புதுசா எலெக்ட்ரிக் வண்டி தொழிற்சாலையை திறக்க போறாங்க... கெத்து காட்டும் பிரபல நிறுவனம்!

இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் டூ வீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக டார்க் மோட்டார்ஸ் உள்ளது. இது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் வெகு விரைவில் புதிய தொழிற்சாலை ஒன்றை திறக்க உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சகான் பகுதியில் இந்த தொழிற்சாலை திறக்கப்படுகிறது.

இந்த புதிய தொழிற்சாலை கிட்டத்தட்ட 95 சதவீதம் தயாராகி விட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த தொழிற்சாலை செயல்பட தொடங்கும். டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான கபில் ஷெல்கே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த புதிய தொழிற்சாலை 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி திறனை ஒரு மாதத்திற்கு 4 ஆயிரம் - 5 ஆயிரம் டூ வீலர்கள் என்ற அளவில் அதிகரிப்பதற்கு இந்த புதிய தொழிற்சாலை உதவி செய்யும்.

புதுசா எலெக்ட்ரிக் வண்டி தொழிற்சாலையை திறக்க போறாங்க... கெத்து காட்டும் பிரபல நிறுவனம்!

டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தொழிற்சாலையில் ஒரு மாதத்திற்கு 500 எலெக்ட்ரிக் டூ வீலர்களை மட்டுமே தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அடுத்த வருடம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தனது எலெக்ட்ரிக் டூ வீலர் விற்பனையை தொடங்குவதற்கு டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே டிமாண்ட் அதிகரிக்கும் என டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதன் காரணமாகவே உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலையை டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் திறக்கவுள்ளது.

டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் புனே நகரில் தனது முதல் அனுபவ மையத்தை திறந்தது. அத்துடன் வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் தானே உள்பட 7 நகரங்களில் அனுபவ மையங்களை திறப்பதற்கும் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2022ம் ஆண்டில் க்ராட்டோஸ் எலெக்ட்ரிக் பைக்கின் டெலிவரி பணிகளை தொடங்கியது.

தற்போது வரை புனே நகரில் மட்டும் சுமார் 250 க்ரட்டோஸ் எலெக்ட்ரிக் பைக்குகள் டெலிவரி செய்யப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மும்பை நகரிலும் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் டெலிவரி பணிகளை தொடங்கி உள்ளது. மேலும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளுக்காக நடமாடும் சர்வீஸ் சென்டர் வாகனங்களை அதிக அளவில் களம் இறக்கி உள்ளதாகவும் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் வீடுகளிலேயே எலெக்ட்ரிக் டூ வீலர்களை சர்வீஸ் செய்யும் நோக்கத்தில் இந்த நடமாடும் சர்வீஸ் வாகனங்கள் அறிமுகம் செய்யப்படுள்ளன.

இதற்கிடையே தனது எலெக்ட்ரிக் டூ வீலர்களுக்காக பாஸ்ட் சார்ஜர்களை பொருத்தும் பணிகளையும் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது. ஆனால் தற்போதைய நிலையில் இந்த பணிகள் சோதனை கட்டத்தில் மட்டுமே உள்ளன. முதலில் புனே நகரை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த பாஸ்ட் சார்ஜர்களை பொருத்துவதற்கு டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பின் நாட்களில் மும்பை - புனே நெடுஞ்சாலையில் இந்த சார்ஜர்களை பொருத்துவதற்கான முக்கிய இடங்களையும் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்து வைத்துள்ளது.

Most Read Articles
English summary
Tork motors to open new manufacturing plant soon
Story first published: Thursday, December 1, 2022, 8:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X