற்ற விபரங்களைக் கீழே காணுங்கள்.

டிவிஎஸ் புதுசா ஒரு பைக்கை கொண்டு வரப்போறாங்க . . . யாருக்கு போட்டின்னு தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க . . .

இந்தியாவில் இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனம் டிவிஎஸ். இந்நிறுவனம் தமிழ்நாட்டில் ஓசூர் மாவட்டத்தில் தனது தயாரிப்பு ஆலைகளை ஏற்படுத்தி அங்கு இருசக்கர வாகனங்களைத் தயாரித்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் ஏகப்பட்ட இருசக்கர வாகனங்கள் மார்கெட்டில் பயங்கர ஹிட் இன்றும் இந்நிறுவனத்தின் எக்ஸ்எல் மொபட் பட்டிதொட்டியெங்கும் பயன்படுத்தப்படுகிறது.

டிவிஎஸ் புதுசா ஒரு பைக்கை கொண்டு வரப்போறாங்க . . . யாருக்கு போட்டின்னு தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க . . .

இது மட்டுமல்ல இந்நிறுவனம் ஸ்டாார் சிட்டி, ஸ்போர்ட், ஆப்பாச்சி என மார்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது டிவிஎஸ் நிறுவனம். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனம் டிவிஎஸ் ஸேப்பிலின் ஆர் க்ரூஸியர் பைக்கின் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கை டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவிற்குள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

டிவிஎஸ் புதுசா ஒரு பைக்கை கொண்டு வரப்போறாங்க . . . யாருக்கு போட்டின்னு தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க . . .

டிவிஎஸ் நிறுவனம் முதலில் அறிமுகப்படுத்திய கான்செப்டில் ஹைடெக் மைல்டு ஹெபிரிட் உடன் கூடிய இன்ஜின் இருந்து. ஆனால் இந்தியாவில் இந்த பைக்கை அறிமுகப்படுத்தும் போது இந்த இன்ஜினிற்கு பதிலாக அப்பாச்சி பைக்கின் இன்ஜினை பொருத்தி விற்பனைக்குக் கொண்டு வர இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. பைக்கின் விலையைக் குறைப்பதற்காக இந்த மாற்றத்தை அந்நிறுவனம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டிவிஎஸ் புதுசா ஒரு பைக்கை கொண்டு வரப்போறாங்க . . . யாருக்கு போட்டின்னு தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க . . .

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஏற்கனவே Zeppelin R என்ற பெயரை டிரேட்மார்க் செய்துள்ளது. அதனால் அந்த பெயரிலேயே இந்த பைக் இந்தியாவிற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கிற்கான புரோட்டோ டைப்பை மிக ரகசியமாகச் செய்துவருகிறது. இதுவரை அது குறித்து எந்த வித தகவல்களும் தெரியவரவில்லை.

டிவிஎஸ் புதுசா ஒரு பைக்கை கொண்டு வரப்போறாங்க . . . யாருக்கு போட்டின்னு தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க . . .

ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாகத் தெரியவந்துள்ளது. இந்த பைக் க்ரூஷியர் பைக்காக இல்லாமல் ஸ்போர்ட்டியர் பைக்காக வெளியாகிறதாம். அதாவது மார்கெட்டில் யமஹா எஃப்இசட் பைக்கின் செக்மெண்டில் அதற்குப் போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

டிவிஎஸ் புதுசா ஒரு பைக்கை கொண்டு வரப்போறாங்க . . . யாருக்கு போட்டின்னு தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க . . .

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்ட பைக் க்ரூஸியர் பைக்காக இருந்தாலும், இதன் ஹேண்டில் பார் ஃபிளாட்டாக கொஞ்சம் ஸ்போர்ட்டிர் லுக்கில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஹெக்ஸாகோனால் ஹெட்லைட் அசெம்பிளி, இண்டர்கிரேட்டட் எல்இடி டிஆர்எல், தங்க நிற யூஎஸ்டி ஃபோர்க்ஸ், பிளாக் - டிப்டு வயர் ஃபோர்க் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

டிவிஎஸ் புதுசா ஒரு பைக்கை கொண்டு வரப்போறாங்க . . . யாருக்கு போட்டின்னு தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க . . .

பைக்கில் இரண்டு வீல்களிலும் சிங்கிள் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி இருக்கிறது. கான்செப்ட் டிசைன் பிரெளன் சேடில் இருக்கிறது. ஆனால் தயாரிப்பில் இதன் நிறம் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனத்தின் இன்ஜினை பொருத்தவரை கான்செப்டில் 220 சிசி மைல்டு ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

டிவிஎஸ் புதுசா ஒரு பைக்கை கொண்டு வரப்போறாங்க . . . யாருக்கு போட்டின்னு தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க . . .

தயாரிப்பில் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் பைக் இன்ஜினான் 312 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டு 400 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்டே கேட்டகிரிக்குள் வரும் என எதிர்பார்க்கலாம் அப்படி வந்தால் ஹோண்டா சிபிஆர், ராயல் என்பீல்டு, ஜாவா பைக்குகளுக்கு இது செம போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Rumor on TVS Motor plans to launch Zeppelin R to compete with royal Enfield
Story first published: Friday, June 3, 2022, 19:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X