விற்பனையில் தொடர்ந்து கெத்து காட்டி கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!! 150-200சிசி -யில் முதலிடம்!

இந்தியாவில் ஒரு காலத்தில் 50சிசி-யில் கூட ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் தற்போது குறைந்தப்பட்சமே 125சிசி ஆக உள்ளது. அதிலிலும் இப்போதைய இளம் தலைமுறையினர் 200சிசி-க்கு மேல் மோட்டார்சைக்கிளை வாங்கவே விரும்புகின்றனர்.

விற்பனையில் தொடர்ந்து கெத்து காட்டி கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!! 150-200சிசி -யில் முதலிடம்!

இதற்கேற்ப இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் 150- 200சிசி -யில் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை கடந்த சில வருடங்களாக அறிமுகம் செய்து வருவதை பார்த்து கொண்டுதான் வருகிறோம். அத்தகைய பைக்குகள் என்னென்ன? அவை கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன? என்பதை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

விற்பனையில் தொடர்ந்து கெத்து காட்டி கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!! 150-200சிசி -யில் முதலிடம்!

150- 200சிசி பைக்குகள் பிரிவில் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்று பார்த்தால், அது பஜாஜ் ஆட்டோ தான். புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் இந்த நிறுவனத்தின் 150சிசி, 180சிசி, என்எஸ்125 & என்எஸ்160, என்எஸ்200, ஆர்எஸ்200 உள்ளிட்ட பல்சர் பைக்குகள் 150- 200சிசி பிரிவில் சந்தைப்படுத்தப்படுகின்றன.

விற்பனையில் தொடர்ந்து கெத்து காட்டி கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!! 150-200சிசி -யில் முதலிடம்!

இவை மொத்தமாக கடந்த டிசம்பர் மாதத்தில் 34,445 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே இதற்கு முந்தைய 2021 நவம்பர் மாதத்தில் வெறும் 18,958 பல்சர் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பஜாஜ் பல்சர் 150- 200சிசி பைக்குகள் விற்பனை எண்ணிக்கை கடந்த மாதத்தில் சுமார் 81.69% அதிகரித்துள்ளது.

விற்பனையில் தொடர்ந்து கெத்து காட்டி கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!! 150-200சிசி -யில் முதலிடம்!

இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி பிராண்ட் உள்ளது. அப்பாச்சி பிராண்டில் இருந்து 150- 200சிசி -யில் அப்பாச்சி ஆர்டிஆர்160, ஆர்டிஆர்160 4வி, சமீபத்திய அறிமுகமான ஆர்டிஆர் 165ஆர்பி, ஆர்டிஆர்180 ஏபிஎஸ் & ஆர்டிஆர்200 4வி உள்ளிட்ட மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை மொத்தமாக கடந்த டிசம்பர் மாதத்தில் 23,533 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் தொடர்ந்து கெத்து காட்டி கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!! 150-200சிசி -யில் முதலிடம்!

ஆனால் 2021 நவம்பரில் இதனை காட்டிலும் 17.74% அதிகமாக 28,608 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு டிவிஎஸ் அப்பாச்சி இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. நவம்பர் உடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 5 ஆயிரம் அப்பாச்சி பைக்குகள் கடந்த மாதத்தில் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. யமஹா எஃப்.இசட் இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தை பிடித்துள்ளது.

விற்பனையில் தொடர்ந்து கெத்து காட்டி கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!! 150-200சிசி -யில் முதலிடம்!

எஃப்.இசட், எஃப்.இசட் எஸ், எஃப்.இசட் எக்ஸ் உள்ளிட்டவை 150- 200சிசி -யில் அடங்குகின்றன. இந்த 3 எஃப்.இசட் மாடல்களின் கடந்த மாத மொத்த விற்பனை எண்ணிக்கை 19,790 ஆகும். ஆனால் இதற்கு முந்தைய நவம்பர் மாதத்தில் வெறும் 7,624 150-200சிசி எஃப்.இசட் பைக்குகளையே யமஹா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் யமஹா எஃப்.இசட் பைக்குகளின் விற்பனை சுமார் 159.58% அதிகரித்துள்ளது.

விற்பனையில் தொடர்ந்து கெத்து காட்டி கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!! 150-200சிசி -யில் முதலிடம்!

விற்பனையில் யமஹா எஃப்.இசட் பைக்குகளை மிக நெருக்கமாக பின் தொடர்ந்தவாறு ஹோண்டா யூனிகார்ன் 160 மோட்டார்சைக்கிள் நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2021 டிசம்பரில் மொத்தம் 19,321 யூனிகார்ன் 160 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 15,555 ஆக இருந்தது. இதன்படி பார்க்கும்போது யூனிகார்ன் 160 மோட்டார்சைக்கிளின் விற்பனை மாதம்-மாதம் ஒப்பீடுகையில் 24.21% அதிகரித்துள்ளது.

விற்பனையில் தொடர்ந்து கெத்து காட்டி கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!! 150-200சிசி -யில் முதலிடம்!

இவை நான்கும் தான் 150சிசி- 200சிசி மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுபவை ஆகும். இதற்கு அடுத்துள்ளவை 10 ஆயிரம் யூனிட்களுக்கும் குறைவாக விற்பனை செய்யப்படுபவை ஆகும். இந்த வகையில் 5வது இடத்தில் இளைஞர்களின் கனவு பைக்காக விளங்கும் யமஹா ஆர்15 மாடல் 8,952 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.

விற்பனையில் தொடர்ந்து கெத்து காட்டி கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!! 150-200சிசி -யில் முதலிடம்!

யமஹா நிறுவனம் கடந்த ஆண்டின் இறுதியில் தான் புதிய தலைமுறை ஆர்15 பைக்குகளாக ஆர்15 வி4 மற்றும் ஆர்15எம் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து குறைவான விலையில் முந்தைய தலைமுறை ஆர்15 வி3 மாடலின் அடிப்படையிலான ஆர்15 எஸ் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இவற்றின் வருகையினால் யமஹா ஆர்15 பைக்குகளின் விற்பனை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

விற்பனையில் தொடர்ந்து கெத்து காட்டி கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் பைக்குகள்!! 150-200சிசி -யில் முதலிடம்!

ஏனெனில் 2021 நவம்பர் மாதத்திலும் 8 ஆயிரம் யூனிட்களுக்கும் அதிகமாக 8,392 ஆர்15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் ஆர்15-க்கு அடுத்து 6வது இடத்தில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிள் உள்ளது. இந்தியாவின் மலிவான அட்வென்ச்சர் பைக்காக விளங்கும் இதனை கடந்த மாதத்தில் மொத்தம் 2,535 யூனிட்கள் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது.

Most Read Articles
English summary
Top 10 motorcycles 150cc 200cc dec 2021 bajaj pulsar leads
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X