மீண்டும் 2 லட்ச யூனிட்களை கடந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை!! 2021 டிசம்பர் 2-வீலர்ஸ் விற்பனை நிலவரம்

கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் 2 லட்ச யூனிட்களை கடந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை!! 2021 டிசம்பர் 2-வீலர்ஸ் விற்பனை நிலவரம்

2021ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் மொத்தம் 2,26,759 யூனிட் ஸ்பிளெண்டர் பைக்குகளை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. உண்மையில் ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை 2020 டிசம்பரை காட்டிலும் கடந்த மாதத்தில் 16.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

மீண்டும் 2 லட்ச யூனிட்களை கடந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை!! 2021 டிசம்பர் 2-வீலர்ஸ் விற்பனை நிலவரம்

ஏனெனில் அந்த மாதத்தில் 1,94,930 ஸ்பிளெண்டர் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. முதல் இடத்தை போலவே அதிகம் விற்பனை செய்யப்படும் 2-வீலர்ஸ் லிஸ்ட்டில் 2வது இடத்தை வழக்கம்போல் ஹோண்டா ஆக்டிவா பிடித்துள்ளது. ஆனால் ஸ்பிளெண்டர் பைக்குகளை போல் அல்லாமல், ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை வருடம்-வருடம் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளது.

மீண்டும் 2 லட்ச யூனிட்களை கடந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை!! 2021 டிசம்பர் 2-வீலர்ஸ் விற்பனை நிலவரம்

கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 1,04,417 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதுவே 2020 டிசம்பரில் 1,34,077 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை கடந்த மாதத்தில் 22.1% குறைந்துள்ளது. இதற்கடுத்து மூன்றாவது இடத்தில் மற்றொரு பிரபலமான ஹீரோ பைக் மாடலான எச்.எஃப் டீலக்ஸ் உள்ளது.

மீண்டும் 2 லட்ச யூனிட்களை கடந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை!! 2021 டிசம்பர் 2-வீலர்ஸ் விற்பனை நிலவரம்

2020 டிசம்பரில் 1,41,168 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் இதனை காட்டிலும் 41.1% குறைவாக வெறும் 83,080 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹோண்டா சிபி ஷைன் இந்த வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 68,061 சிபி ஷைன் பைக்குகள் ஹோண்டா நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மீண்டும் 2 லட்ச யூனிட்களை கடந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை!! 2021 டிசம்பர் 2-வீலர்ஸ் விற்பனை நிலவரம்

இது 56,003 சிபி ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்த 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 21.5% அதிகமாகும். கடந்த மாத விற்பனையில் ஹோண்டா சிபி ஷைனை மிக நெருக்கமாக பின் தொடர்ந்தவாறு பஜாஜ் பல்சர் பைக்குகள் உள்ளன. கடந்த 2021 டிசம்பரில் மொத்தம் 64,966 பஜாஜ் பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 டிசம்பரில் பல்சர் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டி இருந்தது.

மீண்டும் 2 லட்ச யூனிட்களை கடந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை!! 2021 டிசம்பர் 2-வீலர்ஸ் விற்பனை நிலவரம்

இதற்கடுத்து 6வது இடத்திலும் பஜாஜ் ஆட்டோவின் தயாரிப்பாக, பிளாட்டினா 44,800 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் இந்த பஜாஜ் பைக்கின் விற்பனை வருடம்-வருடம் ஒப்பிடுகையில் 45.7% அதிகரித்துள்ளது. ஏனென்றால் அந்த மாதத்தில் 30,740 பிளாட்டினா பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து இந்த லிஸ்ட்டில் 7வது இடத்தில் டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டர் மாடலான ஜூபிட்டர் உள்ளது.

மீண்டும் 2 லட்ச யூனிட்களை கடந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை!! 2021 டிசம்பர் 2-வீலர்ஸ் விற்பனை நிலவரம்

கடந்த மாதத்தில் மொத்தம் 38,142 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2020 டிசம்பரிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஹோண்டா ஆக்டிவாவிற்கு அடுத்து இந்த டாப்-10 2-வீலர்ஸ் சேல்ஸ் வரிசையில் உள்ள ஸ்கூட்டர் ஜூபிட்டர் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலும் ஆக்டிவாவிற்கு அடுத்து சுஸுகி ஆக்ஸஸ் தான் அதிகம் விற்பனை செய்யப்படும் இரண்டாவது ஸ்கூட்டர் மாடலாக விளங்கும்.

மீண்டும் 2 லட்ச யூனிட்களை கடந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை!! 2021 டிசம்பர் 2-வீலர்ஸ் விற்பனை நிலவரம்

ஆனால் இம்முறை ஆக்ஸஸை பின்னுக்கு தள்ளி, டிவிஎஸ் ஜூபிட்டர் முன்னிலை வகித்துள்ளது. ஜூபிட்டரின் வழக்கமான மாத விற்பனை எண்ணிக்கை கடந்த டிசம்பர் மாதத்தில் குறையாததே இதற்கு காரணமாகும். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 இந்த டாப்-10 வரிசையில் 8வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 38,142 கிளாசிக் 350 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

மீண்டும் 2 லட்ச யூனிட்களை கடந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை!! 2021 டிசம்பர் 2-வீலர்ஸ் விற்பனை நிலவரம்

ஆனால் உண்மையில் கிளாசிக் பைக்குகளின் இந்த விற்பனை எண்ணிக்கை 2020 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் 11.6% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் கிளாசிக் 350 பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 ஆயிரமாக இருந்தது. இத்தனைக்கும் அந்த சமயத்தில் முந்தைய தலைமுறை கிளாசிக் 350 மாடல் தான் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்தது. இதற்கடுத்து 9வது இடத்தில் டிவிஎஸ் எக்ஸ்.எல்100 உள்ளது.

மீண்டும் 2 லட்ச யூனிட்களை கடந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை!! 2021 டிசம்பர் 2-வீலர்ஸ் விற்பனை நிலவரம்

கிராமப்புறங்களில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ள எக்ஸ்.எல்100 பைக்குகள் கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 33,395 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 டிசம்பர் மாதத்தில் எக்ஸ்.எல்100 பைக்குகளின் விற்பனை இதனை காட்டிலும் டபுள் மடங்காக இருந்தது. ஆனால் இதற்கடுத்து கடைசி 10வது இடத்தில் உள்ள ஹீரோ கிளாமர் மாடல் இதற்கு அப்படியே நேரெதிராக 64.2% விற்பனை வளர்ச்சியை கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளது.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 2 wheelers in dec 2021 splendor continued to be the most sold 2 wheeler
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X