கஸ்டமர்ஸ் கைகளுக்கு செல்ல துவங்கிய டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!! நீங்களும் புக் செய்யலாம்!

டோர்க் மோட்டார்ஸ் அதன் க்ராடோஸ்-ஆர் எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரிகளை அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. இதுகுறித்தும், இந்த எலக்ட்ரிக் பைக் குறித்தும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கஸ்டமர்ஸ் கைகளுக்கு செல்ல துவங்கிய டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!! நீங்களும் புக் செய்யலாம்!

எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாடு முழுவதும் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். இருசக்கர வாகனங்களை பொறுத்தவரையில், ஸ்கூட்டர்களை பெரும்பாலானோர் எலக்ட்ரிக்கில் தேர்வு செய்கின்றனர்.

கஸ்டமர்ஸ் கைகளுக்கு செல்ல துவங்கிய டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!! நீங்களும் புக் செய்யலாம்!

இதனாலேயே சந்தையில் விற்பனையில் இருக்கும் எலக்ட்ரிக் பைக்குகளின் எண்ணிக்கை என்று பார்த்தால் குறைவுதான். ஆனால் இந்த நிலை இன்னும் கொஞ்ச மாதங்களுக்கு மட்டுமே. ஏனெனில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களையும் தயாரிக்க பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் துவங்கிவிட்டன. அத்தகைய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஒன்றுதான் டோர்க் மோட்டார்ஸ்.

கஸ்டமர்ஸ் கைகளுக்கு செல்ல துவங்கிய டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!! நீங்களும் புக் செய்யலாம்!

புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் இந்த நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக்குகளாக க்ராடோஸ் (KRATOS®) மற்றும் க்ராடோஸ்-ஆர் (KRATOS®-R) மாடல்களை கடந்த சில வருடங்களாக வடிவமைத்தும், சோதனைகளில் உட்படுத்தியும் வந்தது. இந்த நிலையில் டோர்க் க்ராடோஸ் பைக்குகளின் டெலிவிரி பணிகள் புனேவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன.

கஸ்டமர்ஸ் கைகளுக்கு செல்ல துவங்கிய டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!! நீங்களும் புக் செய்யலாம்!

தற்போதைக்கு இந்த எலக்ட்ரிக் பைக்குகளை புனேவில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே டெலிவிரி செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த நினைவுக்கூரத்தக்க நிகழ்வை குறித்து டோர்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வும், இயக்குனருமான கபில் ஷெல்கே கருத்து தெரிவிக்கையில், "க்ராடோஸ்-ஆர் இன் முதல் தொகுப்பை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

கஸ்டமர்ஸ் கைகளுக்கு செல்ல துவங்கிய டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!! நீங்களும் புக் செய்யலாம்!

கடந்த சில மாதங்கள் டார்க் குழுவிற்கு முழுவதும் பரபரப்பாக இருந்தது. உற்பத்தி குழுக்கள் தூக்கமில்லாது இரவுகளிலும் விநியோக சங்கிலி இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கும், புனேவில் க்ராடோஸ்-ஆர் இன் விநியோகத்தை தொடங்குவதற்கும் நீண்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. எங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற பொறுமை, நம்பிக்கை மற்றும் ஆதரவால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கஸ்டமர்ஸ் கைகளுக்கு செல்ல துவங்கிய டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!! நீங்களும் புக் செய்யலாம்!

எங்கள் பிராண்டின் மீது காட்டப்படும் இத்தகைய ஒப்பற்ற நம்பிக்கை, எங்களை தொடர்ந்து வழிநடத்தி, எல்லா தடைகளையும் நிச்சயமற்ற நிலைகளையும் கடந்து வாடிக்கையாளர்களின் ரைடிங் பயணத்தில் மகிழ்ச்சியை கொண்டுவருவதில் எங்களை உத்வேகப்படுத்துகிறது" என்றார். டோர்க் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் க்ராடோஸ் மற்றும் க்ராடோஸ்-ஆர் எலக்ட்ரிக் பைக்குகளை கடந்த 2022 ஜனவரி 26ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

கஸ்டமர்ஸ் கைகளுக்கு செல்ல துவங்கிய டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!! நீங்களும் புக் செய்யலாம்!

அறிமுகத்தில் இருந்து, அட்டகாசமான தோற்றத்தால் வாடிக்கையாளர்கள் பலரை வெகுவாக கவர்ந்த இந்த எலக்ட்ரிக் பைக்குகளுக்கு எதிர்பார்த்தப்படி முன்பதிவுகள் குவிய துவங்கின. இதில் க்ராடோஸ் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,22,500 (மானியங்கள் கழித்து) ஆகவும், க்ராடோஸ்-ஆர் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,37,500 ஆகவும் (மானியங்கள் கழித்து) நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கஸ்டமர்ஸ் கைகளுக்கு செல்ல துவங்கிய டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!! நீங்களும் புக் செய்யலாம்!

இந்த எலக்ட்ரிக் பைக்குகளை வெள்ளை, நீலம், சிவப்பு மற்றும் கருப்பு என 4 விதமான நிறத்தேர்வுகளில் வாங்கலாம். ஆனால் தற்போதைக்கு வெள்ளை நிறத்தேர்வில் மட்டுமே க்ராடோஸ்-ஆர் எலக்ட்ரிக் பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டோர்க் நிறுவனம் வழங்கி வருகிறது. மற்ற நிறத்தேர்வுகளில் இந்த பைக் வரும் மாதங்களில் டெலிவிரி செய்யப்படலாம்.

கஸ்டமர்ஸ் கைகளுக்கு செல்ல துவங்கிய டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!! நீங்களும் புக் செய்யலாம்!

விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த எலக்ட்ரிக் பைக்குகளை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கமான www.torkmotors.com -இல் முன்பதிவு செய்து கொள்ளலாம். பஜாஜ் ஆட்டோவை போல் டோர்க் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் உற்பத்தி தொழிற்சாலை ஆனது புனேவில் சாகான் பகுதியில்தான் அமைந்துள்ளது. இங்கு அடுத்த 2023ஆம் ஆண்டில் இருந்து மாதத்திற்கு 3500-4000 பைக்குகளை தயாரிக்க டோர்க் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

கஸ்டமர்ஸ் கைகளுக்கு செல்ல துவங்கிய டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!! நீங்களும் புக் செய்யலாம்!

இதுகுறித்து மேலும் பேசிய கபில், எங்களது பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழைய நாங்கள் இப்போது தயாராக உள்ளோம், அங்கு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் மட்டுமே எங்கள் கவனம் இருக்கும். எங்களின் தற்போதைய அமைப்பிற்கு ஏற்ப மாதத்திற்கு 200 பைக்குகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்வதே எங்களின் தற்போதைய இலக்கு.

கஸ்டமர்ஸ் கைகளுக்கு செல்ல துவங்கிய டோர்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!! நீங்களும் புக் செய்யலாம்!

மேலும், எங்களின் சாகான் தொழிற்சாலை சீரான வேகத்தில் முன்னேறி வருகிறது. வெளியீட்டின்போது அறிவித்தப்படி மற்ற நகரங்களுக்கு எங்கள் கவனத்தை மாற்றுவோம்" என தெரிவித்துள்ளார். டோர்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெயர் முதன்முதலாக 2006இல் பதிவு செய்து கொள்ளப்பட்டது. இதுவரையில் டோர்க் மோட்டார்ஸ் நிறுவனம் 50க்கும் அதிகமான வடிவமைப்புகளுக்கு காப்புரிமையை பெற்றுள்ளது.

Most Read Articles
English summary
Tork kratos electric bike delivery starts in pune
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X