Just In
- 9 hrs ago
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- 10 hrs ago
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- 21 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 24 hrs ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
Don't Miss!
- News
கல்லூரி சுவர் தரமில்லாமல் விழுந்ததாக வீடியோ எடுத்த எம்எல்ஏ மீது வழக்கு பதிவு: உ.பி. போலீஸ் நடவடிக்கை
- Finance
டெஸ்லா கார்கள் உளவு பார்க்கிறதா.. சீனா-வின் புதிய கட்டுப்பாடு..!! - வீடியோ
- Movies
இத்தனை நாளா இஸ்ரோ மறைச்சு வச்சிடுச்சோ...மாதவனை கிண்டல் செய்யும் டி.எம்.கிருஷ்ணா
- Technology
WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!
- Sports
ரஞ்சி கோப்பையில் புதிய வரலாறு.. 41 முறை சாம்பியன் மும்பை தோல்வி.. 23 ஆண்டுகள் ம.பி அணியின் கனவு கதை
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா முழுவதும் விற்பனையான ஸ்கூட்டர்களின் பட்டியல் குறித்த விபரங்களைக் கீழே காணுங்கள்

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஓலா, ஒகினாவா, என பல நிறுவனங்கள் தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையை அதிகரித்துள்ளன. இது பெட்ரோல் ஸ்கூட்டர்களின் விற்பனையை நேரடியாகப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரல் மாத பெட்ரோல் ஸ்கூட்டர்கள் விற்பனை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது பெட்ரோல் ஸ்கூட்டர்கள் அதிக செலவு மற்றும் பராமரிப்பு அதிகம். குறிப்பாக பெட்ரோலின் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் பலர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரும்புகின்றனர். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் இந்தியாவில் மொத்தம் 3,43,345 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2021 ஏப்ரல் மாதம் இதன் விற்பனை 2,69.477 ஆக இருந்தது. அதாவது ஒட்டு மொத்த செக்மெண்டும் ஒரே வருடத்தில் 25.52 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையான டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் தான். இது மொத்தம் 1,63,357 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.

இது கடந்த 2021 ஏப்ரலில் 1,09,627 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்தன.இது 48.94 சதவீத வளர்ச்சியாகும். தற்போது இந்த ஸ்கூட்டர் இந்த மார்கெட்டில் 47.17 சதவீத பங்கைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் வேறு எந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்களும் விற்பனையில் 1 லட்சத்தைத் தாண்ட வில்லை.

இது கடந்த 2021 ஏப்ரலில் 1,09,627 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்தன.இது 48.94 சதவீத வளர்ச்சியாகும். தற்போது இந்த ஸ்கூட்டர் இந்த மார்கெட்டில் 47.17 சதவீத பங்கைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் வேறு எந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்களும் விற்பனையில் 1 லட்சத்தைத் தாண்ட வில்லை.

இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருப்பது டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர்தான். இது கடந்த ஏப்ரல் மாதம் ட்டுமு் 60,957 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெறும் 25,570 ஸ்கூட்டர்கள்கள் விற்பனையானது. ஒரே ஆண்டில் இந்த ஸ்கூட்டர் 138.9 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

இந்நிறுவனம் ஐக்யூப் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் குறைந்தபட்சம் 75 கி.மீ முதல் அதிகபட்சம் 140 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. ஜூபிட்டர் ஸ்கூட்டரை பொருத்தவரை மார்கெட்டில் 17.6 சதவீத பகை வைத்துள்ளது.

இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் சுஸூகி ஆஸஸ் ஸ்கூட்டர் உள்ளது. இது மொத்தம் 32.932 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 53,285 ஆக விற்பனையிருந்தது தற்போது 38.20 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. இது இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய சருக்கலாகப் பார்க்கப்படுகிறது.

பட்டியலில் 4வது இடத்தில் டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர் இருக்கிறது. இது ஒரே மாதத்தில் மொத்தம் 25,267 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இதே ஸ்கூட்டர் மொத்தம் 19,959 ஸ்கூட்டர்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது இதன் விற்பனை 26.59 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் 7.30 சதவீத மார்கெட் பங்கை வைத்துள்ளது.

அடுத்த இடத்தில் ஹோண்டா டியோ ஸ்கூட்டர் இருக்கிறது. இது மொத்தம் 16,033 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்தது. அதுவே கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்த விற்பனை 17,269 ஆக இருந்தது. ஓராண்டிற்கு விற்பனை 7.16 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதற்கு அடுத்ததாக இருப்பது ஹீரோ பிளஷர் ஸ்கூட்டர் இதுவும் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 13,303 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இது 18,298 ஆக இருந்தது. ஒரே ஆண்டில் 32.76 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

பட்டியலில் அடுத்த இடத்தில் சுஸூகி நிறுவனத்தின் அவினிஸ் ஸ்கூட்டர் உள்ளது. இது இந்தாண்டு தான் அறிமுகமாகியுள்ளது. தற்போது ஒரே மாதத்தில் 11,078 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அடுத்த இடத்தில் சுஸூகி பர்க் மேன் ஸ்கூட்டர் உள்ளது. இது மொத்தம் 9,088 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டை விட இது 11.45 சதவீதம் வளர்ச்சியாகும்

பட்டியலில் 9வது இடத்தில் ஹீரோ டெஸ்டினி125 ஸ்கூட்டர் உள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 8,981 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இது 9,121 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இந்தாண்டு விற்பனையில் 1.53 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

இந்த பட்டியலில் கடைசியாக 10வது இடத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் பெப் பிளஸ் ஸ்கூட்டர் இருக்கிறது. இது மொத்தம் 6329 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இது 8143 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்தன. விற்பனையில் 22.28 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.
-
மாருதி ஆல்டோ புதிய அவதாரத்தில் விற்பனைக்கு வரப்போகுது... அது மட்டுமா? இன்னும் நிறைய இருக்கு!
-
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்து சம்பவம், ப்யூர் இவி, பூம் மோட்டார்ஸ் -ஐ தொடர்ந்து ஓலாவிற்கு அரசு நோட்டீஸ்!
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் மின்சார கார்! அட இந்த காருக்கா இப்படி ஒருநிலைமை ஆகியிருக்கு?