பைக்கிலேயே லே, லடாக் டூர் போறீங்களா? இந்த டயர் அதுக்காவே ஸ்பெஷலா செஞ்சிருக்காங்க..எந்த பைக்கிற்கு செட் ஆகும்?

அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள 150-500 சிசி பைக்குகளுக்கான அட்வெஞ்சர் டூரிங் மற்றும் ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ் பைக்களுக்கான 2 புதிய டயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த முழு தகவல்களை காணலாம்.

பைக்கிலேயே லே லடாக் டூர் போறீங்களா . . . இந்த டயர் அதுக்காவே ஸ்பெஷலா வடிவமைச்சிருக்காங்க . . . எந்த பைக்கிற்கு எல்லாம் பொருந்தும் தெரியுமா . . .

இந்தியாவில் வாகனங்களுக்கான டயர் தயாரிப்பில் முன்னணியில் இருப்பது அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் பல தரப்பட்ட டயர்களை தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்கிறது. இந்நிறுவனம் தற்போது தனது தயாரிப்பில் புதிதாக 2 டயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. டிரம்ப்ளர் ரேஞ்சில் என்ட்யூரோ

ஆஃப்ரோடு, மற்றம் என்ட்யூரோ

ஸ்டிரீட் ஆகிய டயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பைக்கிலேயே லே லடாக் டூர் போறீங்களா . . . இந்த டயர் அதுக்காவே ஸ்பெஷலா வடிவமைச்சிருக்காங்க . . . எந்த பைக்கிற்கு எல்லாம் பொருந்தும் தெரியுமா . . .

இந்த டயர்களை அந்நிறுவனம் இந்தியாவில் உள்ள பிரிமியம் பைக்குகளான 150-500 சிசி பைக்குகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்போர்ட் மற்றும் டூரிங் ரக பைக்குகளுக்கு சிறந்த டயராகும். இந்தியாவில் அண்வெஞ்சர் டூரிங், க்ரூஸியர், ஸ்டிரீட் ஸ்போர்ட்ஸ் ஆகிய ரக பைக்குகள் இந்தியாவில் ஒட்டு மொத்த இருசக்கர வாகன மார்கெட்டில் 20 சதவீதம் இருக்கிறது.

பைக்கிலேயே லே லடாக் டூர் போறீங்களா . . . இந்த டயர் அதுக்காவே ஸ்பெஷலா வடிவமைச்சிருக்காங்க . . . எந்த பைக்கிற்கு எல்லாம் பொருந்தும் தெரியுமா . . .

அப்பல்லோ நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த ட்ரம்ப்ளர் டயர்கள் இரண்டு விதமான பேட்டன்களில் வருகிறது. அப்பல்லோ ட்ரம்ப்ளர் எக்ஸ்ஆர் டயர் அட்வெஞ்சர் டூரிங்கிற்காக 70:30 என்ட்யூரோ ஆஃப்ரோடு டயராகவும், அப்பல்லோ ட்ரம்ப்ளர் எஸ்டி ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கான 80:20 எண்ட்யூரோ ஸ்டிரீட் டயர்களாவும் அறிமுகமாகியுள்ளது.

பைக்கிலேயே லே லடாக் டூர் போறீங்களா . . . இந்த டயர் அதுக்காவே ஸ்பெஷலா வடிவமைச்சிருக்காங்க . . . எந்த பைக்கிற்கு எல்லாம் பொருந்தும் தெரியுமா . . .

அப்பல்லோ நிறுவனம் இந்த டயர்களுக்கான ஆய்வு மற்றும் வடிவமைப்பு பணிகளை சென்னையிலுள்ள தனது ஆய்வு மையத்திலும் இந்த டயர்களை தயாரிக்கும் பணிகளை குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ளத் தனது உற்பத்தி ஆலையிலும் செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்த டயர்களை நேற்று பெங்களூருவில் அறிமுகப்படுத்தியது.

பைக்கிலேயே லே லடாக் டூர் போறீங்களா . . . இந்த டயர் அதுக்காவே ஸ்பெஷலா வடிவமைச்சிருக்காங்க . . . எந்த பைக்கிற்கு எல்லாம் பொருந்தும் தெரியுமா . . .

அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் கருத்துக்களைக் கேட்ட பின்பு புதிதாக தனது டயர் தயாரிப்பில் அட்வெஞ்சர் டூரிங் என்ற ஒரு புதிய செக்மெண்டையே உருவாக்கியுள்ளது. அதில்தான் அப்பல்லோ ட்ரம்ப்ளம் எக்ஸ்ஆர் என் டயரை உருவாக்கியுள்ளது. இந்த டயர் தற்போது உள்ள ராயல் என்ஃபீல்டு கிளாசிக், யமஹா எஃப்இசட் சீரீஸ், சுஸூகி கிக்ஸர் மற்றும் இன்ட்ரூடர், கேடிஎம் சிரீஸ், பஜாஜ் டோமினார் மற்றும் பிஎம்டபிள்யூஜி310 ஆர் ஆகிய வாகனங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

பைக்கிலேயே லே லடாக் டூர் போறீங்களா . . . இந்த டயர் அதுக்காவே ஸ்பெஷலா வடிவமைச்சிருக்காங்க . . . எந்த பைக்கிற்கு எல்லாம் பொருந்தும் தெரியுமா . . .

இந்த அப்பல்லோ எக்ஸ்ஆர் டயர் பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டயர்களின் சைடு வால் பகுதியில் இது அட்வெஞ்சர் டயர் என்பதைக் குறிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள அட்வெஞ்சர் ரைடிங் பகுதிகளை எல்லாம் இந்த டயரில் குறிப்பிட்டுள்ளது. இதன் நோக்கம் இந்த டயரை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட இந்த இடத்திற்கு எல்லாம் டூரிங் செல்ல வண்டும் என்பது தான். இது மட்டுமல்லசைடு வால் முழுவதும் அட்வெஞ்சர் டூரிங்கை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

பைக்கிலேயே லே லடாக் டூர் போறீங்களா . . . இந்த டயர் அதுக்காவே ஸ்பெஷலா வடிவமைச்சிருக்காங்க . . . எந்த பைக்கிற்கு எல்லாம் பொருந்தும் தெரியுமா . . .

இந்த டயரில் இருக்கும் வித்தியாசமான த்ரெட் பேட்டர்ன் ஆன் ரோடு ஹேண்டிலிங்கிற்கு சிறப்பாக உதவி செய்கிறது. இது அட்வெஞ்சர் டூரிங்கிற்கு மட்டுமல்லாமல் ஆன்ரோட்டிலும் சொகுசான அனுபவத்தைத் தரும். இதன் பெரிய சைஸ் த்ரெட் பிளாக் மற்றும் ஸ்டீல் ரேடியல் டெக்னாலஜி இந்த பைக்கிற்கான ஸ்டெக்சரல் ரெஸிஸ்டென்ஸை அதிகப்படுத்துகிறது. இது அதிகமான வேகத்திலும் ஸ்டேபிளான அனுபவத்தைத் தருகிறது.

பைக்கிலேயே லே லடாக் டூர் போறீங்களா . . . இந்த டயர் அதுக்காவே ஸ்பெஷலா வடிவமைச்சிருக்காங்க . . . எந்த பைக்கிற்கு எல்லாம் பொருந்தும் தெரியுமா . . .

இதனாலேயே இந்த டயர் அனைத்து விதமான டெரைன்களுக்கும் ஏற்ற டயர் என அந்நிறுவனம் சொல்கிறது. இந்த டயரில் த்ரேட்களுக்கு நடுவே கற்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க ஸ்டோன் எலெக்டர் முறையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஓப்பன் க்ராஸ் க்ரூவ்ஸ் ஆஃப் ரோடிங் திறனை அதிகப்படுத்துகிறது. இதனால் அட்வெஞ்சர் ரைடிங்கிற்கு இது சிறந்த பைக்காக இருக்கும்.

பைக்கிலேயே லே லடாக் டூர் போறீங்களா . . . இந்த டயர் அதுக்காவே ஸ்பெஷலா வடிவமைச்சிருக்காங்க . . . எந்த பைக்கிற்கு எல்லாம் பொருந்தும் தெரியுமா . . .

அப்பல்லோ ட்ரம்ப்ளம் எஸ்டி டயரை பொருத்தவரை இதன் வடிவமைப்பு சிட்டி பயணத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டிரீட் கல்சர் பைக்கிங் இன்ஸ்பெயர் செய்யப்பட்டு இந்த பைக்கின் சைடு வால்கள் எல்லாம் கிராஃப்டி ஆர்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த டயர்கள் மார்கெட்டில் உள்ள பஜாஜ் பல்சர், டிவிஎஸ் அப்பாச்சி சீரீஸ், யமஹா ஃபேஸர் மற்றும் எம்டி 15 ஆகிய பைக்குகளுக்கு ஏற்றது.

பைக்கிலேயே லே லடாக் டூர் போறீங்களா . . . இந்த டயர் அதுக்காவே ஸ்பெஷலா வடிவமைச்சிருக்காங்க . . . எந்த பைக்கிற்கு எல்லாம் பொருந்தும் தெரியுமா . . .

இந்த அப்பல்லோ ட்ரம்ப்ளர் எஸ்டி டயர்கள் ஈரபதத்திலும் கிரிப்பாக இருப்பது மற்றும் சிட்டி ரைடிங்கிற்கும் கிரிப்பாக இருக்கும் வகையில் இதன் த்ரெட் பேட்டன்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் அனைத்து விதமான வெப்ப நிலையிலும் ஆஃப் ரோடிங் செல்லும் விதத்தில் பெரிய சென்ட்ரல் பிளாக் மற்றும் ஃபூட் பிரிண்ட் ஏரியா ஆகிய வழங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரம்ப்ளம் எஸ்டி சூப்பிரியர் கிரிப், குறைந்த ரோலிங் நாய்ஸ் வேகத்திலும் ஸ்டேபிளாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பைக்கிலேயே லே லடாக் டூர் போறீங்களா . . . இந்த டயர் அதுக்காவே ஸ்பெஷலா வடிவமைச்சிருக்காங்க . . . எந்த பைக்கிற்கு எல்லாம் பொருந்தும் தெரியுமா . . .

அப்பல்லோ டயர் நிறுவனம் இருசக்கர வாகன செக்மெண்டிற்கும் லேட்டாக வந்தாலும் தற்போது ஒட்டு மொத்த மார்கெட்டில் 10 சதவீதத்தை பிடித்துள்ளது. தற்போது பிரிமியம் பைக்குகளுக்கான பிரத்தியேகமான டயர்களை அறிமுகப்படுத்தி இருசக்கர வாகனத்தில் உள்ள 20 சதவீத வாடிக்கையாளர்களை டார்கெட் செய்துள்ளது. இதன் மூலம் தனது விற்பனையை அதிகப்படுத்த முயற்சிக்கிறது.

Most Read Articles
English summary
Trampler series tyres launched by apollo for Indian premium bikes
Story first published: Thursday, September 15, 2022, 10:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X