சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதனை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெஸ்ட் ரைடு தொடங்கும் தேதி தற்போது நமக்கு ஒரு வழியாக தெரியவந்துள்ளது. இதன்படி சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெஸ்ட் ரைடு வரும் ஜூலை 20ம் தேதியில் இருந்து தொடங்குகிறது. சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

சிம்பிள் ஒன் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், உடனடியாக இந்திய சந்தையில் பிரபலமடைந்தது. இதற்கு காரணம் இதன் ரேஞ்ச்தான். சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 236 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என சிம்பிள் எனர்ஜி நிறுவனம் கூறுகிறது.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

இது முழுவதும் உகந்த சூழ்நிலைகளில் என்றாலும், நடைமுறை பயன்பாட்டில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 203 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிக சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று என சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெயரெடுத்தது.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

சிறப்பான ரேஞ்ச் உடன் அட்டகாசமான வசதிகளையும், சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது. இதில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 4ஜி கனெக்டிவிட்டி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, மியூசிக் கண்ட்ரோல், ஜியோ ஃபென்சிங் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 2 பேட்டரி தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஒன்று நிரந்தரமானது. மற்றொன்று கழற்றி மாற்றக்கூடியது. ஒட்டுமொத்தமாக இதன் கெபாசிட்டி 4.8kWh ஆகும்.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டி விடும். இந்த எலெக்ட்ரின் டாப் ஸ்பீடு மணிக்கு 105 கிலோ மீட்டர்கள். அத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது. இதன் மூலம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியாவின் மிகச்சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று என்ற பெயரை எடுப்பதற்கான அனைத்து தகுதிகளும் இதற்கு உண்டு.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

ஆனால் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடர்ந்து தாமதமாகி கொண்டே வருகின்றன. சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளை இன்னும் தொடங்கவில்லை. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பாதுகாப்பு என்ற அம்சத்தை மனதில் வைத்தே, சிம்பிள் ஒன் மாடலின் டெலிவரி பணிகள் தொடங்கப்படுவதை ஒத்திவைத்துள்ளதாக சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

இந்தியாவில் சமீப காலமாக பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இதன் காரணமாக சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவதை போல் தெரிகிறது. இதன் காரணமாகவே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

இந்த சூழலில்தான், சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெஸ்ட் ரைடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பெங்களூர் நகரை சேர்ந்த நிறுவனம் என்பதால், அங்குதான் முதலில் டெஸ்ட் ரைடு நடைபெறுகிறது. வரும் ஜூலை 20ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை பெங்களூர் நகரில் டெஸ்ட் ரைடு நடைபெறவுள்ளது.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

இதை தொடர்ந்து சென்னை, ஐதராபாத், புனே, மும்பை, பானாஜி, அகமதாபாத், இந்தூர், ஜெய்ப்பூர், தேசிய தலைநகர் பிராந்தியம், லக்னோ, பாட்னா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் டெஸ்ட் ரைடு நடைபெறுகிறது. வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை இந்த டெஸ்ட் ரைடு பணிகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

வரும் மாதங்களில் இன்னும் நிறைய நகரங்களில், சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெஸ்ட் ரைடுகளை நடத்துவதற்கு சிம்பிள் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1.09 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரியுமா?

அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் லாங்-ரேஞ்ச் வேரியண்ட்டின் விலை 1.44 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த வேரியண்ட்டின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 300 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் ரைடு பணிகள் முடிவடைந்த உடனேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Simple one test ride dates revealed details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X