டிரையம்ப் உருவாக்கும் டிஇ-1 எலக்ட்ரிக் பைக்!! இறுதிக்கட்ட சோதனைகளில்...

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை உலகம் முழுவதிலும் விரிவடைந்துவரும் நிலையில், டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் டிஇ-1 என்கிற பெயரில் அதன் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளிற்கான கான்செப்ட் மாதிரியை வெளியீடு செய்துள்ளது. இந்த வகையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள டிரையம்ப் இ-பைக்கை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டிரையம்ப் உருவாக்கும் டிஇ-1 எலக்ட்ரிக் பைக்!! இறுதிக்கட்ட சோதனைகளில்...

பயணிகள் வாகனங்களை பொறுத்தவரையில், எலக்ட்ரிக் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை பல்வேறு நாட்டு சந்தைகளில் நல்லப்படியாக இருந்து வருகிறது. ஆனால் எலக்ட்ரிக் பைக்குகளை வாங்குவோர் என்று பார்த்தால் சற்று குறைவுதான். இதற்கு, எலக்ட்ரிக் பைக்குகள் அதிகளவில் விற்பனையில் இல்லாததை முக்கிய காரணமாக சொல்லலாம்.

டிரையம்ப் உருவாக்கும் டிஇ-1 எலக்ட்ரிக் பைக்!! இறுதிக்கட்ட சோதனைகளில்...

உலகின் முன்னணி மோட்டார்சைக்கிள் பிராண்டாக விளங்குபவை கூட தற்சமயம் தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் பணியில்தான் ஈடுப்பட்டு வருகின்றன. இந்த வகையில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனமும் தனது புதிய எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்க துவங்கியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே தற்போது இந்த நிறுவனத்தில் டிஇ-1 என்கிற பெயரில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.

டிரையம்ப் உருவாக்கும் டிஇ-1 எலக்ட்ரிக் பைக்!! இறுதிக்கட்ட சோதனைகளில்...

கிட்டத்தட்ட முற்றிலுமாக வடிவமைப்பு பணிகளை நிறைவு செய்ததாக காட்சியளிக்கும் டிஇ-1 கான்செப்ட் மாதிரி டிரையம்ப் மோட்டார்சைக்கிள் பிராண்டிற்கும், சுருக்கமாக WAE எனப்படும் வில்லியம்ஸ் அதிநவீன பொறியியல் நிறுவனத்திற்கும் இடையே ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டணியில் தான் டிஇ-1 எலக்ட்ரிக் பைக்கில் பொருத்தப்பட உள்ள முற்றிலும் புதிய எலக்ட்ரிக் பவர்ட்ரெயினும் உருவாக்கப்பட உள்ளது.

டிரையம்ப் உருவாக்கும் டிஇ-1 எலக்ட்ரிக் பைக்!! இறுதிக்கட்ட சோதனைகளில்...

இதன் மூலமாக உருவாகும் புதிய பேட்டரி தொகுப்பு எடை குறைவானதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். டிஇ-1 பைக்கின் பேட்டரி & எலக்ட்ரிக் மோட்டார் செயல்படுதிறனிலும், ரேஞ்சிலும் புதிய உச்சத்தை தொடும் என வில்லியம்ஸ் அதிநவீன பொறியியல் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டிரையம்ப்பின் முதன்மையான வடிவமைப்பு நேரலை சோதனை பிரோகிராமிலும் விரைவில் நுழைய உள்ளது.

டிரையம்ப் உருவாக்கும் டிஇ-1 எலக்ட்ரிக் பைக்!! இறுதிக்கட்ட சோதனைகளில்...

இந்த புதிய டிரையம்ப் எலக்ட்ரிக் பைக்கின் எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பில் புதிய தலைக்கீழான கான்செப்ட் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கான்செப்ட் ஆனது மோட்டாரின் சிலிக்கான்-கார்பைட் ஆற்றல் நிலைகளை திருத்துவதன் மூலமாக பல்வேறு நிலைகளில் அளவீடல்களை வழங்கக்கூடியதாக உள்ளது. அதாவது, சிலிக்கான்-கார்பைட் ஆற்றல் நிலைகளை வேறுப்படுத்துவதன் மூலம் இந்த தலைக்கீழ் கான்செப்ட்டை வெவ்வேறான விட்டம் கொண்ட மோட்டார்களில் பயன்படுத்தலாமாம்.

டிரையம்ப் உருவாக்கும் டிஇ-1 எலக்ட்ரிக் பைக்!! இறுதிக்கட்ட சோதனைகளில்...

இதன் வாயிலாக அதிகப்பட்சமாக சுமார் 500 கிலோவாட்ஸ் (670 பிஎச்பி) வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டாரை வடிவமைக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் டிரையம்ப் டிஇ-1 எலக்ட்ரிக் பைக் அதிகப்பட்சமாக 130 கிலோவாட்ஸ் (174 பிஎச்பி) இயக்க ஆற்றலை பெறக்கூடியதாகவே வடிவமைக்கப்பட உள்ளது.

டிரையம்ப் உருவாக்கும் டிஇ-1 எலக்ட்ரிக் பைக்!! இறுதிக்கட்ட சோதனைகளில்...

ஏற்கனவே கூறியதுதான், டிஇ-1 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நேரலை சோதனை பிரோகிராமில் 6 மாத காலத்திற்கு உட்படுத்தப்பட உள்ளது. இதற்கான இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் திட்டத்தின் 4ஆம் கட்டத்தினை டிரையம்ப் நிறுவனம் துவங்கியுள்ளது. இந்த 4ஆம் கட்ட சோதனைகளுக்கு பிறகே டிரையம்ப் டிஇ-1 எலக்ட்ரிக் பைக் இறுதிக்கட்ட பேனல்களையும், பெயிண்ட் தேர்வுகளையும் பெறும்.

டிரையம்ப் உருவாக்கும் டிஇ-1 எலக்ட்ரிக் பைக்!! இறுதிக்கட்ட சோதனைகளில்...

அத்துடன் நிலை-4 சோதனை முடிவுகளை பொறுத்தே இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கான பேட்டரி & மோட்டார் உள்ளிட்டவை வரையறை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஆதலால் தற்போதைக்கு டிஇ-1 எலக்ட்ரிக் பைக்கில் எத்தகைய எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி பொருத்தப்படும்? இதன் மூலமாக எத்தகைய ரேஞ்சை பெறலாம்? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள் இல்லை.

டிரையம்ப் உருவாக்கும் டிஇ-1 எலக்ட்ரிக் பைக்!! இறுதிக்கட்ட சோதனைகளில்...

இப்போதுதான் இந்த டிரையம்ப் எலக்ட்ரிக் பைக் வடிவமைப்பு பணிகளில் உள்ளதால், இது முழுவதுமாக வடிவமைக்கப்பட்டு, உலகளவில் வெளியீடு செய்யப்பட்டு, அதன்பின் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கு நிச்சயமாக இன்னும் பல ஆண்டுகளாகும். இந்தியாவில் அடுத்ததாக அறிமுகப்படுத்த இரு புதிய மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பு பணிகளில் பஜாஜ் ஆட்டோ உடன் இணைந்து டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.

டிரையம்ப் உருவாக்கும் டிஇ-1 எலக்ட்ரிக் பைக்!! இறுதிக்கட்ட சோதனைகளில்...

பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடியதாக மலிவான விலையில் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படும் இந்த புதிய டிரையம்ப் பைக்குகளின் வருகையை உறுதிப்படுத்தும் வகையிலான ஸ்பை படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி இருந்தன. இந்த படங்களின் மூலமாக புதிய இரு டிரையம்ப்-பஜாஜ் பைக்குகளும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைகளாக காட்சியளிக்க உள்ளதை அறிய முடிந்தது.

டிரையம்ப் உருவாக்கும் டிஇ-1 எலக்ட்ரிக் பைக்!! இறுதிக்கட்ட சோதனைகளில்...

இருப்பினும் இவற்றை வேறுப்படுத்தி காட்டும் விதமாக சில அம்சங்களை டிரையம்ப் நிறுவனம் வழங்க முயற்சிக்கும். இந்த புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிள்கள் முக்கியமாக ராயல் என்பீல்டின் பைக்குகளுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

Most Read Articles
மேலும்... #டிரையம்ப் #triumph
English summary
Triumph TE-1 Electric Motorcycle Pototype Revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X